உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை மையம் குளிர் அறிவிப்பு

8 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை மையம் குளிர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இன்று (மே 14) தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழையும், கன்னியாகுமரியில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியான அறிக்கை: இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.நாளை திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
மே 14, 2024 20:27

கனமழை கொட்டப்போகுது என்று முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள் முன்னரே இல்லையென்றால் வானிலை ஆய்வு மையம் முன்பே தெரிவிக்காததால்தான் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எங்களால் எடுக்கமுடியவில்லை என்று கூறி கைகழுவிவிடுவார்


Siva Subramaniam
மே 14, 2024 17:08

வானிலை அறிக்கை கோவை வடவள்ளிக்கு பொருந்தாது இன்றும் மழை இல்லை


angbu ganesh
மே 14, 2024 14:11

சென்னைக்கு எப்போ ஐயோ வெயில் தாங்க முடியல


மேலும் செய்திகள்