உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரத்தில் ரூ.53 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.53 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் மதுவிலக்கு போலீசாரின் வாகன சோதனையில், ஹவாலா பணம் 52 லட்சத்து 92 ஆயிரத்து 200 ரூபாய் பிடிபட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இளையான்குடி ரோடு காந்தி நகர் செக் போஸ்ட் பகுதியில், மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இருவர் வைத்திருந்த பை-ஐ சோதனை செய்தனர். பையில் இருந்த 52 லட்சத்து 92 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பணத்தை கொண்டு வந்தசிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 37) மற்றும் கவிதாஸ் (வயது 30) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இது குறித்து எஸ்.பி., கூறியதாவது: சென்னையில் இருந்து பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு ஒரு முறை அனுப்பி வைக்கப்படும் பணத்தை உரிய நபர்களிடம் இவர்கள் இருவரும் வழங்கி வந்துள்ளனர். தற்போது பிடிபட்ட பணம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் தகவல் தெரிய வரும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

konanki
ஜூலை 13, 2024 20:10

53 லட்சமா 53 கோடியா?


M Ramachandran
ஜூலை 13, 2024 19:38

பிடிபட்டது ஓகே அத்துடன் ஏர கட்டிவிடுவார்கள். இதன் மூலம் அறிவது என்ன என்றால் பெரிய்ய இடம் மாகா பெரிய்ய இடம் பக்க பிரிப்பிணை பிரித்து மேயப்படும்


M Ramachandran
ஜூலை 13, 2024 19:34

வாழ்க திராவிடம் வாழ்கவே. முன்பு பாடிக்கொண்டு திரிந்தார்கள் இப்போது........


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி