உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது !

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது !

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று(ஜன.,01) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. மேலும் சுனாமி அலை ஒரு சில பகுதிகளை தாக்கியது. மேலும் பல்வேறு இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருட்சேதம், உயிர்ச்சேதம் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் பசிபிக்பெருங்கடல் பகுதி, ரஷ்யா, வட கொரியாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள ஹோன்சு, டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகோ உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. மேற்கு ஜப்பானில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையத்திற்கு அருகில் 0.4 மீட்டர் உயர சுனாமி பதிவாகி உள்ளது. வாஜிமோ, நோட்டோ, ஹோ குரிகு பகுதிகளில் கடல் அலைகள் ஊருக்குள் புகுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pbxle6wh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0Galleryபூமிக்கடியில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகும் வீடியோ காட்சிகளை சமூகவலைதளத்தில் அப்பகுதி மக்கள் பகிர்ந்துள்ளனர். நில நடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மின்சாரம் துண்டிப்பு

நிலநடுக்கத்தால் ஜப்பானில் 36 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் சுனாமி அலைகள் 1 முதல் 5 மீட்டர் உயரம் வரை எழும்பியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் சுனாமி தாக்கியது. இதனால் மக்கள் அலறியடித்து பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர்.

ஜப்பான் பிரதமர் 'அட்வைஸ்'

இது குறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுனாமி தாக்கும் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும். உயிர் சேதங்களைத் தடுக்க முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவும். எல்லாவற்றிற்கும் மேலாக மனித உயிருக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையின் கீழ், உயிர்களைக் காப்பாற்றுதல் மற்றும் பேரிடர் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இணைந்து செயல்பட வேண்டும். சுனாமி அலைகள் மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம். மீண்டும் மீண்டும் தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முடிந்தவரை எச்சரிக்கை நீக்கப்படும் வரை மக்கள் பாதுகாப்பான பகுதியை விட்டு வெளியேற வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

அவசர உதவி எண்கள் அறிவிப்பு:

3 நாட்களுக்கு ஏற்படலாம்

ஜப்பானின் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: சுனாமி அலைகள் மீண்டும் மீண்டும் தாக்கும். எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். வலுவான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு போன்றவற்றால் வீடுகள் இடிந்து விழுவதற்கான அபாயம் இருக்கிறது. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு நிலநடுக்கங்கள் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

3 மணி நேரத்தில் 30 முறை

ஜப்பானில் 3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அனைத்து நிலநடுக்கங்களும் 4.5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகியுள்ளது.

ரஷ்யா, தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம்

ரஷ்யாவில் 4.8 என்ற ரிக்டர் அளவிலும், தஜிகிஸ்தானிலும் 4.4 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Godyes
ஜன 01, 2024 21:52

ஜப்பான் உள்ள இடம் எரிமலைகள் உள்ள இடம். சுற்றி கடல். மேலும் இடமிருந்து வலமாக 360 டிகிரி சுற்று வட்ட பாதையில் பூமி சற்று சாய்ந்த நிலையில் பூமியின் தென்துருவம் சூரியனை நோக்கியும் வடதுருவம் அதன் பின் பக்கமாக இருப்பதால் இத்தகைய நில நடுக்கம் வருகிறது.


திகழ்ஓவியன்
ஜன 01, 2024 20:51

இங்கு சென்று இருக்கிறேன் , இவர்கள் இதை எப்பவுமே எதிர்பாத்து அதற்கு தகுந்த ஏற்பாடு எல்லாம் செய்து இருப்பார்கள் பாதிப்பு குறைவாக தான் வரும் , ஏன் அதை போல மழையும் வெள்ளமும் இங்கு அதிகம் இருக்கும் அனால் இவர்கள் CHANNEL OF WATER STORM WORK AMAZING ஆஹ் இருக்கும் , எல்லாவற்றிற்கும் காரணம் POPULATION குறைவு வசிக்கும் இடம் அதிகம் இருக்கும் , அவர்கள் மக்கள் நலனிற்கு தான் TOP பிரியரிட்டி , இந்த கோயில் இதே எல்லாம் இரண்டாம் பட்சமே


தாமரை செல்வன்-பழநி
ஜன 01, 2024 20:09

ஜப்பானில் நில நடுக்கத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் போதாது. இறைவன் துணை நிற்க பிரார்த்திக்கிறேன்.


Seshan Thirumaliruncholai
ஜன 01, 2024 19:46

நேர்முறை எண்ணங்கள் குறைய குறைய நம் சக்திக்கு உட்படாத அழிவு நிகழ்வுகள் எதிர்கொள்ள வேண்டும். எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதனை அரசு நிர்ணயம் செய்யமுடியாது. நாம் தாம் செயல்களில் காட்டவேண்டும். இதுதான் பரிகாரம்.


Rassi
ஜன 01, 2024 18:53

வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்து சொல்ல வில்லை.ஒன்றிய அரசு முப்பது லட்சம் கோடி வழங்க வேண்டும் மேலும் இரண்டு தனி விமானங்கள் வாங்க வேண்டி இருக்கிறது


R.RAMACHANDRAN
ஜன 01, 2024 18:10

விஞ்சானத்தால் எதையும் சாதிக்கலாம் என ஆணவம் கொண்டால் இயற்கை தன்னுடைய கடமையை செய்துகொண்டுள்ளது.பாரதியார் எச்சரித்துள்ளார் பூமி தெய்வம் விழுங்கிடும் என.


Seshan Thirumaliruncholai
ஜன 01, 2024 17:47

விதியின் விளையாட்டையாரால் தடுக்க இயலும். குறைப்பதற்கு ஆண்டவனை தஞ்சம் அடைவதை வேறு மார்க்கம் இல்லை.


Barakat Ali
ஜன 01, 2024 16:46

தீர்ப்பு நாள் நெருங்குவதால் இவை அன்றாட நிகழ்வுகளாகும் ......


Barakat Ali
ஜன 01, 2024 16:37

சப்பான் துணை முதல்வர் காப்பாற்றுவார் .........


krishnamurthy
ஜன 01, 2024 16:37

கடவுளே இந்த நாட்டை காப்பாற்று


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை