உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் நினைத்தால் தான் முதல்வர் பதவி!

மக்கள் நினைத்தால் தான் முதல்வர் பதவி!

எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் ஒருவரை ஒருவர் குறை கூறுவதைக் கேட்டால், வடிவேல் காமெடி தோற்றுப் போகும்; அந்த அளவிற்கு நகைப்பிற்குரியதாக இருக்கிறது. 'முதல்வராக்கிய சசிகலாவையே மூன்று மாதங்களில் வசைபாடியவர் பழனிசாமி. அவர் துரோகி' என்று, பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.'ஜெ.,வின் மறைவுக்கு பின், தன்னை முதல்வராக்கிய சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்தம் செய்தவர்' என்ற விமர்சனம் பன்னீர்செல்வம் மீது உண்டு. இவர்கள் அ.தி.மு.க., வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்...ஜெ., மறைவுக்கு முன், அவரது தோழி சசிகலா அ.தி.மு.க.,வில் உறுப்பினர் மட்டுமே; கட்சி பதவியில் இல்லை. தேர்தலில் நின்று வெற்றி பெறவில்லை. ஆனால், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இவர்கள், ஜெ.,வின் மறைவுக்கு பின் முதல்வர் பதவி வகித்தது, மக்களின் ஓட்டாலும், ஆதரவாலும் தான். சசிகலா யார், இவர்களை முதல்வர்களாக்க...?ஜெ.,யின் தோழி; சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவர் என்பதே சசிகலாவின் இன்றைய அடையாளம். அவரை அரசியல் பக்கம் வர விடாமல், ஒதுக்கி வைத்திருந்தார் ஜெ.,; ஆனால், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தங்களுக்கு ஆதரவளித்த மக்களை மறந்து, 'சின்னம்மா முதல்வராக்கினார். சின்னம்மாவிற்கு துரோகம் செய்து விட்டார்' என்று கூறுவது, மக்களை அவமதிப்பது போல் உள்ளது.இவர்கள் பதிலளிக்க வேண்டியது, தேர்ந்தெடுத்த மக்களிடம் தான்; சசிகலாவிடம் அல்ல. எம்.ஜி.ஆர்., - ஜெ., போன்ற ஆளுமைகளால் வளர்ந்த கட்சி இது. எம்.ஜி.ஆர்., மக்களை, 'ரத்தத்தின் ரத்தமே' என்றும், ஜெயலலிதா, 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்றும் கூறுவார்.இருவரும் தனி நபர் துதி பாடியது கிடையாது. பன்னீர் செல்வமும், பழனிசாமியும் மாறி மாறி, 'சசிகலாவுக்கு துரோகம் செய்து விட்டார்' என்று புலம்பாமல், உங்களை நம்பி, உங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்மை செய்ய பாருங்கள்; ஏனெனில், மக்கள் நினைத்தால் மட்டுமே நீங்கள் முதல்வராக முடியும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

K.Ramakrishnan
ஜன 06, 2024 00:01

ஓ.பி.எஸ்.க்கு எப்படி அவரது பிள்ளைகள் வளமானார்களோ... அதே போல எடப்பாடிக்கு அவரது சம்பந்தி வளமாகி விட்டார். பெருந்தலைவர் சொன்னது போல, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் இவர்கள் இருவரும் மாமட்டைகள்....இருவருமே யோக்கியர் கிடையாது. இன்றைய அரசியல்வாதிகளை பார்க்கும் போது.... எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள்... இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள்... என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது...


M Ramachandran
ஜன 05, 2024 20:49

ஒப்பீடு வெல்லாம் வேண்டாம் காக்கா கடி கடித்தவனும் முழுசா முழுங்கி யேப்ப்பம் விட்டவனும் செய்த செய்யல் ஒன்றெ. அதன் பெயர் திருட்டு


M Ramachandran
ஜன 05, 2024 20:47

மக்கள் மதிக்கும் படி ஏதாவது செய்திருக்கிறீர்களா? மக்களை சந்திக்க


Kadaparai Mani
ஜன 05, 2024 14:00

தினசரி அதிமுக எதிர்ப்பு செய்திகள் போடுவதில் இருந்தே புரியும் உண்மை அரசியல் நோக்கர்களுக்கு .இவர்கள் நினைப்பு என்றும் நிறைவேறாது .அதிமுக செல்வாக்கை பத்திரிகை காட்சி ஊடகங்களால் அழிக்க முடியாது .


M Ramachandran
ஜன 05, 2024 13:39

அதற்க்கு தானெ தேர்தலில் பல தகிடுதித்தம் ( ஏமாற்று வேலை ) செய்வது


Rajah
ஜன 05, 2024 11:51

திமுகவோடு ஒப்பிடும்போது எம்ஜிஆர் ஆட்சி கொஞ்சம் பரவாயில்லை. சிறந்த ஆட்சியை எம்ஜிஆர் தந்தார் என்று சொல்ல முடியாது. ஜெயாவின் ஆடசி என்று சொல்வதைவிட சசி ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும். சசி இல்லாமல் ஜெயா இல்லை. இந்த உண்மையை மறைத்து சசியால்தான் ஜெயாவின் பெயர் போனது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஊழல் இருவருமே சேர்ந்துதான் செய்தனர். எதனை அமைச்சர்கள் சசியின் காலில் மண்டியிட்டு விழுந்தார்கள் என்பதை பழைய வீடியோக்களை பார்க்கவும். ஒரு நல்ல தலைவரிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு பிஜேபியோடு சேர்ந்து இவர்கள் இருவரும் விலகினால் கட்சி உருப்படும்.


duruvasar
ஜன 05, 2024 11:25

சகோதரி அவர்களே நீங்கள் கூறியிருப்பது நிதர்சனம். ஆனால் 55 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட இரு திராவிட கட்சிகளுக்கு " அரசியல் புத்திசாலிதனம்" அதாவது (political acumen) என ஆங்கிலத்தில் சொல்லப்படும் உணர்வு அவர்களின் டி என் ஏ வில் கிடையாது. அதில் கருணாநிதி, எம் ஜி ஆர் , ஜெயலலிதா இந்த மூவரும் விதிவிலக்கு. இவர்களை தவிர்த்து தற்சமயம் இந்த கட்சிகளை நடத்துபவர்கள் இடம் மேற்சொன்ன ஆளுமை மருந்துக்கும் கிடையாது. சிறையில் இருக்கும் ஒருவரையும், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரையும் இன்னும் அமைச்சரவையில் தொடர அனுமதித்துள்ளது கைமேல் கிடைக்கும் உதாரணம்.


Bharathi
ஜன 05, 2024 11:11

No more MKS EPS OR OPS time has come for IPS????


Bharathi
ஜன 05, 2024 11:11

No more MKS EPS OR OPS time has come for IPS????


ஆரூர் ரங்
ஜன 05, 2024 09:16

இந்திரா தேர்தலை சந்திக்காமலே நியமன ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த போதே பிரதமராகி மந்திரிகள், அதிகாரிகளை நியமித்தார். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியும் உண்டு. அது போல சசி தான் எம்எல்ஏ வேட்பாளர் பட்டியலை தயாரித்தவர். அவர் காலில்???? விழுந்துதானே இருவரும் முதல்வராகினர்? . அப்பறம் என்ன நியாயம் பேசறாங்க?


மேலும் செய்திகள்