உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம்: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம்: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்துள்ளனர். அதேநேரம் கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு உடனடியாக மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் கமிஷனர் கடந்த மே 12ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்கக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நேற்று (மே 23) விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்து கொள்வார்? என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இறுதி விசாரணை இன்று நடைபெறும் என அறிவித்திருந்தது.

மாறுபட்ட தீர்ப்பு

அதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையில், 'சமுதாயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தன்னிடம் பேசியதால், இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு அவசரமாக எடுத்தேன். மாறாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தால், என்னிடம் அவ்வாறு பேசியவர்கள் தங்கள் இலக்கை அடைந்துவிடுவதாக அர்த்தம் ஆகிவிடும். அதனால்தான் இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டேன். சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. எனவே, அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்வதாக' நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். ஆனால் மற்றொரு நீதிபதியான பி.பி.பாலாஜி, 'வழக்கமான நடைமுறைப்படி இந்த வழக்கில் அரசுத்தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும். பதிலுக்கு பிறகே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

3வது நீதிபதி

இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என இரு நீதிபதிகளும் ஒரே மாதிரியாக உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

MADHAVAN
மே 25, 2024 18:43

திமுக வை எதிர்த்தால் குண்டாஸ் நா, இந்நேரம் பிஜேபி கரண் எல்லாம் குண்டாஸ்லதான் இருப்பானுங்க, எதுக்கும் ஒரு எல்லை உண்டு, புல்டோசர் விட்டா வீட்டை இடிச்சாங்க ?


எஸ். ரெகுநாதன் .. அபுதாபி UAE
மே 25, 2024 09:44

தலைவிதியை நிர்ணயிக்கிறார் என்பதை இப்போதாவது புரிந்து தலைகால் புரியாமல் நிந்தனை செய்வதை நிறுத்துங்கள்


கணக்கன்.
மே 25, 2024 08:19

இரட்டைப்படை எண்ணிக்கையில் நீதிபதிகளை நியமித்தால் இதுமாதிரின்னு நடக்கும்கற கணக்கு. ஒற்றைப்படையில் நியமித்தால் மெஜாரிட்டி கிடைக்கும்ணே. இரட்டைப் படையில் நியமிப்பதே குற்றவாளிகளை தப்பிக்க விடுவதற்கேன்னு தோணுது.


ஆரூர் ரங்
மே 24, 2024 22:17

விருகம்பாக்கம் திமுக கூட்டத்தில் பெண் போலீசுக்கு இரு திமுக ரவுடிகள் பாலியல் தொல்லை அளித்தனர். அவர்களை காவல்நிலைய லாக்கப்பிலிருந்து கட்டாயமாக விடுவித்து அழைத்துச் சென்றார் எம்எல்ஏ. அவர்கள் மீது குண்டாஸ் பாயவில்லையே.


Kasimani Baskaran
மே 24, 2024 21:37

தனிப்பட்ட நபர்களின் நற்ப்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இல்லாததையும் பொல்லாததையும் பதிவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரலாம். வழக்குப்போட்டவர்களால் அப்படி நிரூபிக்க முடியுமா?


தமிழ்வேள்
மே 24, 2024 20:54

இவர்களுக்கு ஓட்டு போட்ட பாவத்துக்கு இன்னும் பல்லாண்டுகள் பலவகையிலும் இந்த மாநிலம் நாறி நலம் குலைந்து சீரழிந்து கதறி அழும்...


GMM
மே 24, 2024 20:15

ஒரு நீதிபதி உரிய நடை முறை பின்பற்றவில்லை. ஆகவே குண்டர் சட்டம் ரத்து. அடுத்த நீதிபதி அரசு பதில் பெற வேண்டும் என்கிறார். இதன் பொருள் - குண்டர் சட்ட நடவடிக்கை குறைபாடு உள்ளது.? ரத்து செய்ய முடியும். ரத்து செய்ய வில்லை. அரசு பதில் பெறும் வரை எந்த காவலிலும் அவர் இருக்க முடியாது. விருந்தினர் மாளிகையில் இருக்கலாம். சில மாநில நிர்வாகம் ஆளும் அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் போலீசார், அரசு நிர்வாகம், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்ற பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது. அரசியல் வாதிகள் நட்பு ரவடியிஸம் உடன் உண்டு? மத்திய அரசை எட்டி பார்க்க விட மாட்டார்கள். ஒருவர் ஆடிப்படைப்பார். அவர் தான் தீர்வு சொல்ல அது தான் அமுல்படுத்த பட்டு வருகிறது. ? சங்கர் டியூப் எதையும் பார்த்தது இல்லை. சட்டம் உறங்கும் நிலை.


Natarajan Ramanathan
மே 24, 2024 20:08

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற கேவலமான ஜந்துவை கைதுசெய்ய வக்கற்ற திறனற்ற கேவலமான அரசு. ஒரு நீதிபதி விசாரணை போதவில்லை என்றால் எப்போதுமே ஏன் மூன்று நீதிபதிகளை வைத்து விசாரிக்க கூடாது? இரண்டுபேர் என்றாலே மாறுபட்ட தீர்ப்பு வருவது சகஜம்தானே. இரண்டு நீதிபதிகள் என்பதே தேவை இல்லாத நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்தான்.


lana
மே 24, 2024 19:02

பிரதமர் மற்றும் ஆளுநர் அவர்கள் ஐ சிவாஜி கிருஷ்ண மூர்த்தி என்ற ஜந்து கேவலமா பேசும் போது இந்த போலீஸ் என்ன செய்ததது அப்போது மேடையில் இருந்த அனைவர் மீதும் ஏன் குண்டாஸ் போடஇல்லை . சட்டம் இங்கு முதல்வர் வீட்டுக்கு மட்டும் அல்லது போலீஸ் காரர் க்கு மட்டும் அல்ல. பிரதமர் மீது அவதூறு பேசிய ஒருவர் ஐ குண்டர் சட்டத்தில் அடைக்க முடியவில்லை. நல்ல கேவல் துறை.


Kundalakesi
மே 24, 2024 18:48

நீதி வெல்லும். சவுக்கு கைது மற்றும் குண்டாஸ் சட்ட விரோதம்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ