உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பொருநையை போற்றுவதாக போட்டோ ஷூட்டில் ஆர்வம்

 பொருநையை போற்றுவதாக போட்டோ ஷூட்டில் ஆர்வம்

கடந்த அக்டோபரில், தென்காசி மாவட்டம், கூடலுார் அரசு பள்ளிக்கு, புதிய கட்டடங்களை துவக்கி வைத்தது முதல்வருக்கு ஞாபகம் உள்ளதா? அந்த கட்டடங்களில் தடுப்புச்சுவர் துவங்கி, கழிப்பறை வரை, அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாததாலும், வேறு வகுப்பறைகள் இல்லாததாலும், மரத்தடி நிழலில் மாணவர்கள் படிக்கும் அவலம் நேர்ந்துள்ளது. கணக்கு காட்டவும், காணுமிடமெல்லாம் விளம்பரம் வைக்கவும், ஆட்சியின் கடைசி நேரத்தில் கமிஷன் கல்லா கட்டவும், கஜானாவை வழித்தெடுக்கவும் மட்டுமே, தி.மு.க., ஆட்சியில் திட்டங்கள் துவக்கி வைக்கப்படுகின்றன என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. 'பொருநையை போற்றுகிறேன்' எனும் போர்வையில், 'போட்டோ ஷூட்'டில் மட்டும் ஆர்வம் காட்டி, அரைகுறையாக நான்கு திட்டங்களை துவக்கி வைத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு, வெற்று தம்பட்டம் அடிக்கும் தி.மு.க., அரசு, விளம்பர மோகத்தாலேயே வீழும் நாள் நெடுந்துாரமில்லை. - நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை