| ADDED : பிப் 24, 2024 09:25 PM
சென்னை:தி.மு.க., - எம்.பி., கிரிராஜன், தன் மகன் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வெளியான தகவல் தவறானது என, தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:'போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, எம்.பி., மகனை துரத்தி பிடித்த மக்கள்' என்ற தலைப்பில், என் மகன் செந்தமிழ் குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இது தவறான தகவல்.காட்டாங்குளத்துாரில் உள்ள, தனியார் சட்டக் கல்லுாரியில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், இறுதியாண்டு முடிவதையொட்டி, மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து திருக்கழுக்குன்றம் சாலை வழியே, செங்கல்பட்டு சென்றபோது, அந்த பகுதியை சேர்ந்த சிலர், இருசக்கர வாகனத்தில், மாணவர்கள் காரை முந்திச் செல்ல முயன்றனர்.அப்போது ஏற்பட்ட சிறு விபத்தின் காரணமாக, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், கற்களை எடுத்து எறிந்ததில், என் மகன் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்துவிட்டது. இப்பிரச்னை குறித்து, இரு தரப்பினரிடமும் சமரசம் ஏற்பட்டு விட்டது. இதுதான் உண்மை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.