உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : தமிழகத்தில் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜன.9) முதல் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக இன்று அனைத்து போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு ஓய்வு பெற்றோர் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்ககூட்டமைப்பு சார்பில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குஅகவிலைப்படி நிலுவை தொகை வழங்கவும், ஊதிய ஒப்பந்தபேச்சுவார்த்தை தொடங்கவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும், வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசதொகையை அரசு வழங்க வேண்டும், நிறுத்திய பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும், என வலியுறுத்தி நாளை (ஜன.9) முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்படவில்லை. தொழிற்சங்க கூட்டமைப்பில் தொ.மு.ச., வைத்தவிர அனைத்து சங்கங்களும் ஓரணியில் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றன. இவர்களுக்கு ஆதரவாக போக்குவரத்துக்கழகபணிமனைகள் முன்பாக ஓய்வு பெற்ற அமைப்பினர் இன்று(ஜன.8) தமிழக அரசினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ