உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.வெ.ரா., பற்றி அரசு தேர்வில் கேள்விகள் கேட்பது அறிவார்ந்ததா? சீமான் ஆவேசம்

ஈ.வெ.ரா., பற்றி அரசு தேர்வில் கேள்விகள் கேட்பது அறிவார்ந்ததா? சீமான் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஆங்கிலேயர் ஆட்சியில் போராடும் உரிமையாவது இருந்தது. சுதந்திர இந்தியாவில் அந்த உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது,'' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.சென்னையில் போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, சீமான் நேற்று சந்திக்க சென்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதால், கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுடன் மொபைல் போனில் பேசினார். பின், அவர் அளித்த பேட்டி:'வீடு தேடி அரசு' என, பல நுாறு கோடிகளை கொட்டி, தி.மு.க., அரசு விளம்பரம் செய்கிறது. திராவிட கட்சிகள் எப்போதுமே, செய்தி அரசியலை தான் செய்வர். அவர்களுக்கு, சேவை அரசியலோ, செயல் அரசியலோ தெரியாது. ஆங்கிலேயர் ஆட்சியில் போராடும் உரிமையாவது இருந்தது. சுதந்திரம் பெற்ற இந்தியாவில், போராடுகிற உரிமையைக்கூட மறுக்கின்றனர். அடக்குமுறை ஆட்சி நடக்கிறது. இப்போதும், மக்கள் சாலையை தேடி வரும் அளவுக்கு, அவர்களுக்கு அவ்வளவு பிரச்னைகள் உள்ளன. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், 'ஒரு லட்சம் போராட்டத்திற்கு, அரசு அனுமதி அளித்துள்ளது' என்கிறார். அப்படி என்றால், ஒரு லட்சம் பிரச்னைகளை, தி.மு.க., அரசு அளித்திருக்கிறது என்று அர்த்தம். பகுதி நேர ஆசிரியர்கள், அ.தி.மு.க., ஆட்சியில் போராடினர்; நானும் சேர்ந்து போராடினேன். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினும் போராடியதோடு, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம்' என வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றுங்கள் என்று தான் ஆசிரியர்கள் கேட்கின்றனர்.டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வில், 'விடியல் பயணம் எப்போது துவங்கியது' என்றும், ஈ.வெ.ராமசாமி குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. வ.உ.சி., காமராஜர், முத்துராமலிங்க தேவர், நல்லகண்ணு போன்றவர்களை போல், நாட்டின் விடுதலைக்காக ஈ.வெ.ராமசாமி சிறைக்குச் சென்றதில்லை. அப்படி இருக்க, அவர் குறித்த கேள்விகள் அறிவார்ந்தவையா?இவ்வாறு அவர் கூறினார்.மூளைச்சாவு வாயிலாகஉறுப்புகள் திருட்டு? சந்தை பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட நாட்டில், மக்களும் ஒரு பண்டம் தான். ஒருவன் நல்லா இருந்தால், இதயம் 4 கோடி ரூபாய்; கண்கள் 1 கோடி ரூபாய்; சிறுநீரகம் 2 கோடி ரூபாய் போகும். பல நுாற்றாண்டுக்கு முன், மூளைச்சாவு என கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? தற்போது நடக்கிறது. இதயத்திற்கு, சிறுநீரகத்திற்கு, கண்களுக்கு என பணக்காரர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். அதனால், பள்ளி மாணவர்கள் இறப்பிலேயே சந்தேகம் எழுகிறது. அவர்களது உறுப்புகள் திருடப்படுகின்றன. வேண்டுமென்றால், மருத்துவமனைக்குச் சென்று, 'உடல்நிலை முடியவில்லை; எனக்கு யாரும் இல்லை' என கூறிவிட்டு படுத்து பாருங்கள்; உறுப்புகள் இருக்காது.- சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Karthik Madeshwaran
ஜூலை 18, 2025 11:49

பெரியாரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க தான் முடியுமே தவிர, அவர் செய்த சமூக சீர்திருத்த செயல்களை கண்டிப்பாக மறுக்க முடியாது. மறைக்க முடியாது. சீமான்க்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி கொள்ளுங்கள். எங்களுக்கு பெரியாரை பிடிக்கும், நாங்கள் ஏற்று கொள்கிறோம். ராமானுஜர், வள்ளலார், பெரியார் போன்றோர் எந்நாளும் மதிக்க தக்கவர்கள் தான்.


vivek
ஜூலை 18, 2025 15:44

கார்த்திக் அவர்களே...உங்கள் வீட்டில் வளர்ப்பு மகள் இருந்தால் பெரியாரின் கொள்கையை கடைபிடியுங்கள்....அறிவிலி


தமிழ்வேள்
ஜூலை 18, 2025 11:45

மூளைச்சாவு ,உறுப்புத்திருட்டு பற்றி சீமான் சொன்னது உண்மையே ...உறுப்பு தானம் செய்வது இந்துக்கள் மட்டுமே ..ஆப்ரஹாமியர்களுக்கு உறுப்பு இன்றி புதைக்கப்பட்டால் , சுவர்கம் கிடையாது என்ற நம்பிக்கையால் உறுப்பு தானம் செய்வதில்லை .மாறாக உறுப்புதானம் பெறுகிறார்கள் ..இன்று உறுப்பு வியாபாரம் மிக அதிக லாபம் தரும் தொழில் என்பதால் , மூளைச்சாவுகளும் அதிகம் ....செத்தவனுக்கு ஒரு மாலை அரசு சார்பில் போட்டால் தீர்ந்தது கடன் ..ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை வருமானம் , உறுப்பு விற்று பெரும் வருமானம் ..அரசியல்வாதிக்கும் நல்ல வியாபாரம் ..உறுப்பு மாற்ற சிகிச்சை , மூளைசாவுகள் பற்றி தனியாக கோர்ட் ஆராய உத்தரவிட்டால் , பல படுபயங்கரமான உண்மைகள் வெளிவரும் வாய்ப்பு உண்டு ...இங்கு சீமான் சொன்ன அந்த விஷயம் பற்றிமட்டும் எந்த வாசகரும் வாய்திறக்கவில்லையே ? அது ஏன் ?


Karthik Madeshwaran
ஜூலை 18, 2025 11:45

ஈவெரா பற்றி பேச சீமானுக்கு அருகதை இல்லை. ஒருகாலத்தில் கருப்பு சட்டை போட்டு தெரு தெருவாக பெரியாரியம் பேசியவர் இந்த சீமான். தமிழீழ இனப்படுகொலை நடந்த சமயத்தில் ஓங்கி குரல் கொடுத்ததால் ஆதரவாக ஒரு கூட்டம் சேர்ந்தது. பிறகு பிரபாகரன் உடன் ஆமை கறி சாப்பிட்டேன் என்று ஒன்றும் தெரியாத அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்து ஏமாற்றி, பெரியாரியம் திமுக பேசுகிறது, அதை நாமும் பேசினால் அரசியல் செய்ய முடியாது என்று கணக்கிட்டு அதற்கு எதிராக பேச தொடங்கியவர் தான் இந்த வீணாப்போன சீமான். நாங்கள் தான் தமிழர், நீர் தமிழர் அல்ல என்று சாதீய அடிப்படையில்- தமிழ்நாட்டு மக்களிடம் பிரித்தாளும் கொள்கை என்ற நஞ்சை பாய்ச்ச துடிக்கிறார். சரியான அரசியல் புரிதல் இல்லாத மக்கள் இவரது உணர்ச்சிமிக்க பேச்சால் உண்மை தெரியாமல் ஏமாறுகிறார்கள். இவர் பின்னால் போவது தனது தலையில் தானே மண் அள்ளி போட்டு கொள்வதற்கு சமம்.


pmsamy
ஜூலை 18, 2025 10:20

அப்படின்னா பெரியாரைப் பற்றி நீயும் பேசி இருக்க கூடாது உனக்கு முதல்ல அறிவு இருக்கா


vivek
ஜூலை 18, 2025 11:06

pmsamy ..நீ பெரியார் பக்தர் தான்....


rameshkumar natarajan
ஜூலை 18, 2025 10:08

People like Seeman doesnt know the history. Because of periyar only people from many suppressed communites including seeman is able to come out in the society and able to speak ly.


V RAMASWAMY
ஜூலை 18, 2025 08:11

இம்மாதிரி பேத்தல்களைப் புகுத்தத்தான் மத்திய கல்வி திட்டத்தை வேண்டாமென்று ஒதுக்குகிறது இந்த மாடல் அரசு. மக்களை எல்லாவிதத்திலும் குட்டிச்சுவராக்கி முட்டாள்களாக்கி, தமிழ் மட்டும் போதித்து வேறு மாநிலங்களுக்கு செல்லவிடாமல் தடுத்து சொந்த மாநிலத்திலும் வேலையில்லாமலாக்கி கெடுப்பதில் முதலிடம் வகிப்பவர்கள். ஆமாம், திரு சீமான் அவர்களே, ஏன் நீங்கள் ஒரு வழக்கு போட்டு இம்மாதிரி பேத்தல்களைத் தடுக்கக்கூடாது?


ஜூலை 18, 2025 08:06

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க கூடாது என்று சொன்னவர் யார் ? தனக்கு உதவி செய்யவந்த மகள் வயதுடைய பெண்ணை மணந்த கிழவர் யார் ? தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னவர் யார் ? திருக்குறளை தங்க தட்டில் வைத்த ம ம் என்று சொன்னவர் யார் ? என்று கேள்விகள் கேட்கலாம் ..


Parthasarathy Badrinarayanan
ஜூலை 18, 2025 07:54

திராவிடியா ஆட்சியில் கிரிமினல்கள் பற்றி கேள்விகேட்பது சகஜம்


Krishnamoorthy
ஜூலை 18, 2025 07:33

RSS பத்தி கேட்கலாமா


Srinivasan Krishnamoorthy
ஜூலை 18, 2025 09:23

கஷ்டப்பட்டு முட்டு kudukkuringa


Amsi Ramesh
ஜூலை 18, 2025 11:01

கேட்கலாம் அதில் என்ன தப்பு அது என்ன சீன ஆதரவு இயக்கமா? இந்த தேச நலனை மட்டுமே கொண்டு இயங்குகிற நூறாண்டு காணும் உலகின் ஒரே இயக்கம்


raja
ஜூலை 18, 2025 06:22

திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்ட குடும்பத்தை ஆள விட்டால் அனைத்தையும் தான் கொள்ளை அடிப்பான் பிணத்தின் நெற்றியில் வைக்கும் பணத்தை கூட ஆட்டையை போடும் கூட்டம் அது...


சமீபத்திய செய்தி