உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெயலலிதா ஹிந்துத்வா தலைவரா? அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்

ஜெயலலிதா ஹிந்துத்வா தலைவரா? அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மிகச்சிறந்த ஹிந்துத்வா தலைவர் எனக்கூறிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள, அண்ணாமலை அவதூறு பரப்புகின்றார் எனக்கூறியுள்ளது.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று( மே 24) அளித்த பேட்டியில், அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்வா தலைவர். ஹிந்து மதத்துக்கு அவர் நேரடியாக ஆதரவு தெரிவித்து வந்தார். ஜெயலலிதா இருந்தபோது, தமிழகத்தில் பா.ஜ., இருந்தாலும், ஹிந்து மதத்தினரின் ஆதரவு அவருக்கே பெரிதும் கிடைத்து வந்தது. ஹிந்து மதத்தின் வளர்ச்சிக்காக அவர் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார் எனக்கூறியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1ffl7y8p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அண்ணாமலை பேட்டியை படிக்க கிளிக் செய்யுங்கள்:

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/greatest-hindutva-leader-annamalai-tribute-to-j--/3631404இது தொடர்பாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜெயலலிதாவை மதவாத தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்புகின்றனர். அவர் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர். ஜெயலலிதா குறித்து அண்ணாமலை அவதூறு பரப்புகிறார். ஜாதி, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்ட அனைவருக்குமான தலைவராக திகழ்ந்தவரை ஒற்றை மதத்தலைவர் போல் சித்திரிக்கிறார்.தன்னை அடையாளபடுத்தி கொள்ள அவதூறு பரப்பும் வகையில் பேட்டி கொடுப்பதும், ஜெயலலிதா பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே அண்ணாமலை பேட்டி கொடுப்பதும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

shyamnats
மே 28, 2024 09:24

ஜே அவர்கள் இந்துவாக இருந்தார் , கொள்கைகளை கடைபிடித்தார் என்பது யாவரும் அறிவர். அதிமுக வினர் இதை வீம்புக்காக ஏன் எதிர்க்க வேண்டும், அதிமுகவினர் கொள்கைகளால்தான் அக்கட்சி அழிய போகிறது, அக்கட்சிக்கு இப்போதே மூன்று நான்கு தலைகள் இ பி எஸ் , ஓ பி ஸ் , சசிகலா தினகரன் போல. ஒற்றுமையில்லாமல் , ஜெ போல கண்டிப்பான தலைமையில்லாததால் இம்முறை தேர்தலில் காணாமல் போவார்கள்.


Dharmavaan
மே 26, 2024 18:58

ஜெயா விசாரனை போல் கருணாநிதியிடம் ஏன் நடத்தப்படவில்லை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததில் கோர்ட்டின் நேர்மையின்மை


M Ramachandran
மே 26, 2024 12:22

தீய முக்கா வுடன் ஒத்து கும் பழனி அண்ட் கம்பெனி பேச்சால் ஜிந்த்ச்சா போராடு அதுற்கு பதிலாகா நெடுஞ்சாண் கிடையாகா புதிதல்ல ஸ்டாலின் காலில் விழுந்து அந்த கட்சியில் ஐக்கிய மாகி விடலாம். உண்மையில் ஜெயலலிதா அம்மையார் பிறந்ததிலிருந்து கடவுள் பக்தி உள்ளவர். கட்சி ஒட்டுங்கிக்காகா பழனியின் கைகூலியாக செயல் படும் ஜெயக்குமார் அறிக்கை விடுகிறார். இது அபத்தம். மறைந்த சோ அவர்களுக்கு இது நன்றாக தெரியும்.


Sugumar S
மே 26, 2024 10:15

yes


panneer selvam
மே 25, 2024 23:58

Ganga , You made Great discovery of the Century . Be care , someone will knock your door bringing Nobel prize to you


Vijay D Ratnam
மே 25, 2024 20:49

தமிழகத்தில் கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜகதான் வெல்லும் என்று தோன்றுகிறது. நாம் தமிழரை வீழ்த்தி பாஜக உறுதியாக மூன்றாவது இடத்தை பிடிக்கும். தமிழ்நாட்டு மீடியாக்கள் இரண்டு வகை. ஒன்று கட்டுமர கம்பெனி கொத்தடிமைகள். இன்னொன்ரு அண்ணாமலை ரசிகர் மன்ற அல்லக்கைகள். இவிங்க அக்கப்போர் ஜூன் 4 க்கு மேல் ஒரு முடிவுக்கு வரும். ஈறை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்கும் வேலையை ரெண்டு கும்பலும் ரெண்டு வருசமா குடுக்குற கூலிக்கு செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருத்தன் உலக மகா திருடன், இன்னொருத்தன் கமிஷன் ஏஜென்ட். அந்த திருடனை காட்டிக்கொடுத்து கோர்ட் கேசு என்று அலையவிட்டு அப்பால அவன்கிட்ட கமிஷன் வாங்கிகிட்டு கண்டுக்காம விடுபவன். ஆனால் ஜனங்களுக்குத்தான் இவிங்க விளையாட்டு புரிவதில்லை. இவீங்க என்னதான் உருண்டு புரண்டாலும் வெற்றியோ தோல்வியோ தமிழ்நாட்டின் அதிக வாக்கு சதவிகிதம் கொண்ட கட்சி அதிமுக, அடுத்து திமுக. இந்த காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர், பாமக, தமாகா, தமுமுக, விசிக, மதிமுக, தேமுதிக இதெல்லாம் வாய்ச்சவடால் பார்ட்டிகள். யார் வேண்டுமானாலும் ஆசை படலாம். வேல்முருகன், டிடிவி.தினகரன், கமல்ஹாசன், சீமான், டி.ராஜேந்தர், சரத்குமாருக்கு கூடத்தான் முதலமைச்சர் ஆசை இருக்குது. பட் ரியாலிட்டி ஜீரோ.


ThamizhMagan
மே 26, 2024 15:00

பாஜகதான் வெல்லும் என்று தோணுதா? எந்த கருத்து கணிப்பு அவ்வாறு சொல்லியுள்ளது?


வேணு
மே 25, 2024 20:35

அண்ணாமலைக்கு எதிராக பேசிப்பேசி அவரையும் அவரது கருத்துக்களையும் திராவிட கட்சிகளே பரப்புகின்றன. JJ ன் கொள்கை பிடிப்பு என்பது மக்கள் அறிந்த உண்மை.


தமிழ்வேள்
மே 25, 2024 20:28

தற்போது உள்ள அதிமுக ஆப்ரஹாமிய அடிமை கட்சி.சிறுபான்மை ஓட்டுக்காக ஹிந்து துரோகம் செய்வதில் எந்த எல்லைக்கும் செல்லும் என்பது அனைவரும் தெரியும்...


M Ramachandran
மே 25, 2024 20:07

நிஜத்தைய்ய சொன்னால் ஏன் உங்களுக்கு கோபம் வருது .சட்டியில் காலி வேறு ஏதும் செய்ய முடியாதா கையாறு நிலை. பரிதாபம்


பேசும் தமிழன்
மே 25, 2024 20:02

அவர் இந்து மதம் உட்பட அனைத்து மத மக்களுக்கும் இடையே சமமாக நடந்து கொண்டார்.... ஆனால் இப்போது இந்துக்களுக்கு எதிரான அரசு அல்லவா நடக்கிறது..... இந்துக்கள் ஒவ்வொரு பண்டிகையின் போதும்.... பண்டிகையை கொண்டாட போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி