உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை: ஐகோர்ட் கருத்து

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை: ஐகோர்ட் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இசை மும்மூர்த்திகளை எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம்; ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை' என, ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.4,500 படல்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா. அவரது பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக, காப்புரிமை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என கோர்ட் தீர்ப்பளித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=id7w2ysu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்.,10ம் தேதி, ஐகோர்ட் நீதிபதிகள் ஆர் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா தரப்பு வக்கீல், 'இளையராஜா அனைவருக்கும் மேலானவர்' என்ற கருத்தை முன்வைத்தார். பின் இந்த வழக்கு விசாரணை 17 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் நீதிபதி ஆர். மகாதேவன், 'இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம்; ஆனால் நீங்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை அப்படிச் சொல்வதைக் கேட்க முடியாது' என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

venkataraman vs
ஏப் 21, 2024 09:57

இளையராஜாவுக்கு பரந்த மனப்பான்மை இல்லை என்பது இன்னுமொரு தடவை நிரூபணம் ஆகியிருக்கிறது எக்கோ கம்பெனியின் ஓனரும் இவர்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்


Sivagiri
ஏப் 20, 2024 12:15

அதே காலத்தில்தான் எம் எஸ் விஸ்வநாதன் வாழ்ந்தார் , அவர்களின் மேதாவித்தனத்திற்கு அவர்களின் பரந்த மனமே சாட்சி இசை என்பது கவிதையை கொண்டு செல்லும் வாகனம்தானே , கவிதை என்பதும் நல்ல கருத்துக்களை தத்துவங்களை சுமந்து செல்லும் வாகனம்தான் இசை வித்வான்கள் , வாகன ஒட்டித்தான் , - - அதுவும் இளையராஜா போன்றவர்கள் சினிமா இசை அமைப்பாளர்கள்தான் , ஒரு ஐந்து வருஷம் போனால் இளையராஜா , என்றால் யார் என்று கேட்பார்கள்


JeevaKiran
ஏப் 19, 2024 23:51

கரெக்ட் பட தயாரிப்பாளர்களுக்கு தான் எல்லா உரிமையும்


VT Tech Tamil
ஏப் 19, 2024 22:44

இளையராஜா மேலானவர் என்று வழக்கறிஞர் சொன்னால், வழக்குக்கு முன்னரே இளையராஜாவுக்கு சொல்லாமல் கோர்ட்டில் சொல்வாரா? பயன்படுத்திக் கொள்ளத் கொடுத்த பிரசாத் ஸ்டூடியோவையே வளைத்துக் கொண்டு உரிமையாளர் மேலே வழக்கு தொடர்ந்த மேலானவர் தான் இந்த இளையராஜா சக மனிதரை மதிக்கத் தெரியாத மேலானவர் தான் இந்த இளையராஜா இசைஞானம் என்பது யாருக்கும் கிடைக்கலாம் அவர் இருந்த காலத்தில் போட்டி இல்லை அதனால் வெளியே எக்ஸ்போஸ் ஆனார் ஆனால் இப்போது ஒவ்வொருவரும் ஒருவகையில் இசைஞானிகள் தான் சொல்லப்போனால் அவர் ஒரு மேலான மனநலம் பாதிக்கப்பட்டவர்


spr
ஏப் 19, 2024 18:25

இளையராஜா சிறப்பாக இசையமைக்கிறார் என்பதில் சந்தேகமில்லை அதனால்தான் அவருக்கு வாய்ப்புக்களும் அதிகரிக்கிறது ஆனாலும், படத்தயாரிப்பாளரே முதலீடு செய்து எடுப்பதால் இசையமைப்பாளர் பாடலின் இசைக்கு உரிமை வேண்டுமென நிபந்தனை போட்டு, படம் எடுப்பவர் அதனை பாடல் எழுதியவர் அனுமதியுடன் ஏற்காத வரை படம் தொடர்பான அனைத்து உரிமைகளும் படம் எடுப்பவருக்கு மட்டுமே சொந்தம் இசையமைப்பாளர் உள்ளிட்ட எவருமே அவர் சேவைக்கான கூலியை பெற்றுத்தான் பணியாற்றுகிறார் இலவசமாக அல்ல அதன் பின் அந்த சேவைகள் அனைத்துமே கூலியைத் தரும் படத்தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தம் அவர்கள் சிறப்பாகப் பணி செய்யவில்லையென்றால் அடுத்த வாய்ப்பில்லை படத்தின் விளம்பரத்திற்காக அவை மக்களை சென்றடைய வேண்டும் என்ற வகையில் அப்பாடல்கள் வெளியிடப்பட்டால், அப்பணிக்கான வருமானம் விளம்பரம் செய்ய படத் தயாரிப்பாளர் அவர்களுக்குத்தான் பணம் தர வேண்டும் பெற்றால் அதுவும் கூடப் படத் தயாரிப்பாளருக்கே ஒரு பாடல் வெற்றிகரமாக அமைந்தால் அது பாடலை எழுதியவர், இசையமைத்தவர் மற்றும் பாடியவர்களின் கூட்டு முயற்சி இளையராஜாவின் இந்தக் கோரிக்கையை ஏற்றால், அடுத்துப் பாடல் எழுதியவர், பாடியவர் தனக்கு உரிமை கோருவார் யாருக்கு உரிமை தர முடியும்?


Rajkumar Ramamoorthy
ஏப் 19, 2024 10:08

இளையராஜா அவர் இசை ஞானி தான் ஒரு ஒரு பாட்டும் வைரமே காலா காலத்துக்கும் பணம் வரும் என்று எக்கோ கம்பெனி எதிர்பார்க்கிறது இரண்டு பேருக்கும் சரியான தீர்ப்பு அளிக்கட்டும்


Rahulakumar Subramaniam
ஏப் 18, 2024 20:26

எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களை பழி தீத்தவர் இளையராஜா


Venkat Raman
ஏப் 21, 2024 20:47

yes


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 18, 2024 19:17

நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று இளையராஜா சொல்லவில்லை அவர் சார்பாக கோர்ட்டில் வாதாடும் வக்கீல் ஒரு உவமானதிற்காக, தயாரிப்பாளர், ரெக்கார்டிங் கம்பெனி இவர்களைவிட இளையராஜாவே உயர்ந்தவர், இவர்களை விட இளையராஜாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் அப்படிச் சொன்னார் நம்ம நீதிபதிகள் அதீத கற்பனை உள்ளவர்கள் செய்தியாளர்கள் அர்த்தத்தையே மாற்றி எழுதும் வல்லமை உள்ளவர்கள்


rama adhavan
ஏப் 19, 2024 23:47

வாதியின் வக்கீல் சொல்வது வாதியையும் கட்டுப்படுத்தும் அப்படிதான் நீதிமன்றத்தில் வக்காலத்தில் கைஎழுத்து போட்டுக் கொடுக்க வேண்டும் இல்லை எனில் வக்கீல் ஆஜர் ஆக மாட்டார்


Lion Drsekar
ஏப் 18, 2024 13:59

சுதந்திர போராட்ட வீரர்கள் எதையும் எதிர்பார்க்காமல் குடும்பம், சொத்து, உயிர் என்று ல்லாவற்றையும் தியாகம் செய்து அணுஅணுவாக சித்திரவதை அனுபவித்து உயிர்துறந்து பெற்று கொடுத்த சுதந்திரம் இன்று ? அதே போல் புலவர்கள் , ஆன்மீகப்பாடல்களை இறைவனோடு இரண்டராக் கலந்து பாடிய அந்த பாடல்களை ஒருநாளும் அவர்கள் அவைகளை விற்கவேண்டும் என்ற நோக்கத்தில் புனைந்ததே இல்லை, மாறாக அவர்களின் பாடலை இன்று பாடுபவர்கள் அனைவருமே வருமான வரி கட்டுபவர்கள் ஆன்மீகத்தில் விளைந்தது ஆன்மீகமாகவே இருக்கும், வியாரை அளவில் வளர்ந்தது என்றைக்குமே வியாபாரம் தான் வந்தே மாதரம்


ஆரூர் ரங்
ஏப் 18, 2024 12:37

தயாரிப்பாளர் பணம் கொடுப்பது படத்தில் பயன்படுத்த மட்டுமே. தியேட்டருக்கு வெளியே பயன்படுத்த முடியாது. இணைய வசதிகள் இல்லாத காலத்தில் டேப் சிடி யில் வெளியிடும் உரிமையை ஆடியோ நிறுவனத்துக்கு விற்றார். அது SPORTIFY, AMAZON போன்றவற்றில் WEB ஒலிபரப்பி சம்பாதிக்க அல்ல. அந்த உரிமை இசையமைப்பாளரிடமே இருக்கும். எதிர்கால அறிவியல் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் ஒப்பந்தம் போடப்பட்டது தவறாகப் போய்விட்டது.


vijayakumar
ஏப் 18, 2024 13:05

பிரதர், he is using many Ragas - did he invented themNext we buy many medicines, even softwares when we buy they are NOT with a time year This is not a medicine , expiry date The patents are d for a fixed time only not for lift time Once he sold them , then the songs in that picture belongs to the producer not to him Producer gave a job for a price & he did for a price Why he is rattling


rama adhavan
ஏப் 19, 2024 23:56

தவறு தானாக இசை ஆல்பம் இசை அமைப்பாளரின் கற்பனை, படைப்பு ஆனால் சினிமாவில் அப்படி இல்லை இங்கு இசை பலரின் உழைப்பு கதை அமைப்பை கேட்காமல் இசை அமைக்க முடியாது பாடுபவர் குரல், கருவி இசைப்பவர்கள், நடிப்பு, செட்டிங், கதை ஆகியவை தேவை இவரது புகழ் பெற்ற தனிப்பட்ட பாடல்கள் எதுவுமே இல்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை