உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 தொகுதி தந்தால் உடன்பாடு முரண்டு பிடிக்கும் வி.சி.,

3 தொகுதி தந்தால் உடன்பாடு முரண்டு பிடிக்கும் வி.சி.,

ஒரு பொதுத்தொகுதியும், இரு தனித்தொகுதிகளும்தந்தால் தான் உடன்பாடு என்பதில் கறாராக இருக்கிறது, விடுதலை சிறுத்தைகள் கட்சி.தி.மு.க., கூட்டணியில், கடந்த லோக்சபா தேர்தலில், சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் கிடைத்தன. இம்முறை, பொதுத் தொகுதியான கள்ளக்குறிச்சியுடன், சிதம்பரம், விழுப்புரம் அல்லது திருவள்ளூர் தொகுதிகளை வி.சி., கேட்கிறது.'எங்களை விட சிறிய கட்சிகளுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கும்போது, எங்களுக்கு மூன்று தொகுதிகள் கொடுக்கக் கூடாதா; ஓகே என்றால் கையெழுத்திட வருவோம்' என, தி.மு.க., குழுவினரிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாம், திருமாவளவன் தரப்பு. இச்சூழலில், பேச்சு நடத்த இன்று வருமாறு வி.சி.,க்கு தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேறிய பின், அக்கட்சி தலைவர் திருமாவளவனுடன் பேசாமல் இருந்து வந்தார்செல்வப்பெருந்தகை.தற்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக உயர்ந்து, ஒரே கூட்டணியில் இருக்கிறார். அதனால், இனிமேலும் பகையை தொடர, இரு தரப்பும் விரும்பாத சூழ்நிலையில், வி.சி., பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுன் முயற்சியால், சென்னையில் நேற்று திருமாவளவனும், செல்வப்பெருந்தகையும் சந்தித்து பேசினர்.-- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை