உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்குங்க: தமிழக அரசுக்கு இ.பி.,எஸ் வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்குங்க: தமிழக அரசுக்கு இ.பி.,எஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.,எஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இ.பி.,எஸ். வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பை மட்டும் திமுக அரசு அறிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=scbfz3ns&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. ஆயிரம் வழங்க வேண்டும். எண்ணூர் முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5ஆயிரம் வழங்க வேண்டும்.கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு கொள்முதலில் முறைகேட்டுக்கு இடம்தராமல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.,எஸ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை