உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் அரசு டாக்டருக்கு கத்திக்குத்து; சட்டப்படி நடவடிக்கை; அமைச்சர் மா.சு., உறுதி

சென்னையில் அரசு டாக்டருக்கு கத்திக்குத்து; சட்டப்படி நடவடிக்கை; அமைச்சர் மா.சு., உறுதி

சென்னை: சென்னையில் அரசு டாக்டரை கத்தியால் குத்திய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இதனிடையே, ஸ்டான்லி மருத்துவமனையில் மனநோய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஹரிஹரன் மீது நோயாளி தாக்குதல் நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4n05tg5b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தி உள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் உடனடியாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி டாக்டரை தாக்கியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அரசு டாக்டரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய எஞ்சிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: கிண்டி அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிகிச்சைக்கு வந்த வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் டாக்டர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மா.சுப்பிரமணியன் ஆய்வு

மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று தவறாகப் புரிந்து கொண்டு விக்னேஷ் என்பவர் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார்.டாக்டர் நலமுடன் உள்ளார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோயாளியுடன் வந்தவர் என்பதால் சம்பந்தப்பட்ட நபர் மீது சந்தேகம் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வேலைநிறுத்தம்

டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உதயநிதி ஆய்வு

டாக்டர் மீதான கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து கிண்டி அரசு மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். பாதுகாப்பு உடை அணிந்து சிகிச்சையில் உள்ள டாக்டர் பாலாஜியை சந்தித்தார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 6 மாதங்களாக விக்னேஷின் தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கோபத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார்.டாக்டர் பாலாஜிக்கு தலையில் 4 இடங்களிலும், இடது கழுத்திலும், இடது தோள்பட்டை மற்றும் காது மடலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் இன்று மாலை அனைத்து டாக்டர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். டாக்டர் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.

மற்றொரு புகார்

இதனிடையே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மன நல டாக்டர் ஹரிஹரன் என்பவரை மனநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி தாக்கியதாக போலீஸ் ஸ்டேசனில், அம்மருத்துவமனை முதல்வர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

VSMani
நவ 14, 2024 10:39

தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நோயாளியை சுகமாக்கி விடுவேன் என்று பொய் சொல்லி பணத்தின் பணம் கொள்ளை அடித்து இறுதியில் நோயாளியை கொல்லும் டாக்டர்களை இந்தியன் தாத்தா போல கத்தியால் குத்தி கொலை செய்வதில் தவறு இல்லை.


S.V.Srinivasan
நவ 14, 2024 10:03

இவரு என்ன நடவடிக்கை எடுக்க போறாரு. செய்தி வந்தவுடன் என்ன ஏது என்று விசாரிக்காமல் கத்தியால் குத்தியவன் வடக்கத்தியான் அவன் இவன் என்ற ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்.


அப்பாவி
நவ 13, 2024 19:06

சட்டப்படி நடவடிக்கையா? கிழிஞ்சுது போ.


lana
நவ 13, 2024 16:02

ஆமா you tuber இர்ஃபான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்த மாதிரி இவர்கள் மீதும் எடுக்க படும். இப்படிக்கு மராத்தான் மாசு


Karuthu kirukkan
நவ 13, 2024 14:01

இந்த நிகழ்வு ஆட்சியாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ,அணைத்து அரசு பணியாளர்களும், அமைச்சர்கள், MLA உள்பட அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறவேண்டும் அவ்வாறு பெற்றால் தான் மருத்துவ விடுப்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்று கட்டாய சட்டம் இயற்றினால் மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படும் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்படும் .


Duruvesan
நவ 13, 2024 13:30

இன்று கைது, அப்பாவி நாளை விடுதலை


Apposthalan samlin
நவ 13, 2024 13:27

வட மாநிலத்தவர் தமிழ் நாட்டை உத்தர பிரதேஷ் என்று நினைத்து விட்டனர் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் . கத்தி குத்தில் ஈடு பட்டவரை பெண்டை நிமிர்த்து விட்டார்கள்


ஆரூர் ரங்
நவ 13, 2024 13:53

தாகி, ராமஜெயம் கொலைகள் எங்கு நடந்தன. நிச்சயம் உ.பி யில் அல்ல. ஆனால் குற்றவாளிகளை இன்றுவரை கண்டுபிடிக்க வக்கில்லாத அரசு.


ديفيد رافائيل
நவ 13, 2024 13:07

Tamilnadu முதலமைச்சரையும் இந்த அமைச்சரையும் government hospital ல் treatment எடுக்க சொல்லுங்க அதுக்கப்புறமா தெரியும் gh ன் லட்சணம்.


Matt P
நவ 14, 2024 14:20

அமைச்சர்களஆக இருக்கும்போது எந்த அரசு ஆஸ்பத்திரிகளிலும் அங்கே சிச்சை எடுத்து கொண்டால் தனியாக அவர்கள் கவனிக்கப்படுவார்கள். ஆனால் அப்படி இருக்க கூடாது தான்.


Venkateswaran Rajaram
நவ 13, 2024 13:05

குத்தியது ஆரியர் ..திராவிடர் அல்ல என்று சொல்லும்


Venkateswaran Rajaram
நவ 13, 2024 13:04

திராவிட மாடல்


புதிய வீடியோ