உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் மூவருக்கு ஆயுள் சிறை

முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் மூவருக்கு ஆயுள் சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., - கே.சுதர்சனம்; பெரியபாளையம் அருகே உள்ள தானா குளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 2001- முதல், 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில், சிறிது காலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

பரபரப்பு

கடந்த 2005 ஜனவரி 9ம் தேதி தன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. சுதர்சனத்தின் மகன் விஜயகுமார், சதீஷ்குமார் ஆகியோரை கட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கியது. வீட்டின் மாடியில் துாங்கிக் கொண்டிருந்த சுதர்சனம், சத்தம் கேட்டு கீழே வந்த போது, அந்த கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். பின், அந்தக் கும்பல், சுதர்சனம் வீட்டில் இருந்த, 62 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம், தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பவாரியா கொள்ளையர்களான, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் மற்றும் ராகேஷ், அசோக், ஜெயில்தர் சிங் ஆகியோரை கைது செய்தனர். சிறையில் இருந்த ஓம்பிரகாஷ் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.இதையடுத்து, மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை, 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த நவ.,20ம் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளி என நீதிபதி எல். ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார்.

விடுவிப்பு

இந்த வழக்கில் இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார். இதன்படி, ஓம்பிரகாஷ், ஜெகதீஷ் மற்றும் ராகேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். ஜெயில்தர் சிங்கை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

m.arunachalam
நவ 24, 2025 21:04

கொலை நடந்தது உண்மை . கொள்ளை நடந்தது உண்மை. இதன் பின்னால் நேரம் , பணம் மற்றும் உழைப்பு செலவானது உண்மை. மீதி அவரவர் சிந்தனைக்கு . தெளிதல் நலம் .


Jayaraman Rangapathy
நவ 24, 2025 20:04

இவன் களுக்கு மரண தண்டனை தான் சரியான தீர்ப்பு. மேல் கோர்ட் அப்பீலும் கொடுக்கக்கூடாது


ஆரூர் ரங்
நவ 24, 2025 19:34

பேட்டரிவாளர் மாதிரி இவன்களுக்கும் பாராட்டும் விருந்தும் கிடைக்குமா?.


r ravichandran
நவ 24, 2025 20:28

கொடுத்தாலும் கொடுப்பார்கள்.


joe
நவ 24, 2025 18:50

கொலை குற்றத்திற்கு இது வெறும் சாதாரண தண்டனையே. குற்றவாளிகள் மறுபடியும் மறுபடியும் குற்றங்களை செய்து ஜாமீனில் வெளி வருவது சகஜமாகிவிட்டது எனவே கொலை குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 50ஆண்டுகால தண்டனை கொடுத்தால்தான் குற்றங்கள் நாட்டில் குறையும்.குற்றவாளிகள் நாட்டில் அதிகமாக உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். தண்டனையை அதிகப்படுத்தவேண்டும் .


SIVAKUMAR
நவ 24, 2025 18:01

கொலைக்குற்றத்திற்கு நீதி வழங்க இருபது வருடங்கள். விளங்கி விடும நமது நீதி


Santhakumar Srinivasalu
நவ 24, 2025 18:17

வாய்தா வாய்தா இதனால் தான் கால தாமதம் ஆகிறது!


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை