மேலும் செய்திகள்
மனித, விலங்கு மோதலை தடுக்க குழு அமைத்தது வனத்துறை
25 minutes ago
போதைப்பொருள் விற்ற வழக்கு: திரைப்பட தயாரிப்பாளர் கைது
26 minutes ago
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அரசு பஸ்களில், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், இலவச பஸ் பயண திட்டத்தை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், விடியல் பயணம் எனப்படும் சாதாரண பஸ்களில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் 2021 முதல் செயல்படுத்தப்படுகிறது. இது அவர்களின் பயண செலவுகளை குறைத்து, வேலை மற்றும் கல்விக்கு உதவுகிறது. மகளிருக்கு மட்டுமான இந்த திட்டத்தை, ஆண்களுக்கும் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இலவச பஸ் பயண திட்டத்தை தி.மு.க., அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஓரிரு மாதங்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து தரப்பு ஆண்களுக்கும் இலவச பயண திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதையடுத்தே, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பயண திட்டத்தை செயல்படுத்தப்பட அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளி வரும்' என்றனர். -- நமது நிருபர் -:
25 minutes ago
26 minutes ago