உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 16ம் தேதி பொது வேலைநிறுத்தம்: பஸ் ஊழியர் சங்கம் ஆதரவு

16ம் தேதி பொது வேலைநிறுத்தம்: பஸ் ஊழியர் சங்கம் ஆதரவு

சென்னை: மத்திய அரசை எதிர்த்து, வரும் 16ம் தேதி, அகில இந்திய அளவில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில், தமிழக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளன.மத்திய அரசை கண்டித்து, அகில இந்திய அளவில், 16ம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை நடத்த, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதையொட்டி, போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம், சென்னை தொ.மு.ச., தலைமையகத்தில் நடந்தது. இதில், ஒன்பது சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள் எம்.சண்முகம், நடராஜன், ஸ்ரீதரன், சுப்பிரமணியன், அன்பழகன், நாராயணசாமி, நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், மத்திய அரசை கண்டித்து நடக்கும் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது என, முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Mohan
பிப் 01, 2024 16:40

நமக்கு ஒன்னும் இல்லேன்னாலும் பரவாயில்ல நம்ம எஜமானுக்கு ஒண்ணுன்னா கொறைக்கணும் அதுதான் கூட்டணி தர்மம்.. 7000 கோடி உங்க பணத்தை குடுக்காம இருக்குறதுக்கு பொங்கிருக்கணும் ஆனா அதுக்கு நேரம் இல்ல ...


M Ramachandran
பிப் 01, 2024 13:45

போக்கத்தவர்கள் முதலில் ஸ் டாலின் அரசை எதிர்த்து காம்மிசுகள் போராட்ட்டம் அறிவித்தார்கள் ஒடுக்க பட்டது. கப் சிப் என்று மூடிக்கொண்டார்கள் இப்பொ மத்தியா அரசை எதிர்த்து சம்பந்தமில்லாமால் தேர்தல் ஸ்டண்ட் கேம் தீய மு கா சப்பாஓர்ட் ஆக ஆடுகிறார்கள்


sridhar
பிப் 01, 2024 11:16

திமுகவுக்கு அஞ்சு சீட்டாவது தேறுமா . திரும்பிய திசை எல்லாம் பூதம் கிளம்புதே .


தமிழன்
பிப் 01, 2024 17:12

ஒரு சீட்டில் வெற்றி பெற்றாலே அதிகம்


raja
பிப் 01, 2024 10:46

நாட்டுல எவனாவது ஒருத்தன் நல்லது பண்ண கூடாது உடனே கிளம்பிடுவாங்க கூமுட்டை கண்டிக்கிறோம் போராட்டம்


Kannan
பிப் 01, 2024 10:17

சம்பளம் பற்றவில்லை என்றால் வேலையை ராஜினாமா செய்யவும்.. நிறைய இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.


தமிழன்
பிப் 01, 2024 17:14

காவல் துறை மட்டும் தான் போராட்டம் செய்ய மாட்டார்கள்.. அவர்களுக்கு தினமும் கிடைக்கிறது மாதாமாதம் அரசு கொடுக்கிறது. அமைச்சர்களும் சூழ்நிலைக்கு ஏற்ப தருகிறார்கள் ..


duruvasar
பிப் 01, 2024 09:08

ஏற்கனவே தோலர் சவுந்திரராஜன் அறிவித்த ஜனவரி 30 தேதி முதல் நடப்பதாக இருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க வேலை நிறுத்தம் என்னவாயிற்று ? காணாமல் போன பொட்டி கிடைத்துவிட்டதா ?


Muralidharan raghavan
பிப் 01, 2024 15:18

அப்படிதான் போல


Guruvayur Mukundan
பிப் 01, 2024 09:01

Why the protest against the centre?


Ramesh Sargam
பிப் 01, 2024 08:40

15 -ஆம் தேதி சாயங்காலம் போக்குவரத்து துறை அமைச்சர் போராட்டம் செய்பவர்களை சந்தித்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்து அவர்கள் போராட்டத்தை வாபஸ் செய்ய வைத்து விடுவார். இதுதான் எப்பொழுதும் நடக்கிறது. இப்பவும் அப்படித்தான் நடக்கும்.


தமிழன்
பிப் 01, 2024 17:14

இனியும் அப்படி தான் நடக்கும்.. அவர்களுக்கு தேவை வாக்குறுதி தான்


ديفيد رافائيل
பிப் 01, 2024 08:28

இந்த வேலை கிடைக்காதவர்களுக்கு மட்டும் தான் இந்த வேலையின் அருமை தெரியும்.


VENKATASUBRAMANIAN
பிப் 01, 2024 08:15

முதலில் உங்கள் முதுகை பாருங்கள். இங்கே எல்லாம் ஓட்டை அதை சரி செய்யுங்கள். அப்புறம் மத்திய அரசை பார்க்கலாம்.


ஆரூர் ரங்
பிப் 01, 2024 10:30

அணிலுக்கு தெண்டம் அழுது???? வேலைக்கு சேர்ந்தவர்களும்?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி