உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாயுவில் இயங்கும் இஸ்திரி பெட்டிகள்

வாயுவில் இயங்கும் இஸ்திரி பெட்டிகள்

திரவ பெட்ரோலிய வாயுவில் இயங்கும், 500 இஸ்திரி பெட்டிகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில், இலவச இஸ்திரி பெட்டி வழங்கும் திட்டமும் ஒன்று. தற்போது மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் நலன் கருதி, புதிய முயற்சியாக திரவ பெட்ரோலிய வாயுவில் இயங்கும், இஸ்திரி பெட்டிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.முதற்கட்டமாக இந்திய எண்ணெய் நிறுவனத்தின், பெருநிறுவன சமூக பொறுப்பு கொள்கை நிதியிலிருந்து, 29.93 லட்சம் ரூபாயில், திரவ பெட்ரோலிய வாயுவில் இயங்கும், 500 இஸ்திரி பெட்டிகளை வழங்கும் திட்டத்தை, கடந்த 8ம் தேதி, தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர், ஐந்து பயனாளிகளுக்கு இஸ்திரி பெட்டிகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை