உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்தை நிறுத்தி நகருக்குள் இறுதி ஊர்வலம்: கோவை போலீஸ் செயல் ஒரு தவறான முன்னுதாரணம்!

போக்குவரத்தை நிறுத்தி நகருக்குள் இறுதி ஊர்வலம்: கோவை போலீஸ் செயல் ஒரு தவறான முன்னுதாரணம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் நேற்று மரணம் அடைந்த தொடர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா உடல், ஊர்வலமாக கொண்டு செல்ல போலீசார் அனுமதி வழங்கியது, தவறான முன்உதாரணம் என்று பா.ஜ., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கோவையில் 1998ல் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. 58 பேர் உயிரிழந்தனர். 231 பேர் படுகாயம் அடைந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=17l6w6ll&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 'அல் உம்மா' என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அல் உம்மா அமைப்பின் நிறுவனர் பாஷா என்பவர் முக்கிய குற்றவாளி என்று அறிவித்து ஆயுள் தண்டனை விதித்தது. குண்டு வெடிப்பில் தொடர்புடைய வேறு பலரும் தண்டிக்கப்பட்டனர்.இந்நிலையில், முக்கிய குற்றவாளியான பாஷாவுக்கு, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரியில் ஜாமின் வழங்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மரணம் அடைந்தார்.அவரது உடல், இன்று உக்கடம் புல்லுக்காடு வீட்டில் இருந்து, வின்சென்ட் ரோடு, பெரிய கடை வீதி, குட்ஷெட் ரோடு, தேவாங்க பள்ளி ரோடு வழியாக பூமார்க்கெட் திப்பு சுல்தான் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. நான்கு கிலோமீட்டர் துாரத்துக்கு நடந்த இந்த ஊர்வலத்தில் இரு சக்கர வாகனங்களில் சென்ற ஏராளமானோர் பங்கேற்றனர்.ஊர்வலம் செல்லும்போது, மாநகரில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 58 பேரை பலிவாங்கியவரின் இறுதி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கியது, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பா.ஜ., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், 'ஊர்வலத்துக்கு அனுமதி தரக்கூடாது' என்று போலீசாருக்கும், அரசுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல், அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஊர்வலம் அமைதியாக நடந்தது இன்று நடந்த ஊர்வலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இரு சக்கர வாகனங்களுடன் அவர்கள் சென்ற ஊர்வலம், 4 கிலோமீட்டர் தொலைவை அமைதியாக கடந்து சென்றது. 'சிறு அசம்பாவிதம் நடந்தாலும், பரோலில் இருப்பவர்கள் அனைவரும் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என்பது, இதற்கு காரணமாக இருக்கலாம்' என்று போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

gayathri
டிச 20, 2024 10:10

சினிமாவும், நிஜ வாழ்க்கையும் ஒன்றா?


metturaan
டிச 19, 2024 12:51

இதெல்லாம் ரொம்ப தவறான முன்னுதாரணம்....


Viswa Nathan
டிச 18, 2024 13:09

இவனை கோவை மண்ணில் புதைப்பது கோவை மண்ணுக்கு அவமானம். என்றாவது ஒரு நாள் இந்த பயங்கர வாதம் முடிவுக்கு வந்தே தீரும். பயங்கரவாதிகள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி ஏறியப்படவெண்டும்.


அப்பாவி
டிச 18, 2024 10:47

.. பிரதமர், ஜனாதிபதி வருகையின்.போது அடிச்சு முடக்குறீஙளே. கஷ்டப் படும் மக்களுக்கு ரெண்டும் ஒண்ணுதான்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 18, 2024 11:39

பிரதமரும் ஜனாதிபதியும் இவனும் ஒன்னா? குண்டுகள் வெடித்த போது நீங்கள் கோவையில் இருந்திருந்தால் தெரியும். அது எவ்வளவு கொடுமையானது என்று. பால் பேரிங்குகளில் உபயோகப்படுத்தும் பால்கள் உங்கள் உடலை துளைத்து உள்ளே சென்றிருந்தால் அந்த வேதனை என்ன என்று தெரிந்திருக்கும்.


Suresh Rajagopal
டிச 18, 2024 09:44

அமைதியை விரும்பும், சட்டத்தை பாதுகாக்கும், சட்டத்தை மதித்து நடக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும், காவல் துறையினருக்கும் ஊர்வலத்தை அனுமதித்த அதிகாரிகளின் துரோகச் செயல்.


பேசும் தமிழன்
டிச 18, 2024 09:09

கோவை போலீஸ் சிரிப்பு போலீசாக மாறி விட்டது.... பிம்பிலிக்கி பிளாக்கி.. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் .... ஆளுகட்சியின் ஏவலுக்கு ஆளாகி இருப்பார்கள் .


Loganathan
டிச 18, 2024 05:50

நாட்டோட எல்லையில் நாட்டைப் பாதுகாக்க ஏகப்பட்ட ராணுவ வீரர்கள் தன் உயிரை கொடுக்கிறார்கள் ஆனால் இந்த கேடு கெட்ட அரசு தீவிரவாதத்தை ஆதரித்து இந்த கோவை மக்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்கள் இது கோவை மக்களின் பாதுகாப்பிற்கு தமிழக அரசு செய்து துரோகம்


பேசும் தமிழன்
டிச 18, 2024 09:11

அட நீங்கள் வேற சார் ....மறுபடியும் இவர்களுக்கே ஓட்டு போடுவார்கள் ....பாருங்கள் ....ஆனாலும் கோவை ரொம்ப நல்லவர்கள் ....எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறார்கள் .


Siva Balan
டிச 18, 2024 05:43

தமிழ்நாட்டில் தமிழர்களை கொலை செய்பவர்கள் தியாகிகளே....


Sathyan
டிச 18, 2024 04:13

தமிழக போலீசுக்கு இந்த ஆட்சியில் முதுகெலும்பு உடைந்துவிட்டது போல தோன்றுகிறது, மானம் கெட்ட பொழைப்பு.


K V Ramadoss
டிச 18, 2024 01:25

இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கு பெற்ற 1000 க்கும் மேற்பட்டவர்கள் அல் உமாவின் அனுதாபிகள் என்று ஏன் கருதக்கூடாது ? இந்த ஊர்வலத்தை எதிர்கால ஓட்டுக்காக அனுமதித்த திமுக அரசு அந்த அனுதாபிகளின், நம் நாட்டின் எதிரிகளின் அனுதாபி என்று ஏன் சொல்லக்கூடாது ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை