உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏற்றியபோது அறுந்த கொடி: தே.மு.தி.க.,வினர் அப்செட்

ஏற்றியபோது அறுந்த கொடி: தே.மு.தி.க.,வினர் அப்செட்

சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த டிச., 28ல் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தை, அவ்வப்போது கருடன் வட்டமடித்து வருவதை, விஜயகாந்த் குடும்பத்தினர், நல்ல சகுனமாக பார்க்கின்றனர்.விஜயகாந்த் மறைவைத் தொடர்ந்து, அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தே.மு.தி.க., கொடி, 30 நாட்களுக்கு பின், நேற்று மீண்டும் ஏற்றப்பட்டது. பிரேமலதா கொடியை ஏற்றியபோது, பாதியில் கொடி அறுந்து விழுந்தது. இதையடுத்து, கம்பத்தை தொட்டுக் கும்பிட்டுவிட்டு, மீண்டும் பிரேமலதா கொடியை ஏற்றினார். இதனால், அங்கு கூடியிருந்த தே.மு.தி.க., தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை