உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவை; விஜய் மீது சீமான் பாய்ச்சல்

களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவை; விஜய் மீது சீமான் பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? என விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.திருச்சியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: களத்தில் இருப்பவர்கள் பற்றி பேசுவோம். களத்தில் யார் இருக்கிறார்? கட்சி ஆரம்பித்து விக்கிரவாண்டி தொகுதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடை த்தேர்தலில் நிற்காமல் போனது ஏன்? ஈரோட்டில் வந்து நிற்க வேண்டியது தானே? திமுகவும், நாம் தமிழர் கட்சி மட்டும் தானே மோதியது. எல்லோரும் போய் விட்டார்கள். இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜ வரவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ay9up5rc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிமுக வரவில்லை. களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? ஈரோடு கடப்பாரை என விஜய் யாரை சொல்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? ஈரோட்டு கடப்பாரையா? அதெல்லாம் துருப்பிடிச்சு, பழைய இரும்புக்கு போட்டு பேரிச்சம்பழம் வாங்கியாச்சு. இப்பதான் தெரிய வருது.. அப்போ தெரியலையா தீய சக்தினு?

நான்கு எதிரிகள்

என் தம்பிக்கு (விஜய்) ஒரே ஒரு எதிரி தான், ஆனா எனக்கு நாலு எதிரிங்க. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகன்னு நாலு பேரோட நான் மல்லுக்கட்டுறேன். தம்பி கட்சி இப்பதான் ஆரம்பிச்சிருக்கு, அதை தட்டிக்கொடுத்து தான் வளர்க்கணும், ஆனா களத்துல நாங்க யாருன்னு இந்த நாலு பேருக்கும் நல்லாவே தெரியும். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என மறைந்த தலைவர்களின் பெயரைச் சொல்லி இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவீர்கள்? கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்பது நாங்கள் மட்டும் தான்; மற்றவர்கள் சின்னத்தை காட்டியும், பணத்தை காட்டியும் தான் ஓட்டு கேட்கிறார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால், அது நோட்டில் இருக்கும் காந்திக்கு போடும் ஓட்டு.

காதில் பூ சுற்றும்...!

கொரோனா காலத்தில் நர்ஸ்களை'கடவுள்', 'தேவதை' என்று கொண்டாடினார்கள்; இன்று அவர்கள் தெருவில் நின்று போராடும்போது கண்டுகொள்ள ஆளில்லை. பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது அவர்களைத் தூக்கி எறிவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? மதத்திற்காக மனிதன் இல்லை, மனிதனுக்காகவே மதம் உருவானது, உடம்புக்குத்தான் சட்டை தேவை, சட்டைக்காக உடம்பு இல்லை.1000 ரூபாயில் ஆடு, மாடு வாங்கிப் பெருகிவிட்டதாகச் சொல்வதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை. பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இல்லையா?

1 கோடி பேர்

19,000 கள்ள ஓட்டு இருக்குன்னு அப்பவே மத்திய அமைச்சருக்குத் தெரிந்தால், ஏன் அந்தத் தேர்தல் முடிவை ரத்து செய்யவில்லை? நாலரை வருடமா சும்மா இருந்துட்டு, அடுத்த தேர்தல் வரும்போது இதைக் கையில் எடுப்பது ஏன்? நீங்கள் வென்ற பீஹாரில் எல்லாம் கள்ள ஓட்டே இல்லையா? களையெடுக்கப் போறேன் என்று சொல்லி, மொத்த நிலத்தையும் உழுதுவிட்ட கதையாக உள்ளது. ஒரு கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம் என்பது சாதாரண பிழை திருத்தம் அல்ல; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். தேர்தல் நெருங்கும் நேரத்தில், குறுகிய காலத்தில் மீண்டும் எப்படி 1 கோடி பேரை சேர்ப்பீர்கள்? வாக்காளர்கள் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்த காலம் போய், இன்று ஆட்சியாளர்கள் வாக்காளர்களைத் தேர்வு செய்யும் அவலம்.

5000 கோடியா?

வருடம் முழுவதும் உழைத்தும், தன் வீட்டுப் பண்டிகையை சொந்தக் காசில் கொண்டாட முடியாத நிலையில் மக்கள் இருப்பது தேசிய அவமானம். இலவச வேட்டி, சேலை, கரும்பு கொடுப்பது ஆட்சியின் சாதனை அல்ல; அது மக்களின் வறுமையின் சாட்சி. படிக்கிற பிள்ளைகள் இருக்கும் பள்ளிக்கூடத்தை ஒழுங்காகக் கட்டவில்லை; ஆனால் பறப்பதற்கு விமான நிலையத்திற்கு 5000 கோடியா? வகுப்பறையில் தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப் படுகிறது. ஆனால், கல்விக்கூடங்களை விட்டுவிட்டு ஆடம்பரத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது வளர்ச்சியல்ல. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

karthikeyan
டிச 20, 2025 21:05

மக்களே, சீமான் மட்டும் தான் நம் நாட்டின் இயற்கை வளங்களை காப்பாற்ற போராடறர் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் மக்களை சந்திக்கிறார்


Makkal Manam
டிச 20, 2025 20:22

இருவரும் தற்குறிகள்


Anantharaman Srinivasan
டிச 20, 2025 19:21

சீமானின் பேச்சு உருட்டெல்லாம் நல்லாதானிருக்கு.நடைமுறை வாழ்க்கையில் நேர்மை Zero


Anbuselvan
டிச 20, 2025 19:11

சீமான் அவர்களின் கொள்கைகளில் உடன்பாடு இல்லை எனினும் எனக்கு விஜய் அவர்கள் சீமான் அவர்களை களத்திற்கே வராதவர் என உள்ளர்த்தத்துடன் கூறி இருந்தால் அது தவறு. சீமான் அவர்களது கட்சி மட்டுமே தனித்து நின்று தேர்தலில் தனது வாக்கு சதவிகிதத்தை நிரூபித்து உள்ளது. திமுக ஆரம்பித்த நாளிலிருந்து கூட்டணி அமைத்துதான் தேர்தலில் களம் கண்டுள்ளனர். அதிமுகவும் கூட்டணி இல்லாமல் களம் கண்டதில்லை. இம்முறை திரு விஜய் அவர்கள் கூட்டணி அமைக்காமல் களம் கண்டால் அவருக்கு பேச தகுதி உள்ளது. கொஞ்சம் ஓவர்தான்


kjpkh
டிச 20, 2025 16:25

எட்டு சதவீத ஓட்டு வாங்குபவர்கள் எல்லாம் களத்தில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. இந்த தடவை பாதியாவது கிடைக்குமா என்பது தெரியவில்லை.


SUBBU,MADURAI
டிச 20, 2025 15:14

சீமான் இதுவரை அப்புராணி திரள்நிதி தம்பிகளின் காதுகளில் சுற்றிய பூக்களில் சிலவற்றை மட்டும் பார்ப்போம். பெருந்தலைவர் காமராஜர் மறைந்ததற்கு பேரறிஞர் அண்ணா குலுங்கிக் குலுங்கி கதறிக் கதறி அழுததாக கூறினார். அண்ணா இறந்தது 1969 ம் ஆண்டு, காமராஜர் இறந்தது 1975 அதாவது அண்ணா இறந்து ஆறு ஆண்டுகள் கழித்து காமராஜர் இறந்தார். அண்ணனின் அடுத்த உருட்டு, முதல்வர் காமராஜர் கட்டிய பள்ளியில்தான் அப்துல்கலாம் கல்வி பயின்றார் என நாடார்கள் கூடிய கூட்டத்தில் அள்ளி விட்டார். காமராஜர் முதலமைச்சராக பதவியேற்றது 1954 ம் ஆண்டு ஆனால் அப்துல்கலாம் அப்போது தன்னுடைய கல்லூரி படிப்பையே நிறைவு செய்து விட்டார். மேலும் அப்துல்கலாம் பள்ளிக் கல்வி பயின்றது கிறிஸ்தவ மிஷினரி பள்ளிகளில்தான் என்பது நம்ம சீமானுக்கு தெரியாமல் போய்விட்டது. அடுத்த உருட்டு தேனிக்கள் இனம் அழிந்து போனால் அதற்கடுத்த நான்காண்டுகளில் மனித இனமே அழிந்துவிடும் என ஐன்ஸ்டீன் கூறியதாக ஒரு புருடா விட்டார் ஆனால் அந்த விஞ்ஞானி அப்படி கூறியதாக எவ்வித சான்றும் இதுவரை கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை. சரி அது போகட்டும் அண்ணனின் அடுத்த உருட்டை பார்ப்போம்! குழந்தையை தூக்கிக் கொண்டு போருக்கு சென்றவர் வேலுநாச்சியார் என்று ஒரே போடாக போட்டார் ஆனால் அது வேலுநாச்சியார் அல்ல ஜான்சிராணி என்பதை அவரது அறிவார்ந்த தம்பிகளாவது அவருக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். அதே போல திருக்குறளில் கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை என்ற குறளில் ஒரு மனிதனுக்கு அழியாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், மற்றவை செல்வமாகாது என்று கூறுகிறது. அந்த குறளில் வரும் மாடு என்பது கால்நடைகளைதான் குறிக்கிறது என மாடும் நமது செல்வங்கள்தான் என சீமான் கூறியதை கேட்ட தமிழறிஞர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். தேர்தல் நெருங்க நெருங்க அண்ணன் சீமானின் இதுபோன்ற பொய்களை கேட்டு என்ஜாய் பண்ணலாம்.


V Venkatachalam, Chennai-87
டிச 20, 2025 15:12

சீமானின் காரசார நகைச்சுவை படு ஜோர். சீமான் இந்த வெட்டி பேச்சை விட்டுட்டு சீமானுக்கு ஓட்டு போடும் ஆளுங்க பேரு வரைவு வாக்காளர் பட்டியலில் இருக்கான்னு உடனே செக் பண்ணி விட்டுப் போயிருந்தால் அவனுங்களை உடனே சேர்க்க ஏற்பாடு பண்ணனும்.அது ஒண்ணுதான் உருப்படியான வேலை. சீமான் மத்தவரை களத்தில் இரங்கலை ன்னு கேலி பண்றதை விட்டுட்டு உருப்படியா கட்சிய காப்பாற்றணும். ஏற்கனவே நிறைய சினிமா துண்டன்கள் விஜய் பக்கம் போறதா கள நிலவரத்தை பாக்குரவுங்க சொல்றாங்க. ஏன்னா நேத்திக்கு விஜய் சீமானை போலவே அடித்தொண்டையால் நரம்புகள் புடைக்க பேசி சீமானை பீட் பண்ணிட்டார். பல கட்சி சினிமா துண்டன்களும் படு குஷியாயிட்டானுங்க.


Madras Madra
டிச 20, 2025 15:20

கேள்விக்கு பதில் இல்லன்னு நல்லா தெரியுது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை