உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது எப்படி: அண்ணாமலை கேள்வி

பாஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது எப்படி: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' பா.ஜ.,வினர் 10 பேர் சேருவதற்கு அனுமதி கொடுக்காத போலீசார், அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா இறுதி ஊர்வலத்தில் இத்தனை பேர் சேருவதற்கு எப்படி அனுமதி கொடுக்கிறார்கள்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், கோவையில் மரணமடைந்த அல் உம்மா இயக்கத்தலைவர் பாஷா உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=06hvryq6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு அண்ணாமலை அளித்த பதில்: இது கண்டிக்கத்தக்கது. வேதனை அளிக்கிறது. பா.ஜ.,வின் நிலைப்பாட்டை துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். பாஷா பரோலில் வெளியில் வந்துள்ளார். இந்த வழக்கில், கோவையில் எத்தனை உயிர்கள் பறிபோனது என்பது அனைவருக்கும் தெரியும். அது ஆறாத ரணமாக உள்ளது. இன்று கட்சித் தலைவர்கள் இது குறித்து டுவீட் போட்டு, தியாகி போல் மாற்றி உள்ளனர்.பா.ஜ.,வினர் 10 பேர் சேருவதற்கு அனுமதி கொடுக்காத போலீசார், எப்படி இத்தனை பேர் சேருவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். தி.மு.க., அரசு திருப்திபடுத்துதல் அரசியலின் உச்சத்தில் இருக்கிறது. கோவையில் பாஷா உடலை ஊர்வலமாக கொண்டு செல்ல எப்படி அனுமதி கொடுத்தனர்? இது தேவையில்லாமல் வகுப்புவாத ரீதியில் பிரச்னை உருவாக்கும். கோவையில் ஒரு விஷயம் நடந்து அதில் என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அமைதி திரும்பிக் கொண்டு உள்ளது. ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வும் கவனத்துடன் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை வேரோடு அறுக்க வேண்டும். ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை, தானாக சேர்ந்துவிட்டார்கள், நாங்கள் என்ன செய்வது என்கின்றனர்.மாவட்ட பா.ஜ.,வினர் வெள்ளிக்கிழமையை கருப்பு நாளாக அறிவித்து நாங்களும் ஊர்வலம் எடுப்போம் என்கின்றனர். தலைவர்களாக நாங்கள் அனைவருடன் பேசி வருகிறோம். எங்களுக்கும் பொறுப்பு உள்ளது. இந்த விவகாரத்தை உருவாக்கியது ஆளுங்கட்சி. இதை கையாண்ட விதம் சரியில்லை. காலையில் இல்லை என்றவர்கள், மதியம் உள்ளது என்றனர். மருத்துவமனையில் இருந்து இல்லை, வீட்டில் இருந்து உள்ளது என்கின்றனர். தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு உள்ளனர். செயற்கையாக அனைவரையும் தியாகிகள் என்கின்றனர். இறந்த மனிதர்களுக்கு அனைவருக்கும் மரியாதை கொடுப்பதுதான். அவரை யாரும் மரியாதைக் குறைவாக பேசவில்லை. அவர் செய்தது அனைவருக்கும் தெரியும். இதை ஊர்வலமாக கவுரவப்படுத்த வேண்டுமா? என்பது தான் பா.ஜ.,வின் கேள்வி. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

saravanan
டிச 23, 2024 14:20

இஸ்லாமிய ஆதரவுக்கும் இஸ்லாமிய தீவிரவாத ஆதரவுக்கும் உள்ள வித்தியாசத்தை பாஜக தவிர தமிழகத்தில் மற்ற கட்சிகள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக கண்ணை மூடிக் கொண்டு பயங்கரவாதிகளை ஆதரிப்பதும் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறும் வரை சும்மா இருந்துவிட்டு பின்பு வேறு வழியில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் எந்தவிதத்தில் சரி? அதனால் போன உயிர்கள் தான் திரும்ப வந்துவிடுமா இல்லை பொருளாதார இழப்புகள் தான் மீண்டெளுமா ? மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகே நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட்டு அமைதி நிலவி வருகிறது என்பதை மக்கள் உணர வேண்டும்


Mahendran Puru
டிச 19, 2024 09:25

இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி வாங்கத் தேவையில்லை என்பது இந்த முன்னாள் ஐபிஎஸ் க்கு தெரியாதா என்ன வெட்டியாக கூவுவதே வேலையாகப் போச்சு.


THIRU
டிச 18, 2024 11:58

நான் இங்கு முஸ்லீம் நம்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..ஏன் மௌனம் சாதிக்குறார்கள்..மௌனம் சாதித்தால் நீங்களும் இதை ஆதரிப்பதாக தானே அர்த்தம் தோன்றுகிறது..இது எனக்கு பெரிதளவில் வருத்தத்தை தருகிறது..பயத்தையும் தருகிறது..


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 18, 2024 11:53

திமுக அரசு இது போன்று செய்யாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம். குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் கோவை கோட்டை மேடு பகுதியில் ஒரு போலீஸ் செக் போஸ்ட் ராயல் தியேட்டர் பகுதியிலிருந்து உள்ளே செல்லும் பகுதியில் அமைத்திருந்தார்கள் இந்த தீவிர வாதிகளை கண்காணிக்க. அடுத்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் பதவியேற்க கூட இல்லை அதற்குள்ளாக இரா.மோகன் தலைமையில் திமுகவினர் போலீஸ் செக் போஸ்ட் அடித்து நொறுக்கினர். ஆகவே இது ஒன்றும் ஆச்சரியபடக்கூடிய விஷயம் இல்லை. திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் அதிமுக மற்றும் தமிழகத்தின் திராவிட உப கட்சிகள் மற்றும் புதியதாய் சினிமாக்காரர்கள் தோற்றுவிக்கும் கட்சிகள் அனைத்தும் மதச்சார்பின்மை என்று பெயரளவில் தான் வாய் கிழிய பேசும். மதச்சார்பின்மை மதச்சார்பின்மை என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம் மதத்திற்கு ஆதரவான கட்சிகள் தான். இவர்களின் ஒரே கொள்கை மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை அழிப்பது தான் ஒரே குறிக்கோள். மதச்சார்பின்மை என்றால் இவர்கள் அகராதியில் இந்து மத எதிர்ப்பு என்று தான் பொருள்.


pmsamy
டிச 18, 2024 11:47

அண்ணாமலை தற்கொலை முயற்சி செய்ய மாட்டான்


Thiyagarajan S
டிச 18, 2024 15:15

ஏன் நீ செஞ்சிக்க போறியா....?? அப்படி நடந்தா தகனத்துக்கு நெருப்பு பட்டி வாங்கி கொடுக்கிற செலவு என்னோட....


வல்லவன்
டிச 18, 2024 11:42

இது குறித்து கோவை அதிமுக வாய் திறக்காதது ஏன்????


அப்பாவி
டிச 18, 2024 10:45

கோர்ட்டில் கேஸ் போட்டுப் பாருங்க. 3047 ல் தீர்ப்பு கிடைக்கலாம்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 18, 2024 12:07

தீர்ப்பு வழக்கு தொடுக்கும் முன்பே எழுதப்பட்டு விட்டது போல தெரிகிறது


THIRU
டிச 18, 2024 09:40

மக்களுக்கு அவர்கள் குடும்பத்தை பார்க்கவே நேரம் இல்லை.. இதில் அரசியல் பற்றி அறிய வாய்ப்பு இல்லை.. அரசியல்வாதிகள் இதை பயன்படுத்திக்கொண்டு, அரசியல் எனும் தொழிலுக்காக நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்துகொண்டு அதனை தன் கட்சிக்கு சாதகமாக திரித்து தன் ஊர் மக்களிடம் பேச்சு வழக்கில் பரப்புகின்றனர்.. மக்கள் அதை அய்யயோ அப்படியா என்று நம்புகின்றனர்.. இதான் உண்மை.. அப்படி நம்பிய ஒரு விஷயம் தான் பிஜேபி மதவாத கட்சி என்பது..அனைவரும் நாட்டில் நடப்பதை நல்ல ஊடகங்கள் வாயிலாக ஆதாரத்துடன் கட்டாயமாக தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்..அரசியல் என்ற பாடம் நம் கல்வி முறையில் இடம் பெற வேண்டும்..தமிழ் ஆங்கிலம் போல் எல்லா துறையிலும் அரசியல் பாடம் கட்டாயமாக்க பட வேண்டும்..


Thiyagarajan S
டிச 18, 2024 15:14

நீ இப்ப என்னதான் சொல்ல வர்ற பயங்கரவாதியின் சவ ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது சரி..... அதை கண்டிக்கும் பாஜக தவறு அப்படின்னு சொல்ல வரியா


பேசும் தமிழன்
டிச 18, 2024 08:59

அண்ணாமலை அவர்களும்.. பிஜெபி கட்சியும் இல்லையென்றால்.... இறந்தவர்களின் சார்பாக கேள்வி கேட்க ஒரு பயலும்/கட்சியும் வந்து இருக்காது.. தமிழக மக்கள் பிஜெபி கட்சிக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என்று இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள்.. நமக்கு ஒரு பிரச்சினை என்றால் அது குறித்து கேள்வி கேட்க பிஜெபி கட்சி மட்டும் தான் வரும்.


பேசும் தமிழன்
டிச 18, 2024 08:55

கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினரின் சாபம் ....இந்த விடியா அரசை இல்லாமல் செய்து விடும்....ஓட்டு போடும் இந்துக்கள் இனியாவது ...யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்று தெரிந்து ஓட்டு போட வேண்டும் .....இல்லையென்றால் இப்படி தான் .....தீவிரவாதிகளை தியாகிகள் ரேஞ்சுக்கு மாற்றி விடுவார்கள் .... தமிழக இந்துக்கள் அனைத்தையும் மறந்து எப்படியும் நமக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என்ற இறுமாப்பு விடியாத மாடல் அரசிடம் தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை