உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா?: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் கேள்வி

தமிழகத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா?: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் கேள்வி

விழுப்புரம்; தமிழகத்தில் அடக்குமுறை தொடர்வதால், அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா என்று, மா.கம்யூ., பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கேள்வி எழுப்பினார்.விழுப்புரத்தில் நேற்று இரவு நடந்த மா.கம்யூ., முதல் நாள் மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நடக்கும்போது தட்டி கேட்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. பா.ஜ., அண்ணாமலை, பொள்ளாச்சி சம்பவம் பற்றி ஏன் பேசவில்லை. அரசியல் தான் அவர்களுக்கு முக்கியம். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கான முயற்சியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் தி.மு.க., பார்த்து நாங்கள் கேட்பது, ஆட்சியில் உள்ளபோது மக்களுக்காக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை தடையின்றி செயல்படுத்த வேண்டும். ஆனால், கிராமத்தில் பட்டா கேட்டு சிறு இயக்கம் நடத்தினாலும், தெருமுனை கூட்டம் என்றாலும், போலீஸ் தடை போட்டு வழக்கு போடுகிறது. ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்றால் வழக்கு போடுகிறது. முதல்வரை கேட்கிறேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா? ஏன், போலீஸ் துறை கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. மா.கம்யூ., மாநில மாநாட்டு பேரணிக்கு அனுமதி கேட்டோம், மறுத்துவிட்டீர்கள், செங்கோடி பேரணிக்கும் தடை விதித்தீர்கள். ஏன் உங்களுக்கு அச்சம். எங்களுக்கு மட்டுமல்ல, எதிர்கட்சி, பல அமைப்புகள் நடத்தும் போராட்டத்துக்கும் அனுமதிக்க வேண்டும். ஏன் தடுக்கிறீர்கள், சீப்பை ஒளித்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா. தமிழகத்துக்கு மாற்று மாடல், திராவிட மாடலோ, இந்துத்வா மாடலோ அல்ல, கம்யூ., மாடல் தான் சிறந்தது. கூட்டணி ஆட்சியில் நாங்கள் இல்லை. நிறைவேற்றாத திட்டங்களுக்கும் தி.மு.க., அரசு தான் பொறுப்பு. தமிழகத்தில் பட்டியிலின அடக்குமுறை அதிகமாக உள்ளது. நாளைக்கு தி.மு.க., எங்களை விமர்சிக்கலாம், அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

s chandrasekar
ஜன 04, 2025 13:53

2026 தேர்தலுக்கு சூட்கேசை எதிர்பார்க்கும் உண்டியல் குலுக்கி. அது ஏன்டா பிஜேபி உள்ளெ விட கூடாது என்று கதறுகிறாய். உன் வேலை முத்து கூட சேர்ந்து செம்பு தூக்கி அறிவாலய வாசலில் நிற்கவேண்டியது. ஒரு ஐந்தோ பத்தோ வாங்கி சமோசா டி குடித்து நல்ல கழுவி விடுங்கடா. Vaiko வை பார் எப்படி வாலை சுருட்டி அடிமை வேலை பார்க்கிறான். அவனை பாத்து படிங்கடா.


duruvasar
ஜன 04, 2025 11:46

அப்படித்தாங்க பேசுவோம். 10 ஆண்டுகளாக எந்த வித ஊதிய உயர்வும் இல்லாமல் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு 15 க்கும் 10 க்கும் கூவினுகுகிருப்போம் . கூலிக்கு மாரடிச்சது வரைக்கும் போதும். கூலியா உயர்த்து. இல்லாங்காட்டி சேப்பு கொடி கட்டிடுவோம்.


G Mahalingam
ஜன 04, 2025 11:05

கம்யூனிஸ்ட்க்கு இனி தெரிந்து விட்டது. திமுக மேல் இனி சவாரி செய்ய‌ முடியாது. அதனால் அடுத்த கூட்டணிக்கு தாவுவதற்கு அஸ்திவாரம் போடுகிறார்கள். அதிமுக+விஜய்+கம்யூனிஸ்ட் கூட்டணி+விசிக. உருவாக வாய்ப்பு.


ManoharRaj
ஜன 04, 2025 10:06

வேறு ஒன்றும் இல்லை. கடந்த காலம் போல 25 கோடி போதாது மேலும் போட்டு கொடுங்கள் என நாசுக்காக வேண்டுகிறார்.


sankar
ஜன 04, 2025 09:13

நிலைய வித்வான்


கல்யாணராமன் சு.
ஜன 04, 2025 08:27

கம்யூனிசம் என்பதே மரணித்துவிட்ட ஓன்று ... இதிலே மாடல் எங்கே வந்தது ? எங்கேயிருந்து ரஷ்யா, சீனா நம்ம ஊரு கம்மிகள் காப்பியடிச்சாங்களோ, அங்கேயே கை கழுவி விட்டுட்டாங்க ... இவங்க ஏன் இன்னும் இதை பிடிச்சுக்கிட்டு தொங்கிட்டிருக்காங்க ????


karupanasamy
ஜன 04, 2025 08:11

நேராக அயோக்கியன் அறிவிலி மையத்திற்கு சென்று தோளில் உள்ள சிவப்புத்துண்டை கமுக்கத்தில் இடுக்கிக்கொண்டு பொங்கல் படிக்காசை பெற்றுக்கொண்டு குனிந்து குறுகி வளைந்து பல்லுப்படாமல் வேலையை முடித்துவிட்டு வருவார் காம்ரேட் தோழர்.


கோமாளி
ஜன 04, 2025 08:04

மடைமாற்றும் வேலையில் ஆளும்கட்சியின் தொங்குசதைகள்


Bala
ஜன 04, 2025 07:56

காம்ரேட ஆபீஸ் ரூமுக்கு வரச்சொல்லு....


Bala
ஜன 04, 2025 07:49

ஆஹா, ஆரம்பிச்சுட்டாங்கையா, ஆரம்பிச்சுட்டாங்கையா..,.தூங்க முடியல.... மங்குணி அமைச்சர் யாராவது இதற்கு பதிலடி கொடுங்கப்பா.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை