உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச ஆடு: கேட்டு வாங்கிய வேலுார் தி.மு.க., - எம்.பி.,

இலவச ஆடு: கேட்டு வாங்கிய வேலுார் தி.மு.க., - எம்.பி.,

வேலுார்: வேலுார் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டசபை தொகுதி, நாகல் பஞ்சாயத்தில் புதியதாக கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை, அமைச்சர் துரைமுருகன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சரின் மகனும், வேலுார் எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நாகல் பஞ்சாயத்தை சேர்ந்த, இரு பெண் குழந்தைகள் பெற்ற, 45 பெண்களுக்கு தலா இரண்டு ஆடுகளை, தன் சொந்த செலவில் பஞ்., தலைவர் பாலா சேட் வாங்கி கொடுத்தார். இவற்றை அமைச்சர் துரைமுருகன், அவர்களுக்கு வழங்கினார். அப்போது எம்.பி., கதிர் ஆனந்த், ''எனக்கும் இரு பெண்கள் குழந்தைகள் உள்ளனர். எனவே, எனக்கும் ஆடு வழங்க வேண்டும்,'' என்றார். பஞ்., தலைவர் சம்மதத்து, டன், இரு ஆடுகளை கதிர் ஆனந்துக்கு, அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sudarsan Ragavendran
செப் 23, 2024 19:36

வெட்கம் கேட்ட ஜென்மங்கள்


R.RAMACHANDRAN
செப் 23, 2024 07:30

தான தருமங்கள் என்பது உரியவர்களுக்கு மட்டுமே செய்ய வேண்டும். தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் செய்வது என்பது அதை வைத்து ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காகவே.


N.Purushothaman
செப் 23, 2024 07:29

கொடுக்கல் வாங்கல் எல்லாம் திருட்டு கும்பல் அவனுங்களுக்குள்ளேயே வச்சிக்குவானுங்க ....


karupanasamy
செப் 23, 2024 07:15

திராவிட மாடல்னா என்னான்னு இப்ப எல்லோருக்கும் சந்தேகமே இல்லாம வெளங்கிருச்சா?


Mani . V
செப் 23, 2024 06:25

சரியான காமெடி பீசுங்க.


Sathyanarayanan Sathyasekaren
செப் 23, 2024 06:14

கோடிக்கணக்கில் கொள்ளையடித்த சொத்து இருந்தாலும் இன்னும் இலவசத்திற்கு அலையும் கேடு கேட்ட புத்தி போகவில்லை. வெட்கக்கேடு.


Rajan
செப் 23, 2024 04:10

கருமம். பெண்களுக்கு என்று அறிவித்த திட்டம். அதுவும் யாரோ சொந்த காசு போட்டு வாங்கி கொடுக்கிறார். கொடுமை. சித்தாந்தத்தின் உதாரணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை