சென்னை: சென்னையில் வார தொடக்க நாளான இன்று (நவ.,24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 சரிந்து, ஒரு சவரன் ரூ.92,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.11, 520க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் கடந்த ஒரு மாதமாக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில், நேற்று முன்தினம் (நவ.,22) தங்கம் விலை கிராமுக்கு, 170 ரூபாய் அதிகரித்து, 11,630 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,360 ரூபாய் உயர்ந்து, 93,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து, 172 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (நவ.,24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 சரிந்து, ஒரு சவரன் ரூ.92,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.11, 520க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.171க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.