வாசகர்கள் கருத்துகள் ( 17 )
மக்களின் பல மாறான கருத்துக்களின் விளைவாக இந்தப்படத்தை உச்ச நீதி மன்றமே முன் வந்து தடை செய்ய வேண்டும். இல்லையேல் இந்த படம் சமுதாயத்தில் ஒரு கொந்தளிப்பை உண்டாக்கும். பிறகு கட்டுப்படுத்தவே முடியாது. யாரையும் எந்த சமுதாயத்தினரையும் பாதிக்காத வண்ணம் எடுக்கும் படங்களை மட்டும் சென்சார் போர்டு திரையிட அனுமதிக்க வேண்டும். இல்லையேல் உச்ச நீதி மன்றமே முன் வந்து அதற்கு தடை விதிக்க வேண்டும். சென்சார் போர்டு அனுமதி பெற்றதால் ஒரு படம் மக்களுக்கு விரோதமாக இருந்தால் அதை நிச்சயம் தடை செய்தே ஆகவேண்டும். சென்சார் போர்டு எல்லாம் வல்ல உச்ச நீதி மன்றமல்ல அல்ல அல்ல...
கொயாபிளஸ்ல?? காஷ்மீர் பைல்ஸ் , கேரளா ஸ்டோரி அப்பல்லாம் எங்கே இருந்தீங்க??
இவர்களின் பகுத்தறிவு, மதச்சார்பின்மை பிராமண துவேஷம் என்ற புள்ளியில் தொடங்கி அங்கேயே முடியும். #அமரன்,#சூரரை போற்று#traffic ramaswamy
இந்த நியூஸ் பார்த்த பின்பு தான் அந்த படத்தின் டீசரைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணமே வந்தது... இது தான் மீடியாவில் இருக்கும் பிரச்சனை... மக்களைத் தவறாக வழிநடத்தும் இந்த மாதிரி செய்திகளை பிரபலப்படுத்தாமல் இருப்பது தான் மீடியா இந்த சமூகத்துக்கு செய்யும் தொண்டு...
L முருகன் சென்சார் போர்டை கலைத்து விட்டு புதிய குழு அமைக்கத் தவறினால் தமிழ்நாடு முழுக்க சமூக விரோத மற்றும் பிரிவினைவாத சக்திகளின் கைக்குச் சென்றுவிடும்.
மீன ராசிக்காரர் வேலைப்பளு அதிகமாம் ??
ஒரு வீட்டில் கழிப்பறை இருக்கும் ஆனால் அதுவே அன்றாடம் புழங்கும் அறையாக மாற முடியாது. உடலில் மலக்குடல் இருக்கிறது ஆனால் அதனை எந்நேரமும் எவரும் நினைத்து கொண்டிருப்பதில்லை. அருவருப்பு அடைவதில்லை சமுதாயத்தில் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவறுகள் அறியாமையால் செய்யப்படும் சிறு குற்றங்கள் நிகழலாம்.அதனை பெரிது படுத்த தேவையில்லை ஆனால் ஊடகங்களும், திரைப்படங்களும் அதனை முன்னிலைப்படுத்தி அதுதான் அன்றாட வாழ்க்கை என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள் விற்றுப் பயன் பெறுகிறார்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பொய் உண்மையென ஏற்கப்படுவதனைப் போல இளைய தலைமுறையினரால் இத்தவறுகள் நியாயப்படுத்தப்படுகின்றன "கண்டு கொள்ளாமல்" இருந்தால், அவை முக்கியத்துவம் பெறாது. திரைப்படங்களில் இப்பொழுதெல்லாம் குடிப்பது இயல்பான ஒன்றாகிவிட்டது எம்ஜியார் பொதுவாக அதனைத் தன படங்களில் முன்னிலைப்படுத்தியதில்லை ஆனால், சமுதாய பொறுப்புள்ளவர்கள் போல வசனம் பேசும் இன்றைய அனைத்து முன்னணி நடிகரும் இதனை எதிர்ப்பதில்லை
[சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் கொடுத்து விட்டதால்] ......... போர்டு மெம்பர்களில் யாருக்கும் பதின்ம வயதில் வாரிசுகள் இல்லீங்களா ??
நாற்பதை கடந்த பிள்ளைகள்தான் இருக்காம்.
சென்ஸார் போர்டு என்பது நல்ல விஷயங்களை திரையில் காட்சிப்படுத்த தடை விதிப்பது.. சென்ஸார் போர்டு நடிகர் விஷாலிடம் ரூ ஆறு லட்சம், லஞ்சம் கேட்டதாக பேசி யிருக்கார். சென்ஸார் போர்டு திருட்டு தீயமுகவை விட கேவலமா போயிட்டுது.
சினிமா துறையினால் மக்களுக்கு நன்மையா அல்லது தீமையா என்ற விவாத காலம் மாறி சினிமாவால் மக்களுக்கு குறைந்த பாதிப்பா அல்லது அதிக பாதிப்ப்பா என்ற விவாத காலம் ஆராம்பித்துவிட்டது . மக்கள் பொழுது போக்கிற்க்காக படம் எடுப்பது மாறி எதை வேண்டுமானாலும் பாடமாக எடுத்து பணம் பண்ணலாம் என்றாகிவிட்டது .சமூகத்திற்கு பொறுப்பான ,சிந்தனையை தூண்டக்கூடிய ,நல்லொழுக்கத்தை போதிக்ககூடிய சினிமா டயரெக்டர் என்றால் பாக்கியராஜ் ஜெனெரேஷன் டயரெக்டர்களோடு முடிந்துவிடும். முன்பெல்லாம் சினிமாவில் சிறிது வன்முறை இருக்கும் .இப்போதெல்லாம் வன்முறையில் சிறிது சினிமா வைக்கின்றார்கள் .மக்களை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும் .
சென்சார் போர்ட்டுக்கு திண்டுக்கல் பூட்டு யாராவது அனுப்பி அழகு பார்க்கவேண்டும் .. இவங்க இருந்தும் இல்லாத மாதிரி தான்.
"வெற்றி மாறன்" தயாரித்த இதை "வெட்டி மாறன்" தயாரித்த என்று படித்தால் சரியான அர்த்தம் வரும்