உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செஞ்சி கோட்டை வன்னியர் கட்டியது என்பதற்கான ஆதாரம் உள்ளதா

செஞ்சி கோட்டை வன்னியர் கட்டியது என்பதற்கான ஆதாரம் உள்ளதா

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் யாதவ மக்கள் இயக்க நிறுவனர் ராஜாராம் கூறியதாவது:செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால், மராட்டிய மன்னர்கள் கட்டிய 12 கோட்டைகளில் செஞ்சி கோட்டையும் ஒன்று என, பிழையாக கூறியுள்ளனர்.கி.பி.,1190 ஆண்டு ஆனந்தகோன் என்பவர் செஞ்சி கோட்டையை கட்டினார். அவருக்குப்பின், அவரது வம்சா வழியினர் 300 ஆண்டுகள் செஞ்சி கோட்டையை ஆட்சி செய்தனர். இந்திய தொல்லியல் துறையும், பிரெஞ்ச் வரலாற்று ஆய்வாளர் மெக்கன்சியும் இதை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர்.தமிழக முதல்வரும் வரலாற்றை ஆய்வு செய்யாமல் வரவேற்று வாழ்த்து சொல்லி இருப்பது எந்த வகையில் நியாயம். தமிழக முதல்வர் தொல்லியல் துறையினருடன் நேரடியாக செஞ்சி கோட்டையில் ஆய்வு செய்ய வேண்டும்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், காடவன் என்ற வன்னியன் கட்டிய கோட்டை என தெரிவித்துள்ளார். இதுவரை அவர் எந்த கூட்டத்திலாவது செஞ்சி கோட்டையை வன்னியர்கள் கட்டியது என வரலாற்றை பதிவு செய்ததுண்டா. அதற்கான ஆதாரங்கள் உள்ளதா, இருந்தால் வெளியிட முடியுமா. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Shankar Ganesh
ஜூலை 22, 2025 11:33

விடாதிங்கடா உங்க சாதி மொத்த. நல்லா மேல பூசி சந்தோஷம் இருங்கட ...


ABDUL A
ஜூலை 21, 2025 23:36

கோனார் காட்டியது தான் உண்மை


Bhaskaran
ஜூலை 21, 2025 20:12

இந்தியாவெங்கும் நிறைந்திருக்கும் சமுதாயம் ஆயர்கள் என்ற யாதவர்கள்


Mummoorthy Ayyanasamy
ஜூலை 21, 2025 13:14

யாதவ மன்னர் தான் செஞ்சி கோட்டையை கட்டியதாக வரலாறு கூறுகிறது.


N Sasikumar Yadhav
ஜூலை 21, 2025 07:37

மத்தியரசு திட்டங்கள்மீது திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதைபோல கோனார் வம்சத்தின் வரலாறுமீது ஸ்டிக்கர் ஒட்டுக் ஒட்டுகிறார் டாக்குடர் ராமதாசு அவுர்கள் . பேசிப் பழகிய பொய்


Augustine kamalaraj
ஜூலை 22, 2025 09:42

நீங்க இப்படி இருந்த்தால் நாடு உருப்படாது


Augustine kamalaraj
ஜூலை 22, 2025 09:50

எவென் எவென் கட்டானால் என்னடா?ஜாதி வெரி பிடித்த மடயங்களா,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை