உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் இன்று (டிச.,13) நீதிமன்ற நிபந்தனைகள் படி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றக் கிளை டிச., 1ல் உத்தரவிட்டது. இதை கோவில் நிர்வாகம் நிறைவேற்றவில்லை. உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, ''காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டார். ''50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அரசியல் விமர்சனம் கூடாது. கோஷம் எழுப்பக்கூடாது. மந்திரம் மட்டுமே உச்சரிக்க வேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும்'' என நீதிபதி நிபந்தனை விதித்து இருந்தார். அதன்படி உள்ளூர் மக்கள் இன்று (டிச.,13) காலை 9 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 13, 2025 10:30

எழுதி வெச்சிக்கோ திருப்பரங்குன்றம் அடுத்த mla கண்டிப்பா தீயமுக தான். ஹிந்து அடிமைகள் ஓட்டு அள்ளி போடும், சூடு சொரணை எல்லாம் நமக்கு இல்ல. த இலவசம் அவர்கள் ஜீவதாரம், முருகா எல்லோரும் நல்லா இருக்க அருள் புரிவீராக


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி