மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
5 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
5 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
6 hour(s) ago | 2
மதுரை:''மதுரை மாவட்டம், கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக அரசு அமைத்து உள்ளது. அங்கு செல்ல யாரும் தயாராக இல்லை. அதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டுவதை கண்டிக்கிறோம். அம்முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்,'' என, மதுரையில் பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை கூறினார். தயாராக இல்லை
பா.ஜ., ஒருங்கிணைந்த அணிகளின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடந்தது. அக்கூட்டத்துக்குப் பின் அண்ணாமலை கூறியதாவது:ஜல்லிக்கட்டு நடக்கும் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார், பாலமேடு உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளுக்குள் இடம் பெறாத, சம்பந்தமே இல்லாமல் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.அங்கு செல்ல ஜல்லிகட்டு காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் தயாராக இல்லை.அம்மைதானத்தை வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்கு கொண்டுவர சிந்திக்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்தது, தி.மு.க., - காங்., கூட்டணியாக இருந்த மத்திய அரசு.அதே ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற காரணம் பிரதமர் மோடிதான்.பத்திரப் பதிவுத்துறையில் இமாலய ஊழல் நடக்கிறது. புரோக்கர்கள் லாபி செய்கின்றனர்.இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழகம். பத்திரப் பதிவுத்துறையில் ரெய்டு நடத்தினால் தமிழகத்தின் கடனை அடைத்துவிட முடியும்.சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதில் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது சந்தேகம் உள்ளதாக கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்தோர் கூறினர். இவர்கள் இனி கட்சி நடத்துவதால், எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதனால், தி.மு.க.,வுடன் இணைந்துவிடலாம்; தி.மு.க.,என்ன செய்தாலும் ஜால்ரா அடிப்பது ஒன்றையே பிரதான பணியாக வைத்துள்ளனர். கொங்கு மண்டல பகுதியிலிருந்து, தமிழக அரசுக்கு 60 சதவீதம் வரி வருவாய் கிடைக்கிறது. அப்பகுதி மற்றும் மதுரைக்கு தி.மு.க., அரசு இதுவரை செய்தது என்ன? தமிழகத்தின் பல மாவட்டங்கள் பீஹாரைக் காட்டிலும் மிக மோசமாக உள்ளன. தமிழ் பற்று
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இதுவரை தமிழகத்துக்கு தொழில் துவங்குவதற்காக எவ்வளவு முதலீடு வந்தது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். தமிழ் உணர்வு, பாசம் கொண்டவர்கள் தமிழர்கள் தான். ஆனால், குஜராத்தில் பிறந்த மோடி, தமிழ் பற்றுடன் உள்ளார். அதனால் அவரை தமிழர் என ஏன் சொல்லக்கூடாது. ஆந்திரா ஓங்கோலிலிருந்து வந்தவர்கள் எல்லாம் தமிழர் என்று சொல்லிக் கொள்கின்றனர்.தி.மு.க., அமைச்சர்களில் 35 பேரில் எத்தனை பேரின் பூர்வீகம் தமிழகம் என்பதை அவர்கள் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago | 2