உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுதந்திர போராட்ட வரலாறு சுருக்கப்பட்டுள்ளது கவர்னர் ரவி வேதனை

சுதந்திர போராட்ட வரலாறு சுருக்கப்பட்டுள்ளது கவர்னர் ரவி வேதனை

சென்னை:''சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து, பள்ளி, கல்லுாரி பாடத்திட்டங்களில் குறிப்பிடவில்லை. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, சுதந்திரப் போராட்ட வரலாறு சுருக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டும் பங்கேற்றதாக எழுதப்பட்டுள்ளது,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத், அறம் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 128வது பிறந்தநாள் விழா, நேற்று சென்னை அண்ணா நகரில் நடந்தது. விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:நேதாஜி குறித்து நிறைய கற்றுக் கொள்ளுங்கள். நமது நாடு சுதந்திரம் பெற்ற பின், சுதந்திரப் போராட்ட வரலாறு சுருக்கப்பட்டது.குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றதாக எழுதப்பட்டது. நாடு முழுதும் எண்ணிலடங்காத மக்கள், தங்கள் உயிரை சுதந்திரத்திற்காக கொடுத்துள்ளனர். 'தமிழ்' மண் பல உயிர்களை சுதந்திரத்திற்கு விலையாகக்கொடுத்திருக்கிறது. சுதந்திரத்திற்காக உயிரை கொடுத்தவர்களின் பெயரை, வரலாற்றில் இருந்து நீக்கிவிட்டால், அது அவர்களின் மரியாதையை இழக்கச் செய்யும் செயலாகும்.அமெரிக்கர்கள், ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக அழைத்துச் சென்றது போல், விடுதலைப் போராட்ட காலத்தில், நம் மக்கள் நாடு கடத்தப்பட்டனர்.இதுகுறித்து, பள்ளி, கல்லுாரி பாடத்திட்டங்களில் குறிப்பிடவில்லை. இதுபோன்ற வரலாற்றை தெரியாமல், சுதந்திரத்தின் அருமையை தெரிந்து கொள்ள முடியாது. தமிழகத்திற்கு, கவர்னராக வந்தபோது, என்னிடம் 40க்கும் குறைவான சுதந்தரப் போராட்ட வீரர்களின் பெயர்களை கொடுத்தனர். நான் அதை நம்பவில்லை.தெளிவாக கணக்கெடுத்த பிறகு, ஆயிரம் பெயர்கள் கிடைத்தன. சுதந்திரத்திற்காக மட்டுமல்ல; நாட்டை உலகின் தலைமை நாடாக முன்னெடுக்க வேண்டும் என்ற கனவோடு, அவர்கள் போராடினர். மாணவர்களிடம் பல வாய்ப்புகள் உள்ளன. மிகப்பெரிதாக வளருங்கள்; சிறிய எண்ணங்கள் வேண்டாம். பத்து ஆண்டுகளுக்கு முன், அனைத்து துறைகளிலும் பின்தங்கி, 300- - 400 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் மட்டுமே இருந்தன.இன்று, 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன், உலகில் மூன்றாவது பெரிய நாடாக இருக்கிறோம்.வளர்ச்சிக்கு எல்லையே இல்லை; நீங்கள் வளர்ச்சியடைந்தால், உங்கள் வீடும், ஊரும், நாடும் வளர்ச்சி அடையும். எந்தத் துறையாக இருந்தாலும், அதில் சிறப்பாக பணியாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஜன 23, 2025 22:01

அதான் சுபாஷ் சந்திர போசுக்கு நல்ல கவரேஜ் குடுத்திருக்கே. அவரோட விழாவில் ஏன் இப்பிடி பேசுறீங்க?


Kanns
ஜன 23, 2025 09:13

True & Done by Vested-Divisive-Destructive-MegaLoot Conversionist Foreign Infiltrators& their Agents Congress? DMK etc etc. People are getting More Awakened by Most Required & True Propagandas


T.sthivinayagam
ஜன 23, 2025 07:40

பாரதத்தின் பூர்விகமொழியான தமிழையே அழிக்க அதிமேதாவிகளும் அவர்கள் வாரிசுகளும் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்


Priyan Vadanad
ஜன 23, 2025 02:59

சுதந்திரப்போராட்டத்தின் வரலாறை சுறுக்கிவிட்டார்கள் என்று புலம்புபவர்கள் வரலாறை நீட்டிவிட வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு போகிற வருகிற இடங்களிலெல்லாம் பேசி குழப்பித்திரிய வேண்டுமா?


Priyan Vadanad
ஜன 23, 2025 02:58

ஆயிரம் சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர்களை இவரிடம் கொடுத்தார்களாம். அதற்கு மேலாகவே உண்டு என்பது உண்மை. ஆனால் இவர்களை வழிநடத்திய தலைவர்களைத்தான் முன்னிலைப் படுத்துவார்கள் என்பது கூடவா படித்த பொறுப்புள்ள ஒருவருக்கு புரியவில்லை? தமிழ்நாட்டில் குழப்பம் உண்டாக்குவதற்கே ஒருசிலருக்கு அசைன்மென்ட் கொடுக்கப் பட்டிருப்பது போல தெரிகிறது.


SAMANIYAN
ஜன 23, 2025 09:18

அவருக்கு எப்படி ப்ரோ இதுலாம் புரியும்..அவரு சாதாரண முன்னாள் ஐ பி ஸ் அதிகாரி ..சிபிஐ ல வெட்டியா பொழுதே போக்கிடு இருந்தவரு..அப்புறம் அவரை தூக்கி துணை நேஷனல் செக்யூரிட்டி அட்வைசர் ஆ போட்டாங்க..அப்புறம் நாகாலாந்து,மேகாலயா ல கொஞ்சே நாள் கவர்னர் ஆ இருந்துட்டு இப்போ இங்க தூங்கி போட்ருக்காங்க ..அவருக்கு ஒன்னும் தெரியாது உங்களுக்கு நிரய தெரியும் ...


Priyan Vadanad
ஜன 23, 2025 02:49

சுதந்திரப்போராட்டத்தின் வரலாறை சுறுக்கிவிட்டார்கள் என்று புலம்புபவர்கள் வரலாறை நீட்டிவிட வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு போகிற வருகிற இடங்களிலெல்லாம் பேசி குழப்பித்திரியவேண்டுமா?