உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு வெற்றியால் அரசியல் கட்சிகளின் மனநிலையில் மாற்றம்!

ஈரோடு வெற்றியால் அரசியல் கட்சிகளின் மனநிலையில் மாற்றம்!

டில்லி சட்டசபை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் கட்சிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின் போது, கூட்டணிகள் மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், பல பார்முலாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அது மட்டுமின்றி, கூட்டணி மாறும் போது, தங்களுக்கு கூடுதல் 'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறிய கட்சிகளும் குதுாகலமாக உள்ளன.இது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க., தலைமையில் ஒரு கூட்டணியும் களம் இறங்கின. நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hkm5fajy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுத்ததாக, 2024ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிய பா.ஜ., அதன் தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்தது.அதனால், மூன்று கூட்டணிகள் மோத, நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து களமிறங்கியதால், நான்கு முனைப்போட்டி நிலவியது. இதில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தோல்வியை சந்தித்த அ.தி.மு.க., இனி எந்த தேர்தலிலும், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தது. இது, தி.மு.க.,வுக்கு உற்சாகத்தை அளித்தது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இல்லை என்றால், தேர்தல் களம் எளிதாகும் என்பது தி.மு.க., மேலிடத்தின் கணக்கு. இந்த சூழ்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் துவக்கினார்.வரும் சட்டசபை தேர்தலுக்கு நடிகர் விஜய், தன் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கினால், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி ஓட்டுகள் சிதறும். அதனால், தற்போதுள்ள கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தால், மீண்டும் எளிதாக ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்பது தி.மு.க., தலைமையின் நம்பிக்கை. எனவே, சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகள் வெற்றி இலக்கு என்ற கோஷத்துடன், ஆளுங்கட்சி தேர்தல் பணிகளை தற்போதே துவக்கி விட்டது. அதேநேரத்தில், தி.மு.க.,வின் 200 தொகுதிகள் இலக்கு, கூட்டணிகட்சிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., தேர்தலின் போது தங்களுக்கு தாராளமாக தொகுதிகளை ஒதுக்குமா; கேட்கும் தொகுதிகளை தருமா என்ற சந்தேகமும் அக்கட்சிகளுக்கு உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், டில்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் வாயிலாக, அக்கட்சியின் செல்வாக்கு குறையவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது. அதேபோல, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த இடைத்தேர்தலை விட அதிக ஓட்டுகள் பெற்று, பல கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, தி.மு.க.,வில் உள்ள கூட்டணி கட்சிகள் இதில் மகிழ்ச்சி அடைந்துள்ளன. 'நம் ஆதரவு இல்லை என்றால், வரும் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறுவது கடினம்; எனவே, அதிக சீட்டுகளை கேட்கலாம். தி.மு.க., கூடுதல் தொகுதிகள் தர மறுத்தால், அ.தி.மு.க., - த.வெ.க., என, அக்கட்சிகளின் தலைமையிலான கூட்டணிக்கு செல்லலாம்' என்ற மனநிலைக்கு வந்துள்ளன. இதற்கிடையில், கூட்டணி இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை அ.தி.மு.க., மேலிடமும் உணர்ந்துள்ளது. அதனால், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. அது நடக்காவிட்டால், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளுடன் அணி சேரவும் தீர்மானித்துள்ளது.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கடந்த 7ம் தேதி நடந்த ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசன் பேசுகையில், 'பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக, ரகசிய பேச்சு நடந்து வருகிறது.'தற்போது வெளிப்படையாக எதையும் கூற முடியாது. கண்டிப்பாக வரும் தேர்தலில் பலமான கூட்டணி அமையும்' என்றார். இதன் வாயிலாக, பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல, விஜயின் த.வெ.க.,வும் பல கட்சிகளுடன் பேச்சை துவக்கி உள்ளது. இந்த சூழ்நிலைகளை பார்க்கையில், சட்டசபை தேர்தலின் போது, கட்சிகள் சில கூட்டணி மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கேற்ற வகையில், தொகுதி பங்கீடு உள்ள பேச்சுகளை நடத்த, பல கட்சிகள் பார்முலாக்களுடன் ஆயத்தமாகி வருகின்றன. மாறி வரும் நிலவரத்தால், தங்களுக்கு கூடுதல் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறிய கட்சிகளும் குதுாகலமாக உள்ளன. இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் கூறின.

'200 இலக்கை துவக்கி வைத்த ஈரோடு கிழக்கு'

தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று எழுதி உள்ள கடிதம்:ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாருக்கு, மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். இது, தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் சான்றிதழ். மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.அதை விட மக்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை உள்ளது. நேரடி பிரசாரத்திற்கு நான் செல்லாத போதும், என் வேண்டுகோளை ஏற்று, பெருவாரியான ஓட்டுகளை அளித்து, 90,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, எதிர்த்து நின்ற அனைவரையும் டிபாசிட் இழக்கச் செய்திருக்கின்றனர்.வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., அணி, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், 'வெல்வோம் இருநுாறு - படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை நான் முன் வைத்தேன். இருநுாறு இலக்கு என்பதற்கான துவக்க வெற்றியாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமைந்துள்ளது. மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தி.மு.க., அரசு, மத்திய அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசிடம் நிதியும் இல்லை: நீதியும் இல்லை. வஞ்சிப்பது பா.ஜ., அரசின் வழக்கம்.அதை எதிர்கொண்டு, தமிழகத்தை வாழ வைப்பது தி.மு.க.,வின் வழக்கம். ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி பயணம், 2026 சட்டசபை தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில், தி.மு.க., அரசின் செயல்பாடுகள் அமைந்திடும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 10, 2025 22:18

திமுக அணியில் திருமா இல்லை. அவராக விலகட்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அவர்கள் வெளியேற்றட்டும் என்று திருமா இருக்கிறார். தொகுதி பங்கீடு பேச்சு வரும் போது, வேண்டுமென்றே அதிகமா சீட் கேட்டு பிரச்னை பண்ணுவார். தூரத்தி விடுவார்கள். விஜய் அல்லது அண்ணாமலை வீட்டு வாசலில் போயி திருமா நிப்பான். வேறு எந்த கட்சியும் திமுக வை விட்டு விலகாது. பாஜக வின் திட்டம் நிறைவேறி பாமக உடைந்தால் ராமதாஸ் நேரா ஸ்டாலின் அவர்களின் வீட்டு வாசலுக்கு வருவான். திருமா போயிட்டான் ன்னா, பிரேமலதா வும் ஸ்டாலின் வீட்டு வாசலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இப்பவே அந்தம்மா, பாஜக கூட கூட்டணி இல்லை ன்னு சொல்லிடுச்சி. இ பி எஸ் இதுக்கப்புறம் பாஜக வுடன் கூட்டணி வைத்தால் இப்போ இருக்கும் 66 சீட் கூட ஜெயிக்க மாட்டார். இ பி எஸ் சுடன் விஜய் கூட்டணி வைத்தால், திமுக வெற்றி உறுதி மற்றும் பாஜக நோட்டாவுக்கு கீழே போயிடும். இ பி எஸ் விஜய் பாஜக ஒரு போதும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. சங்கிகள் ரொம்ப ஓவராக நாதக வைத் தூக்கி விட்டு விட்டார்கள். சீமானை கூட்டணி க்கு அழைத்தால் அவன் வர மாட்டான் சீமான் கட்சி நடத்துவது காசுக்காக, வெற்றி பெறுவதற்காக அல்ல.


madhes
பிப் 10, 2025 18:28

பிஜேபி கட்சில இருந்து அண்ணாமலையை தூக்கி கடாசுவானுங்க, அப்புறம் அதிமுக கூட கூட்டணி னு சொல்லுவானுங்க, கடைசில அண்ணாமலை , அதிமுக காரன் , பிரேமலதா எல்லாம் காச வாங்கிட்டு பொத்திகிட்டு இருப்பானுங்க


madhes
பிப் 10, 2025 18:25

பிஜேபி கூட ஒருத்தனும் சேர மாட்டானுங்க, அண்ணாமலை ஓடப்போறார்,


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 10, 2025 15:07

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் .... அதில் திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியைத் தவிர தேர்தலைப் புறக்கணித்த எந்தக்கட்சிக்கும் தனது வாக்கு சதவிகிதத்தை இத்தேர்தல் மூலம் வெளிப்படுத்திக் கொள்ளும் துணிவில்லை .....


Anbuselvan
பிப் 10, 2025 15:00

கார்டூனில் அதிமுக பிஜேபி யை அணுகுவதாக சித்தரிக்கப் பட்டுள்ளதே? அப்படியா


BHARATH
பிப் 10, 2025 14:41

joseph தி மு க கைக்கூலி. அவனை பிஜேபிக்கு இழுக்க கூடாது. அவன் ஒரு மொத்த செல்லா காசு


R.PERUMALRAJA
பிப் 10, 2025 14:22

யாருக்கு மாற்றம் வருகிறதோ இல்லையோ சீமானுக்கு மற்றம் வரவேண்டும் , சாணக்கித்தனம் வேண்டும் , ஆந்திராவின் பவன்கல்யாண் போல ..இல்லையெனில் , தனியே நின்று போராடி , மைக் முன் கத்தி கத்தி வயதாகும் பொழுது 90 வயதில் தான் ஆட்சியை பிடிப்பார் . அண்ணா துரை பல வருடம் கஷ்டப்பட்டு ஆட்சியில் அமர்ந்தவுடன் தீய சக்தி கட்சியையும் ஆட்சியையும் அபகரித்து போல , 90 வயதில் சீமான் ஆட்சியை பிடித்து பின் சிறிதுகாலத்தில் அவரது கட்சியை சேர்ந்த வேறொருவர் கட்சியை அபகரித்து கொள்வார் .


K.Ramachandran
பிப் 10, 2025 13:46

The NDA alliance that coned the 2021 assembly election has a good chance of winning the elections in 2026. However, ADMK will have to part many more seats to the various other alliance partners for this alliance to happen. Something like ADMK coning 117 seats and leaving the other 117 seats to other alliance partners can be a good deal.


KavikumarRam
பிப் 10, 2025 11:46

///எதிர்த்து நின்ற அனைவரையும் டிபாசிட் இழக்கச் செய்திருக்கின்றனர்./// என்னது எதிர்த்து நின்ற அனைவரையுமா. எதிர்த்து ஒரே ஒருத்தன் தான நின்னது. அதுலயும் டெபாசிட் போனாலும் அவன் இருவத்துமூவாயிரம் ஒட்டு வாங்கிருக்கான். ஒன்னும் புரியாம என்னத்தையாவது உளர்றது.


kantharvan
பிப் 10, 2025 14:45

குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு வாக்கு வாங்க வில்லையெனில் கட்டுத்தொகையை இழக்க வேண்டியதிருக்கும் இதுதான் தேர்தல் விதி வேட்பாளர்கள் நானூறுக்கும் மேல் கட்டு தொகையையும் வெற்றியையும் தனதாகியவர் ஒருவரே? அவர் திமுக சந்திர குமார்? தெரியாதவனெல்லாம் டம்ளர் தர்க்குறி?


V வைகுண்டேஸ்வரன்
பிப் 10, 2025 22:07

திமு வேட்பாளரை எதிர்த்து 46 பேர் போட்டியிட்டார்கள். திமுக வேட்பாளர் 74.25% வாக்குகள் பெற்றிருக்கிறார். 1,45, 000 வாக்குகளில் 23,000 வாக்குகள் என்பது வெறும் 15.7% தான். 74 எங்கே 15 எங்கே? ஒன்னும் புரியாம என்னத்தையாவது உளர்றது நீங்க தான். ஈரோடில் போட்டியிட்டவர்கள் 47 பேர். டெபாசிட் இழந்தவர்கள் 46 பேர். மீண்டும் 3 நாள் முந்தையத படிக்கவும். பிறகு வந்து ஒன்னும் புரியாம என்னத்தையாவது உளறவும்.


mindum vasantham
பிப் 10, 2025 11:44

தா வே க மற்றும் பிஜேபி கூட்டணி அமைத்து விஜய்க்கு முதல்வர் வாய்ப்பு கொடுக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை