உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ள ஓட்டை தடுக்க கைரேகை பதிவு அவசியம்

கள்ள ஓட்டை தடுக்க கைரேகை பதிவு அவசியம்

சென்னை: 'ஓட்டுப்பதிவின்போது, வாக்காளரின் கைரேகை பதிவை சரிபார்க்க வேண்டும்' என, சென்னையை அடுத்த திருவஞ்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்து குமார், இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: தேர்தல் நேரத்தில், சிலர் கள்ள ஓட்டு போடும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க, வாக்காளர் தன் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே, ஓட்டுப்பதிவு இயந்திரம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். அந்த வசதியை, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்படுத்துவதுடன், கைரேகை பதிவை கட்டாயமாக்க வேண்டும். இதன் வாயிலாக, கள்ள ஓட்டு போடுவது தடுக்கப்படும். சில ஓட்டுச்சாவடிகளில் முகவர்கள் மிரட்டப்பட்டு, கள்ள ஓட்டு பதிவு செய்யப்படுகின்றன. ஒருவரின் வாக்காளர் அடை யாள அட்டையை, ஓ.டி.பி., எனும் ஒருமுறை பயன்படும் குறியீடு இன்றி, ரத்து செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டால், ஒவ்வொருவரும் நேர்மையாக தங்களின் ஓட்டை பதிவு செய்ய வழி ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gajageswari
அக் 29, 2025 17:18

கடந்த 40வருடங்களாக கள்ள ஒட்டு என்பது இல்லை. வாக்காளர் பெயர் இல்லை என்ற புகார்கள் மட்டுமே வருகிறது


Ms Mahadevan Mahadevan
அக் 29, 2025 12:55

பயோ மெட்ரிக் ஒட்டர் ஐ டி அட்டை கொடுக்க வேண்டும்


Govi
அக் 28, 2025 10:29

ரேக தேஞ்சு போன கிழவன் கிழவி எப்படி போவாங்க


Ramesh Sargam
அக் 28, 2025 08:48

திருவஞ்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்து குமார் அவர்களின் நல்ல எண்ணத்தை பாராட்டுகிறேன். ஆனால் அவையெல்லாம் இந்தியாவில் எடுபடாது. தவறு செய்பவர்கள் அனைவரும் கட்சிக்காரர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடுபவர்கள்தான். மக்கள் அநேகமாக அந்த தவறை செய்யமாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை