தோழமை சுட்டுதல் என்பது இதுதானா?
தி.மு.க., ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், 'சனாதன சண்டாளனை நாட்டை விட்டு விரட்ட, ஓரணியாய், பேரணியாய் திரள்வோம் தமிழர்களே' எனப் பதிவிட்டுள்ளார்.'சண்டாளன்' என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. அந்த வார்த்தையை பயன்படுத்தினால், சட்டப்படி குற்றம் என, சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த சட்டம், நாஞ்சில் சம்பத் மீது பாயாதா? இப்படிதான் சட்டத்தை ஆளுக்கு தகுந்தமாதிரி பயன்படுத்துகிறது தி.மு.க., அரசு.அன்று துரைமுருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்த, தி.மு.க., ஆதரவு கட்சிகள் அனைத்தும், இன்று நாஞ்சில் சம்பத் விஷயத்தில் அமைதியாக இருப்பது ஏன்?இதற்குதான் தோழமை சுட்டுதல் என்று பெயரோ?