உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனுமதியின்றி ‛சிவராத்திரி.... பாடல் : வனிதா மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா

அனுமதியின்றி ‛சிவராத்திரி.... பாடல் : வனிதா மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா

சென்னை : வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்துள்ள ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் தனது அனுமதியின்றி ‛சிவராத்திரி...' பாடலை பயன்படுத்தியாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் இப்போது வரும் புதிய படங்களின் பாடல்கள் ஹிட்டாகிறதோ இல்லையோ... பழைய படங்களின் பாடல்களை பயன்படுத்தி வரவேற்பை பெற்று வருகின்றனர். சமீபகாலமாக இந்த போக்கு அதிகமாகி வருகிறது. குறிப்பாக இளையராஜாவின் பாடல்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வப்போது சர்ச்சைகளும், வழக்கு பாய்வதும் தொடர்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wpxuo9pp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0‛அனுமதியின்றி எனது பாடல்கள் பயன்படுத்துதாக' சில படங்களுக்கு நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பாக மலையாள படமான ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் இடம்பெற்ற ‛கண்மணி அன்போடு காதலன்...' பாடல், அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி' படத்தில் இடம்பெற்ற ‛ஒத்த ரூபா தாரேன்...' பாடல் உள்ளிட்டவைகளுக்காக படக்குழு மீது நஷ்டஈடு கேட்டு இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, ராபர்ட் மாஸ்டர் உடன் இணைந்து அவர் நாயகியாகவும் நடித்துள்ள படம் ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. இதை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்தப்படம், இன்று(ஜூலை 11) ரிலீஸாகி உள்ளது.இதில் கமல் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் வெளியான ‛மைக்கேல் மதன காமராசன்' படத்திலிருந்து ‛சிவராத்திரி...' என்ற பாடலை பயன்படுத்தி உள்ளனர். இந்த பாடலை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இல்லையேல் நஷ்டஈடு கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள் அன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.இதனிடையே இந்த படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக படக்குழுவினர் இளையராஜாவிற்கு நன்றி கார்டு போட்டுள்ளனர். மேலும் பாடலை அனுமதி பெற்று பயன்படுத்தியதாக வனிதா தரப்பில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

visu
ஜூலை 11, 2025 19:39

அந்த படம் 4 நாளைக்கு மேல ஓடி இருக்காது இப்படி வழக்கு போட்டு பிரபல படுத்தினால் 6 நாள் ஓடும் நிலை வந்துடும்


Barakat Ali
ஜூலை 11, 2025 18:37

இவர் வழக்குப்போடுவதன் மூலம் இவருக்கு சட்டப்படி நிவாரணம் கிடைக்கும் என்றால் அதில் என்ன தவறு ???? வயசாயிருச்சு, இவரோட மகளே தவறிட்டாங்க ன்னெல்லாம் பேசுறது தப்போ தப்பு .... அது அவரோட பர்சனல் விஷயம் ....


N Srinivasan
ஜூலை 11, 2025 16:37

வயதிற்கு ஏற்ற முதிர்ச்சி இல்லை. பட்டப்பெயரில் மட்டும் ஞானி என்று இருந்தால் போதாது.


தியாகு
ஜூலை 11, 2025 18:10

ஏன் உன் வீடும் நிலங்களும் வாகனங்களும் திறந்த வெளியில் பூமியில்தானே இருக்கிறது. அது எல்லோருக்கும் சொந்தம் யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று சொல்லேன் பார்ப்போம். உழைப்பின் வலி தெரியாத உன்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் ஞானிகளை புரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டம்தான்.


R.P.Anand
ஜூலை 11, 2025 15:34

பல ஆண்டுகளாக ஒரு இரும்பு துண்டு சாலையில் கிடப்பதை ஒரு வாகனம் ஏற்றி சென்றால் அதற்கும் வரி கட்ட வேண்டும்.


Sivasankaran Kannan
ஜூலை 11, 2025 13:07

உங்களை சொல்லி குற்றமில்லை - திராவிட மூளையாக உங்களை மாற்றிய கல்வி முறை பற்றி சொல்ல வேண்டும்.. தெருவில் உங்கள் வீடு உள்ளதால் அது பொது சொத்து.


எஸ் எஸ்
ஜூலை 11, 2025 12:54

எம்ஜிஆர், சிவாஜி பாடல்களும் பாடல் காட்சிகளும் எத்தனையோ படங்களில் வந்து கலக்கி உள்ளன. எம் எஸ் வி யோ கே வி மகாதேவனோ ஆட்சேபம் தெரிவித்து கேஸ் போட்டதில்லை


Narayanan
ஜூலை 11, 2025 12:47

ஒரு பாடல் பொதுவெளிக்கு வந்தது விட்டாலே அது பொது சொத்து . யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் . அந்த பாடலுக்கு இசை அமைக்க கூலியும் வாங்கியபின்னர் எப்படி தனி உரிமை கொண்டாடமுடியும் ? பாடல் இயற்றிவரின் பங்கு இல்லையா ? பாடல் பயன்படுத்துவதை பெருமையாக கொள்ளவேண்டும் . இப்படி முதிர்ச்சி இல்லாமல் நடக்கக்கூடாது இளையராஜா அவர்களே .


தியாகு
ஜூலை 11, 2025 14:41

உன்னை மாதிரி ஆட்கள் இருக்கும்வரையில் இந்தியா முன்னேற வாய்ப்பில்லை. வெளி நாடுகளில் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்பாளர்களும், கலை சார்ந்த காப்புரிமை கொண்டுள்ளவர்களுமே பணக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் இந்தியாவில் மட்டுமே ஊழல் செய்பவர்களும், அடுத்தவர்கள் சொத்தை ஆட்டையை போடுபவர்கள் மட்டுமே பணக்காரர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் நிறைய திறமையான இந்தியர்கள் நாட்டை விட்டு ஓடி போகிறார்கள். ஏன், நீ ஏதாவது ஒரு கண்டுபிடிப்பையோ, கலை சார்ந்த படைப்பையோ படைத்துவிட்டு மக்களுக்கு இலவசமாக கொடுங்களேன் பாப்போம். அப்போது தெரியும் உழைப்பின் வலி.


Keshavan.J
ஜூலை 11, 2025 15:58

if he has copy rights for all his songs, he can file a case against anyone who uses it. MSV and K. V Mahadevan may not have copy rights for their song.


Anantharaman Srinivasan
ஜூலை 11, 2025 12:41

உபயோகித்துக்கொள்ள ஒரலாக oral இளையராஜா ஒத்துக்கொண்டார் என்று சொன்னால் கேஸ் என்ன ஆகும்..?