கலகத்தை உருவாக்க நினைக்கும் கவர்னர் இ.கம்யூ., மாநில செயலர் வருத்தம்
ஈரோடு:''பிரச்னைகளை ஏற்படுத்தி கலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக கவர்னர் பேசுகிறார்,'' என்று, இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் கூறினார்.ஈரோட்டில் அவர் அளித்த பேட்டி: வக்பு வாரிய சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு, கூட்டு குழு நடவடிக்கைக்கு அனுப்பட்டுள்ளது. ஆளும்கட்சி, அதன் தோழமை கட்சிகள் கொடுத்த திருத்தம் ஏற்கப்பட்டது. ஆனால், எதிர்கட்சிகளின் திருத்தம் ஏற்கப்படவில்லை. காலை சிற்றுண்டி திட்டத்தை, தனியார் நிறுவனத்திடம், தமிழக அரசு கொடுக்கக்கூடாது. ஈ.வெ.ரா., குறித்து, தன்னிச்சையாக எதையோ பேசி தன்னை பெரிய தலைவராக காட்டி கொள்ள சீமான் நினைக்கிறார். சூரியனை பார்த்து நாய் குறைத்தால் என்ன ஆக போகிறது? பிரச்னைகளை ஏற்படுத்தி கலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக கவர்னர் ரவி பேசுகிறார். முதலில் அவர் கவர்னரா அல்லது அரசியல்வாதியா என சொல்ல வேண்டும். கவர்னர் தினமும் வள்ளுவர் சிலைக்கு காவி ஆடை அணிவிக்கிறார். பின், மரியாதை செலுத்துகிறார். அது எதற்கு என புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.