உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடி 5மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடி 5மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

திருநெல்வேலி:சுதந்திர தின விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் வரும் 13ம் தேதி முதல்15ம் தேதி வரை 50லட்சம் வீடுகளில் இல்லம் தோறும் தேசிய கொடி ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்ட பா.ஜ அலுவலகத்தில் மதுரை பாஜ பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரிங்கபெருமாள் கூறியதாவது:சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இல்லம் தோறும் தேசிய கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக அகில இந்திய அளவிலும், தமிழக அளவில் மாநில பொது செயலாளர் முருகானந்தம் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.இதுசம்பந்தமாக நெல்லையில் இன்று (நேற்று) நெல்லை, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின வரலாறை நினைவுபடுத்தும் வகையில் அனைத்து பகுதிகளிலும் பைக் பேரணி நடத்தப்படுகிறது. திருப்பூரில் வரும் ௧௩ம் தேதி மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கிறார்.மேலும், சுதந்திர தின விழிப்புணர்வு கருத்தரங்குகள், பள்ளி மாணவ, மாணவிகள் சுதந்திர போராட்ட தலைவர்களின் உருவ அணி வகுப்பு, மாறுவேட நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.தமிழகத்தில் 50 லட்சம் வீடுகளில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடி ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதனை ஒரு கோடியாக உயர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது தச்சை மண்டல் தலைவர் மலையரசன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை