உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகனுக்கு சீட் தராததால் எனக்கு அதிருப்தி இல்லை: அப்பாவு விளக்கம்

மகனுக்கு சீட் தராததால் எனக்கு அதிருப்தி இல்லை: அப்பாவு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் போட்டியிட தனது மகனுக்கு சீட் வழங்காததால் நான் அதிருப்தியில் இருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறினார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது: திருநெல்வேலி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதாலோ, எனது மகனுக்கு சீட் வழங்கவில்லை என்பதாலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து திமுக தலைவர் முடிவுகளை எடுக்கலாம். திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 44 பேர் விருப்ப மனு அளித்தனர். ஆனால் அது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு போட்டியிட சீட் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலினை சந்தித்து அழுத்தம் கொடுக்கக்கூடிய அளவிற்கு விவரம் இல்லாதவன் நான் இல்லை . இவ்வாறு அப்பாவு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sun Mohan
ஏப் 03, 2024 21:25

உம்மை,யாரு கேட்டா????


Akshay
ஏப் 03, 2024 16:50

அட பாவமே


Palanisamy Sekar
ஏப் 03, 2024 16:31

கண்களின் வேர்வையை எவரிடம் சொல்வார் பாவம் அப்பாவு ஸ்டாலினை குஷிப்படுத்த ஆளுநரை எவ்வளவோ கேவலம் செய்தும் கூட கல்நெஞ்சு கரையாமல் மந்திரி போஸ்டும் தராமல் மகனுக்கும் சீட் கொடுக்காமல் உண்டபின் ராப்பகலாய் தூக்கம் தொலைத்த கதையை எங்கு சொல்வார் அப்பாவு அப்பாவி அப்பாவு


Narayanan
ஏப் 03, 2024 15:47

அப்படியா


Raa
ஏப் 03, 2024 15:46

அதிருப்தி இருந்தால் மட்டும் என்ன பண்ணி இருப்பீர்கள்? காமடி பண்ணாதீங்க


Jysenn
ஏப் 03, 2024 15:25

Radhapuram and his son will get Nanguneri Dmk dynasty


Duruvesan
ஏப் 03, 2024 15:11

மக்கள் அல்வா குடுப்பாங்க னு விடியலுக்கு


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ