உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: லோக்சபாவை சோனியா தவிர்த்தது ஏன்?

இது உங்கள் இடம்: லோக்சபாவை சோனியா தவிர்த்தது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வெ. சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்., முன்னாள் தலைவர் சோனியா, தன் மாமியாரான இந்திரா வழக்கமாக நிற்கும் உ.பி., மாநிலம், ரேபரேலியில் நின்று, லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பக்கத்தில் இருக்கும் தொகுதியான அமேதியில் போட்டியிட்ட ராகுல், பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.நல்லவேளையாக, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் களம் இறங்கி இருந்ததால், அங்கு ஜெயித்து, லோக்சபாவுக்குள் நுழைய முடிந்தது.வரப்போகும் தேர்தலில், 'இண்டியா' கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, ரேபரேலி, அமேதி தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய போதிலும், சோனியா, லோக்சபா தேர்தலை தவிர்த்து, ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாக, மனு தாக்கல் செய்துள்ளார்.ஏனென்றால், லோக்சபா தேர்தலில் நின்று ஒருவேளை தோற்று விட்டால், டில்லியில் சோனியா வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டியிருக்கும். அதை தவிர்க்கவே, ராஜ்யசபா வாயிலாக பார்லிமென்டுக்குள் நுழைகிறார்.எல்லாவற்றுக்கும் மேலாக, நாடு முழுக்க எடுக்கப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகளும், 'பா.ஜ.,வே மீண்டும் ஆட்சி அமைக்கும்' என, தெரிவிக்கின்றன. அதிலும், உ.பி.,யில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என்றே கூறுகின்றன.அமேதியிலும், கடந்த முறை தோற்றுப் போன ராகுல், இந்த முறை மீண்டும் களம் இறங்குவாரா என்பது கேள்விக்குறியே. பிரியங்கா, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்ற யூகங்களும் வலம் வருகின்றன. அப்படி அவர் போட்டியிட்டாலும், வெற்றியை ஈட்டுவாரா என்பது சந்தேகமே.எனவே, பிரியங்கா, ராகுல் போன்றோர் இந்த முறை தாங்கள் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கக்கூடிய ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவில் ஏதாவது ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

duruvasar
பிப் 18, 2024 16:26

ராகுல் பட்டைசயா தொகுதியில் நின்று ஜெயித்து வருவார். பந்தயம் கட்டுகிறீர்களா ?


பேசும் தமிழன்
பிப் 18, 2024 13:09

No 10 ஜன்பத் சாலை இல்லத்தை..... காலி செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ.... அதை செய்து இருக்கிறார்..... நன்றாக பிளான் செய்து இருக்கிறார்கள் !!!


பேசும் தமிழன்
பிப் 18, 2024 12:13

தமிழ்நாட்டில் ராகுல் போட்டியிட்டால் வெற்றி பெறுவார்.... ஆனால் திமுக அதற்கு சம்மதிக்க மாட்டார்கள்.... ஏனெனில் கான் கிராஸ் கட்சி தமிழ்நாட்டில் வளர்வது அவர்களுக்கு ஆபத்து.... கான் கிராஸ் கட்சியை அடிமையாக வைத்திருக்கவே அவர்கள் விரும்புவார்கள் !!!


Sathyam
பிப் 18, 2024 10:27

கவுண்டவுன் தொடங்கிய நாள் இது (போலி விவசாயியின் போது செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்றியது எதிர்ப்பு). காங்கிரஸ், ஆம் ஆத்மி விரும்பிய ஒரு சீக்கியர் இங்கு கொல்லப்பட்டால், காலிஸ்தான் கையாள்வதில் பெரும் பிரச்சனையாக இருக்கும் முழு உழவர் போராட்டமும் ஐஎஸ்ஐ, ஆம் ஆத்மி, காங்கிரஸால் வடிவமைக்கப்பட்டது மற்றும் மூல காரணம் அதுதான் கனடாவில் இருந்து பருப்பு இறக்குமதியை மோடி அரசு நிறுத்தியது


Sathyam
பிப் 18, 2024 10:26

ஆம் ஆத்மி கட்சியும் காலிஸ்தானியரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த நாணயம் காங்கிரஸுக்குச் சொந்தமானது இது சிஐஏ வழங்கிய பாதுகாப்பின் கீழ் சீனாவில் அச்சிடப்பட்டது அதுதான் உண்மையான கதை.


g.s,rajan
பிப் 18, 2024 09:42

தோல்வி பயம் தான், வேற என்ன ....


vbs manian
பிப் 18, 2024 09:01

பார்லிமென்டை தவிர்த்தால் இன்னும் நல்லது.


Duruvesan
பிப் 18, 2024 06:13

வயது மூப்பு ????, டெபாசிட் கெடைக்காது,


Oviya Vijay
பிப் 18, 2024 04:05

வயது மூப்பு முக்கிய காரணம்.ஆனால் "Unfit" Murugan லோக்சபாவை தவிர்த்தது ஏன்? ஏன்னா கவுன்சிலரா கூட ஜெயிக்க முடியாதுனு தெரியும்...


A Viswanathan
பிப் 18, 2024 08:37

இவர் மக்களவைக்கோ, ராஜியசபாவிற்ககோ போகவில்லை என்றால் மக்களின் குறைகளை பற்றி பேசுவது யார்.தவிர்க்க முடியாதவர்.


மணியன்
பிப் 18, 2024 11:08

பாஜகவை வெகுகாலத்துக்கு அசைக்க முடியாது.மக்கள் பாஜக பக்கம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி