உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனைவி தாக்கி கணவர் பலி பண்ருட்டி அருகே பரபரப்பு

மனைவி தாக்கி கணவர் பலி பண்ருட்டி அருகே பரபரப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே குடும்பத் தகராறில் மனைவி தாக்கியதில், கணவர் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு, கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வமணி, 50; வடலுாரில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா,45; ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வடலுாரில் செல்வமணிக்கு வேறோரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை, மனைவி உஷா கண்டித்ததால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, உஷா, செல்வமணியை தாக்கினார். இதில், சுவற்றில் மோதி பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்தலேயே இறந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். தகவலறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வமணி உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வி.ஏ.ஒ.,பூவராகவன் அளித்த புகாரின் பேரில், போலீசார், உஷாவிடம் விசாரணை நடத்தினர். இதில், செல்வமணி குடிபோதையில், உஷாவையும், மகனையும் தாக்கினார். ஆத்திரமடைந்த உஷா, செல்வமணியை கட்டையால் தாக்கி தள்ளி விட்டதில், சுவற்றில் மோதி காயமடைந்து இறந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து உஷாவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Natchimuthu Chithiraisamy
ஆக 08, 2025 11:42

தேர்தல் வாக்குறுதியை பேணுவதில்.


P. SRINIVASAN
ஆக 08, 2025 10:07

உண்மை...


shyamnats
ஆக 08, 2025 09:48

தேர்தலுக்கு முன் இளம்விதவைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்த, தேர்வான பின் உடனே பூரண மது விலக்கு என்று வாக்குறுதி வழங்கிய தி மு க பிரமுகர்களை எங்கும் காண முடியவில்லை. தமிழகமே மதுவில் தள்ளாடி சீரழிகிறது. மக்கள் மதுவிலக்கு க்கு உறுதி அளிக்கும் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும்.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஆக 08, 2025 09:07

ஒரே தீர்வு மது விலக்கு. ஆனால் இரண்டு திராவிட தலைவர்களும் செய்ய மாட்டார்கள்.


Ms Mahadevan Mahadevan
ஆக 08, 2025 08:31

மது விலக்கு கொண்டு வரும் கட்சிக்குத்தான் ஓட்டு போட மக்கள் முடிவெடுக்க வேண்டும். ஒரு கட்சியும் அப்படி வாக்குறுதி அளிக்க வில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்


நிக்கோல்தாம்சன்
ஆக 08, 2025 08:06

இங்கே பலிக்கு காரணம் மது என்ற அரக்கன் தான் மது விற்ற விற்பனையாளர்களை கைது செய்வதற்கு துப்பு இல்லை


R.MURALIKRISHNAN
ஆக 08, 2025 07:35

ஆமாம். ஒரு நாள் தள்ளி இறந்தால் அரசாங்கம் பொறுப்பல்ல. என்ன ஒரு அறிவாலயம்


raja
ஆக 08, 2025 07:30

என்ன இலவு திராவிட மாடலோ...கள்ள தொடர்ப்பு சே சே திராவிடன் சுனா வீணா பானா சொல்வது போல திருமணம் தாண்டிய உறவினால் மற்றும் தமிழக திருட்டு திராவிட ஊத்தி கொடுக்கும் மதுவினால் இந்த கொலை... தமிழா இந்த கேடுகெட்ட மாடல் தான் உனக்கு தேவையா சிந்தித்து பார்....


Mani . V
ஆக 08, 2025 04:12

இனி இது போன்ற பிரச்சினைகள் வராது. அதுதான் அப்பா டாஸ்மாக்கை மாதத்தின் முதல் நாளில் மட்டும் மூடப் போகிறாராமே.


Ganesun Iyer
ஆக 08, 2025 03:27

அதுதானே.. டாஸ்மாக்கின் நிரந்தற வாடிக்கையாளரை இழந்ததுக்கு அந்த மனைவிதான் காரணம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை