உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / “சிறையில் நான் கொல்லப்படுவேன்”: சவுக்கு சங்கர் கோஷம்

“சிறையில் நான் கொல்லப்படுவேன்”: சவுக்கு சங்கர் கோஷம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: போலீசார் அழைத்து சென்ற போது, கோவை சிறையில் தான். நான் கொல்லப்படுவேன் என சவுக்கு சங்கர் கோஷம் எழுப்பினார். பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து, யு யூடிப் சேனலில் அவதூறு கருத்துக்களை தெரிவித்த, சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது, கஞ்சா கடத்தல் உட்பட மாநிலம் ழுழுவதும் மேலும் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9joz37y2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை சைபர் கிரைம் வழக்கில், அவரை ஐந்து நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் சரவணபாபு உத்தரவிட்டார். போலீசார் அழைத்து சென்ற போது, ''கோவை சிறை எஸ்.பி., எனது கையை உடைத்தார். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. கோவை சிறையில் தான். நான் கொல்லப்படுவேன் என சவுக்கு சங்கர் கோஷம் எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

குமரி குருவி
மே 14, 2024 14:09

தமிழகத்தில் அந்தளவு சர்வாதிகாரம் வரவில்லை வளர வில்லை


Narayanan
மே 14, 2024 12:13

செந்தில்குமார் சிறைத்துறை போலீஸ் சங்கர் கடலூரில் சிறைவைத்த போது சங்கரை தாக்கினார் பின்னர் சங்கர் வெளியில் வந்த பிறகு விஷயத்தை சொல்லிவிட்டார் சங்கர் இதனால் வெகுண்ட செந்தில் நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார் சங்கரை சென்னையில் சிறைவைக்க வேண்டிய போலீஸ் செந்தில் இப்போது கோவையில் இருப்பதால் அங்கு கொண்டுவரசொல்லி , அவரது வன்மத்தையும், அரசின் வன்மத்தையும் தீர்க்க சங்கரின் கையை உடைத்து இருக்கிறார் இவை எல்லாமே சிறைத்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் உத்திரவுப்படியே நடந்து இருக்கிறது இந்த நிலையில் சங்கர் செந்தில்குமார் போலீஸ் மூலமாக கொல்லப்படலாம் ஊடகங்கள் கொதித்து எழவேண்டும் இப்படியே போனால் சர்வாதிகாரம்தான் அதிகமாக தலைதூக்கும்


sankaranarayanan
மே 13, 2024 21:32

என்னய்யா ஒரு ஆளுக்கு இந்த பரபரப்பா இந்த அரசு ஆர்பாட்டமா இந்த மாதிரியானா பாது காலவலர்களின் எண்ணிக்கையும் அவரை சுற்றி கணக்கிலாத போலீசு கடுபிடியுமா ஏன் அரசு இவ்வளவு பில்டப்பு இவர்க்கு அளித்து மக்களிடையே ஒரு பிதியை உண்டாக்குகிறது


Narayanan
மே 14, 2024 12:37

அதே சந்தேகம் எனக்கும் உண்டு ஒரு சாதாரண யூ டியூப் / பத்திரிக்கையாளர் அந்த ஒருவரை பார்த்து இந்த அரசுக்கு பயமா? சகிப்புத்தன்மை- பொதுவெளியில் வந்த அரசியலார்களுக்கு இல்லாதது கடினம் சர்வாதிகார போக்கு ஆட்சிக்கு அழகல்ல எத்தனை காவலர்களின் படைத்திரட்டுபத்திரிக்கை சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்னவாயிற்று?? ஊடகங்களின்/ கட்சிகளின் பேரமைதி வேதனை அளிக்கிறது


Parthasarathy Badrinarayanan
மே 13, 2024 18:49

அவர் சொல்வது உண்மை


UTHAMAN
மே 13, 2024 17:39

சவுக்குசங்கர் எந்த பெண்ணையும் அடையாளப்படுத்தவில்லை அவர் தப்பே செய்திருந்தாலும் அவரை தண்டிக்க வேண்டியது நீதி மன்றம் தான் அவர் பொதுவெளியில் கூறியது ஏற்புடையதாக இல்லாவிடினும் அதில் ஏதும் உண்மை உள்ளதா என்பதை விசாரணை செய்யாமலேயே, ஒரு வேளை எள்ளளவு உண்மை இருப்பினும் அது எவருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அவர்கூறியது அவதூறுதான் என காவல்துறையே முடிவு செய்துகொண்டு புலன்விசாரணை என்ற பெயரில் காவல்துறை அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது இதை எந்த ஊடகமும் பத்திரிகையாளர்களும் கண்டிக்கவில்லை காவல்துறை மீது அவ்வளவு பயம் முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை கள்ள உறவில் பிறந்தவன் என திமுககாரன் பேசியபோது எடப்பாடி வீட்டு பெண்களின் கற்பு கொச்சைபடுத்தப்பட்ட போதும் குஷ்புவையும் தலீவரையும் இணைத்து திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது தலீவரும் வாய்மூடியிருந்த போதும் மன்சூர்அலிகான் திரிஷாவின் பெயரை குறிப்பிட்டு தரக்குறைவாக பேசும்போதும் நித்தியானந்தாவையும் ரஞ்சிதாவையும் இணைத்து ஒரு போலியான வீடியோவை மாதக்கணக்கில் ஒவ்வொரு ஊடகமும் பரப்பியபோது அந்த பெண்ணின் பெண்மை இழிவுபடுத்தப்பட்ட தே அதில் உண்மையே இருந்திருந்தாலும் அது அவர்களது அந்தரங்கம் அதை பொதுவெளியில் பரப்புவது மட்டும் பெண்மையை கேவலப்படுத்துவது ஆகாதா அப்போதும் சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியை அபகரிக்கும் நோக்கத்தோடு திமுகவின் தூண்டுதலால் அப்பள்ளியின் ஆசிரியர் மீது தமிழக காவல்துறை போக்சோ பொய் வழக்கு போட்டு அவரை சித்திரவதை செய்த போது அவரது தாயார், மனைவி, மகள்கள் இந்த சமுதாயத்தின் முன்னே எவ்வளவு கூனிகூறுகியிருப்பார்கள் அவர்களின் பெண்மை அவமானப்படுத்தப்பட்ட போதும் அந்த வழக்கு பொய்வழக்கு என உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்த பின்னர் பொய் வழக்கு போட்ட காவல் துறை அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத போதும் சைதைசாதிக் மீது ஏன் இத்தகைய நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவில்லையே அப்போதும் வைரமுத்து மீது வரப்பெற்ற பாலியல் புகார்கள் மீது ஏன் இத்தகைய நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவில்லையே அப்போதும் இந்துக்கள் தெய்வமாக வணங்கும் நடராஜர் பார்வதி குறித்தும், கந்தசஷ்டி குறித்தும் தரக்குறைவாக இழிவுபடுத்தி பொதுவெளியில் பரப்பியபோதும் ஸ்ரீமதியின் இறப்பு கொச்சைபடுத்தப்பட்டு பரப்பப்பட்ட போதும் இன்று ஏதோ பெண்களை இழிவுபடுத்தியதால் பொங்கி எழும் காவல்துறை சவுக்குசங்கர் மீது எடுத்த அடி, உதை நடவடிக்கைகளை அவர்கள் மீதெல்லாம் ஏன் எடுக்கவில்லை ஏனென்றால் தற்போது சவுக்குசங்கர் பேசியது காவல்துறை பெண்களை பற்றி வேறுதுறை பெண்களை பற்றி பேசியிருந்தால் வழக்கம் போல காவல்துறை கண்டுகொள்ளாது எவருக்கும் எந்த மன உளைச்சலும் ஏற்படாது எவன் எந்த பெண்ணைப் பற்றி கேவலமாக பேசினாலும் எந்த ஊடகமும் பேசியவனை குறைகூறாமல் பேசப்பட்ட பெண்ணை கேவலப்படுத்தும் அதனை காவல்துறையும் கண்டுகொள்ளாது ஆனால் எவனாவது திமுக வீட்டு பெண்களையோ, காவல்துறை பெண்களையோ பேசிவிட்டால், கற்பு என்பது திமுகபெண்களுக்கும் காவல்துறை பெண்களுக்கும் மட்டுமே உள்ளது போல், அவன் மீது ஏராளமான பொய்வழக்குகளை போட்டு புலன் விசாரணை என்ற பெயரில் எலும்புகளை உடைப்பது முதல் என்கவுண்டர் செய்வது வரை அத்தனை மனித உரிமை மீறல்களையும் செய்து நீதி வழங்குவார்கள் ஏனெனில் அவர்கள் சர்வ வல்லமை படைத்த ஒரே குடும்பம் உதாரணமாக புல்வெளியில் ராம்குமாரின் கொலை, பல் உடைத்த பல்பீர்சிங், காவல்துறை நினைத்தால் எதையும் செய்யும் என எழுதிவைத்துவிட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட பெண் காவல் துணை கண்காணிப்பாளர் என ஏராளமாக கூறலாம் இதில் பல்பீர்சிங்க்கு மீண்டும் காவல்துறையிலேயே பதவி இன்னும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் எத்தணை பேர்களுக்கு எலும்பு முறிவுகளும், என்கவுண்டர்களும் ஏற்படப்போகிறதோ அதனை ஆளும் கட்சியின் ஐடிவிங் தான் தீர்மானிக்கும் காவல்துறை கச்சிதமாக செய்துமுடிக்கும் இனி திமுக+காவல் துறையின் கோரமுகங்களை காணலாம் அவற்றை ஊடகங்களும், பத்திரிகைகளும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வாய் திறவாது பயந்து நடுங்கி அமைதியாக இருப்பார்கள் இல்லையெனில் அவர்களுக்கும் அவர்களது ஊழியர்களுக்கும் உயிருக்கும் உடமைகளுக்கும் இந்த திமுக+காவல்துறை ராஜ்ஜியத்தில் எந்த உத்திரவாதமும் இல்லை


Palanisamy Sekar
மே 13, 2024 18:33

சபாஷ் மிக அருமையாக தெளிவாக எழுதி இருக்கின்ரீர்கள் ஒட்டுமொத்த இந்துக்கள் கொந்தளித்த போதும் கூட கந்தசஷ்டி கவசத்தை கேவலம் பேசியவனை கைது செய்ய திமுக தயங்கியது மேலும் பெயரளவுக்கு கைது செய்த அந்த கருப்பன் கூட்ட கயவனை ஏன் குண்டாசில் போடவில்லை தங்களின் குடும்பத்தினரின் ஊழலை வெட்டவெளிச்சமாக்கிய கோபத்தில் ஐம்பதுகோடி ரூபாயில் நடிகைக்கு வீடுவாங்கிய விவகாரத்தை சொல்லியதில் கோபமடைந்து இப்படி குண்டாஸ் போடுவது எந்தவகை நியாயமோ? இங்கே உள்ள மனித உரிமை குழுக்கள் என்ன செய்கின்றார்கள்? பத்திரிக்கை சுதந்திரம் பறிபோவதை வேடிக்கை பார்க்கவா இவர்கள் பதவியில் இருக்கின்றார்கள்? பெண்களை கொச்சைப்படுத்திய எஸ் வீ சேகர் மீது இதுவரை என்ன நடவடிக்கியை போலீஸ் மேற்கொண்டது என்று சொல்ல முடியுமா? போலீசின் அராஜகத்தை கண்டிக்க தமிழகத்தில் யாருக்குமே துணிவில்லைபோலும் மீசையை வைத்துக்கொண்டு ஆளும் கட்சிக்கு ஜால்றா போடுகின்ற இழி ஜென்மங்களுக்கு இது நியாயமா சொல்லுங்களேன் பார்ப்போம் எத்தனை பத்திரிக்கைகள் இதுபற்றி பேசியுள்ளன என்று சொல்ல முடியுமா/


rsudarsan lic
மே 13, 2024 18:52

ஆமா சவுக்கு சங்கர் இஇதுக்கு முன்னாடி என்ன எதைப்பற்றி பேசினார்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை