உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் ஸ்டேஷன் நிலுவை வழக்குகள் சம்பந்தப்பட்டோரை பிடிக்க தனிப்படை

போலீஸ் ஸ்டேஷன் நிலுவை வழக்குகள் சம்பந்தப்பட்டோரை பிடிக்க தனிப்படை

ராமநாதபுரம் : பழைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க போலீஸ் ஸ்டேஷன் வாரியாக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.போலீஸ் ஸ்டேஷன்களில் போடப்பட்ட பல வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதில் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட குற்றபதிவேடு பிரிவு வாயிலாக மாவட்டத்தில் நடந்த குற்றங்கள் எத்தனை, அதில் கண்டுபிடிக்கப்பட்டவை, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனரா, நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி தற்போது ஸ்டேஷன் வாரியாக நிலுவை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நிலம்தொடர்பான குற்றங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை