உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நள்ளிரவு முதல் முடக்கப்படும் வாக்காளர் பட்டியல்; உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?

நள்ளிரவு முதல் முடக்கப்படும் வாக்காளர் பட்டியல்; உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகள் தொடங்க உள்ள நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.வாக்காளர் பெயர் அதற்கான பட்டியலில் உள்ளதா என்பதை ஆன்லைன் மூலமாகவே எளிதில் தெரிந்து கொள்ளலாம்.1.இந்திய தேர்தல் கமிஷனின் https://voters.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும். 2. பின்னர் அதன் வலதுபுறத்தில் 'Search in Electoral Roll' என்ற பகுதியை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.3. இப்படி ஓபன் செய்யும் போது புதிய டேப் (Tab) ஒன்று ஓபன் ஆகும். அதில், Search by EPIC, Search bu Detail and Search by Mobile என 3 வகைகள் காட்டும். இதில் உங்களுக்கு சவுகரியமான ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர், விவரங்களை கொடுத்தால் உங்களின் பெயர், ஓட்டுச்சாவடி எண், மையம், தொகுதி உள்ளிட்ட விவரங்கள் காட்டும். 4. Search by EPIC என்ற ஆப்ஷனை கொடுத்தால் உங்களுக்கு மாநிலத்தின் EPIC எண் (வாக்காளர் அடையாள அட்டை எண் தர வேண்டும்) அளிக்க வேண்டும். அப்போது தான் விவரங்களை பெற முடியும்.5. Search by Details என்று இருக்கும் ஆப்ஷனை நீங்கள் கொடுத்தால் உங்களின் பெயர்/தகப்பனார்/கணவர் பெயர், பிறந்த தேதி, இருப்பிடம் போன்ற தகவல்களை டைப் செய்ய வேண்டும். இந்த தகவல்களை உள்ளீடு செய்தால் உரிய விவரங்கள் கிடைக்கும்.மேற்கண்ட நடைமுறைகளில் Search by Mobile என்ற ஆப்ஷன் என்பது எளிதான ஒன்று. இதை செலக்ட் செய்தீர்கள் என்றால் வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை கொடுத்தால் ஓடிபி (OTP) வரும். அதை இதில் பதிவிட்டால் உரிய விவரங்களை பெற முடியும்.வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை ஒவ்வொரு வாக்காளரும் சரிபார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பின் படி, வாக்காளர் பட்டியலானது இன்று (28.10.2025) நள்ளிரவு 12 மணியுடன் முடக்கப்படும். அதாவது, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகள் தொடங்க உள்ள தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கணக்கெடுப்புக்கு முந்தைய நடவடிக்கை தொடங்கும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால், இன்று (28/10/2025) நள்ளிரவு முதல் வாக்காளர் சிறப்பு திருத்தம் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் முடக்கப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும்.தமிழகத்தில் 2025ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியலானது ஜன.6ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 27 பேர் ஆண் வாக்காளர்கள். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 ஆகும். மூன்றாம் பாலின வாக்காளர்கள் எண்ணிக்கை 9120.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மணிமுருகன்
அக் 27, 2025 23:28

அருமை தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை வரவஏற்கிறேன் வாக்காளர் பட்டியலில் தவறு இல்லயென்றால் எதற்காக எதிர்ப்பு தெரொவிக்க வேண்டும் அப்படி விடுபட்டால் ஆவணங்களை கொடுத்து பதிவிட்டிகப் கொள்ள வேண்டியது தானே போலி வாக்காளர் பட்டியல் வைத்திருப்பதால் தான் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணி ஒப்பாரி வைக்கிறது என்பது உறுதியாகி விட்டது


Nandakumar Naidu.
அக் 27, 2025 21:54

தேச,சமூக விரோத சக்திகளின் வாக்குகள் குறையும். நல்லது.


Ramaraj P
அக் 27, 2025 20:51

ராகுல்காந்தி ஒரு சாதாரண எம்பி தானா கடைசி வரைக்கும்.


Anvar
அக் 27, 2025 19:53

இதுக்குதான் படிங்கடா படிங்கடான்னு படிச்சு படிச்சு சொன்ன திராவிட மாடல் குடிங்கடா குடிங்கடான்னு குடிக்கவச்சு இப்போ மங்குனி ஆகிக வச்சிருக்கு


M.Sam
அக் 27, 2025 19:41

என்ன தான் உன் தில்லா லாங்கடி வேலை பார்த்தாலும் கடைசியில் மக்களிடம் அடி வாங்குவது உறுதி அதை உண் முன்னதில் ஏழுதி வை


chandrakumar
அக் 27, 2025 19:09

பதற்றம் அடையும் அளவிற்கு ஒன்றும் இல்லை, 24 மணி நேரம் மட்டுமே முடக்கப்படும் அதாவது ஒரே ஒரு நாள் மட்டுமே....


முதல் தமிழன்
அக் 27, 2025 18:26

ராகுல்ஜி தேர்தல் கமிஷன் மேல் குற்றச்சாட்டு வைத்தால் முறைப்படி பதிலாளிக்காமல் இப்போ புதுசா ஒரு ரூட். என்னமோ நடக்குது மர்மமா இருக்குது. ஒண்ணுமே புரியல உலகத்திலே. யாரு ஜெயிச்சா என்ன நமக்கு பணம் கொடுத்தால் போதும்.


ஆரூர் ரங்
அக் 27, 2025 20:00

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நான்கு முறை இது போன்ற SIR திருத்தப் பணிகள் நடத்தப்பட்டன. அப்போது எந்த எதிர்கட்சியும் எதிர்க்கவில்லை.(


SANKAR
அக் 28, 2025 00:09

there was no fraud...like chandigarh mayor election and Karnataka fraud ..both now documented and proved in court of jaw and chandigarh official let off with SIPMLE APOLOGY under instruction from above to court