உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசு ஏற்கும்: முதல்வர்

வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசு ஏற்கும்: முதல்வர்

சென்னை: வெளிநாடுகளில் படிக்க முதல்முறையாக செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நடப்பாண்டு 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்கச் செல்கின்றனர். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 17 சதவீதம் அதிகரித்து உள்ளது. வெளிநாடுகளுக்கு முதல்முறையாக படிக்கச் செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Uuu
ஆக 03, 2024 14:35

Culprits in corruption putting some plan accordingly


ஸ்ரீனி
ஆக 02, 2024 21:35

ஏன், எவ்வளவு, அவசியம் என்ன, எப்படி கொடுத்த பணத்தை திரும்ப பெறுவது, அனைவருமே முதல் முறையாகத்தான் செல்வார்கள் - எப்படி அளவிடுவீர்கள்? anyway, நம்ம பணம் - நமக்கே கொடுப்பது நல்லதே...!


ram
ஆக 02, 2024 17:12

அப்புறம் தகுதி உள்ளவர்களுக்கு என்று சொல்லுவார்கள் இந்த திருட்டு திமுக ஆட்கள். மேலும் இந்த பணத்தை SC/ST மத்திய அரசு பணத்தில் இருந்து கொடுத்து, அவர்கள் வயித்தில் அடிப்பார்கள்


Pandi Muni
ஆக 02, 2024 16:59

இதிலிருந்து குடும்பத்துக்கு எத்தனை கோடி அடிக்கலாமுன்னு திட்டம்?


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 02, 2024 15:20

தகுதியான மாணவர்கள் என்று அப்பறம் திறுத்துவோம். இந்த செலவை சரி செய்ய டாஸ்மாகில புது திட்டம் வரும். எப்ப வேணும் என்றாலும் டாஸ்மாக் கடைக்கு சென்று 50 ரூபாயை ஒரு உண்டியலில் போட்டால், கட்டிங் சாராயம் குழாயில் வரும். வாய் வைத்து குடித்து கொள்ளவும்.


Rengaraj
ஆக 02, 2024 15:14

கரண்ட் பில் ஏறிப்போச்சு மாசாந்திர ரீடிங் எடுக்க வழி இல்லை காரணம் நிதி இல்லை நிறைய இடங்களில் லைட் எரியலை நகராட்சிகளில் மாநகராட்சிகளிலும் முக்கிய இடங்களை தவிர ரோடு எதுவும் சரியில்லை. கேட்டால் நிதி இல்லை. பஸ் எல்லாம் ஓட்டை ஒடசலா பழசா இருக்கு கேட்டால் நிதி இல்லை. கார் ரேஸ் நடத்த காசு இருக்கு இப்படி புதிது புதிதாக ஒரு திட்டம் பேர் சொல்லி விளம்பரம் தேட அரசிடம் காசு இருக்கா ???


C.SRIRAM
ஆக 02, 2024 15:07

இம்மாதிரி யானைக்கு ஹல்வா அல்லது குதிரைக்கு தேங்காய் எல்லாம் தேவையில்லை . வரிப்பணத்தை வீணடிக்காதீர்


பாமரன்
ஆக 02, 2024 14:54

இந்த தேவையில்லாத ஆணி திட்டத்தை எங்கேயோ மோப்பம் பிடிச்சிட்டு வந்து டிக்ளேர் பண்ணிட்டாப்ல முதல்வர்... அநேகமா மத்திய அரசு கூடிய விரைவில் இதே மாதிரி ஒரு திட்டத்தை அறிவிக்க வாய்ப்பு இருக்கு... அதாவது BHIMARU அல்லது EWS காரனுவலுக்கு மட்டும்... இப்போ பொசபொசன்னு எரிஞ்சி விழுற பக்கோடாஸ் அப்போ செம்ம பல்டி அடிச்சி சொல்ல போற தத்துபித்துவங்களுக்காக ஐ ஆம் வெயிட்டிங்..


Ramakrishnan Sathyanarayanan
ஆக 02, 2024 14:52

அரசுக்கு இது வீணான செலவு.


Just imagine
ஆக 02, 2024 14:49

தினம் நான்கு பேருக்கு ஏதாவது கொடுக்கிறமாதிரி போட்டோ எடுத்து அது தினமும் செய்தித்தாளில் வரணும், இல்லையென்றால் இரவு தூக்கம் வராது போல ...... அதற்க்கு ஏற்றாற்போல் ஏதாவது புதிய இலவசம் , புது திட்டம் அறிவிப்பு ........இப்போது வெளிநாடு செல்லும் மாணவர்கள் யாராவது அரசு நிதி வேண்டும் என்று அழுதார்களா .... பொழுது விடிஞ்சு பொழுது போனா ..... ஏதாவது புதிய இலவசம் , புது திட்டம் அறிவிப்பு .... அதற்கு தேவையான நிதி ஆதாரத்தை பெருக்காமல் மாநில கடன் சுமையை ஏற்றுவது ..... அல்லது மத்திய அரசு நிதி தராமல் வஞ்சிக்கிறது என்று புலம்புவது .... இருக்கிற திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்துங்கள் .... அரசின் முக்கிய கடமைகள் இலவச பள்ளிக்கல்வி , சுத்தமான குடிநீர் , மருத்துவ வசதி , சட்டஒழுங்கு பாதுகாப்பு , சாலை வசதி , தங்குதடையற்ற மின்சாரவசதி , புது தொழில் முனைவர்களை கண்டு அறிந்து புது தொழிற்சாலை உருவாக்கி பல புதிய வேலைவாய்ப்புகளை பெருக்குதல் , விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரம் பெருக்குதல் , மழை நீர் சேமிக்க அணைகள் ,ஏரிகள் , குளங்கள் மேம்படுத்துதல் , மாநகரங்களில் மழை வெள்ளம் வடிய கால்வாய்கள் மேம்படுத்துதல் ..... ஆனால் இதில் எல்லாம் தினமும் நான்கு பேரை கூட நிற்கவைத்து ஏதாவது கொடுக்கிறமாதிரி போட்டோ எடுத்து செய்தித்தாளில் வெளியிட முடியாது .


மேலும் செய்திகள்