உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முளைச்சு மூனு இலை விடல... இரட்டை இலை பத்தி பேசுவதா?: அண்ணாமலை மீது ஜெயக்குமார் பாய்ச்சல்

முளைச்சு மூனு இலை விடல... இரட்டை இலை பத்தி பேசுவதா?: அண்ணாமலை மீது ஜெயக்குமார் பாய்ச்சல்

சென்னை: ''முளைத்து மூன்று இலை கூட விடவில்லை. அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார். இது 50 ஆண்டுகளுக்கு மேலிருக்கும் கட்சி; 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக.,வுக்கும் பா.ஜ.,வுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. உதயநிதி, பிரதமர் மோடியை சந்தித்தத்திலிருந்து நடைபெற்று வரும் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளன. கருணாநிதி சிலையை வெங்கய்யா நாயுடுவை அழைத்து வந்து திறந்தார்கள். சோனியாவையோ, ராகுலையோ அழைக்கவில்லை.

ஊழல் பைல்ஸ்

லோக்சபா தேர்தல் சமயத்தில் பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் நோக்கம் அதிமுக.,வை மட்டும் குறிவைத்து இருந்தது; திமுக.,வை எதிர்க்கவில்லை. திமுக.,வினருக்கு எதிராக ஊழல் பைல்ஸ் வெளியிட்டார், கவர்னரிடம் மனு அளித்தார். ஆனால் அது தொடர்பாக ஒரு மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் அதன்பின்னர் வலியுறுத்தினாரா? இல்லை. அதெல்லாம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வருகிறது. வெற்றி பெற்ற திமுக கூட்டணி எம்.பி.,க்கள் டில்லி சென்றார்கள். அங்கு ஒரு வெற்றி கூட்டம் நடந்தது. அதில் ஜே.பி.நட்டாவை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர்.

குடும்ப விழா

இயக்குநர் விக்ரமன் திரைப்படங்கள் மாதிரி ஒரு குடும்ப சென்டிமென்ட் நிகழ்ச்சியாக நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது. திமுக.,வும், பா.ஜ.,வும் அண்ணன், தம்பி போல் குடும்ப விழாவாக அதை நடத்தினர். ஸ்டாலின் எப்போதும் கருப்பு பேண்ட் தான் போடுவார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் சந்தன நிற பேண்ட் போட்டு சென்றுள்ளார். கருப்பு பேண்ட் போட்டால், கோ பேக் மோடி, கோ பேக் ராஜ்நாத் சிங் என்பது போலாகிவிடும்.

அதிமுக போட்ட பிச்சை

முளைத்து மூன்று இலை கூட விடவில்லை. அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார். இது 50 ஆண்டுகளுக்கு மேலிருக்கும் கட்சி; 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. அதிமுக போட்ட பிச்சையில் சட்டசபையில் 4 பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். சொந்தக் காலும் கிடையாது, செல்வாக்கும் கிடையாது. எதுவுமே இல்லாமல் பா.ஜ., எங்களை பார்த்துப் பேசுவது வினோத வேடிக்கையாக உள்ளது. 2026ல் தனியாக நின்று ஒரு சீட் தனியாக நின்று ஜெயித்து பாருங்கள்; முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Matt P
செப் 20, 2024 03:00

முளைச்சு மூணு இலை விடலை. அதுக்குள்ளே துணை முதல்வரான்னு கேட்கலாமே.


veeramani
செப் 19, 2024 09:02

அய்யா ஜெயக்குமார். எழுபத்தியிரண்டு காலகட்டத்தில் எங்கு ஒளிந்து இருந்தீர்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் காலத்தில் உங்களது பங்களிப்பு என்ன. கட்சி ஆரம்பகாலத்தில் தமிழகத்தில் எப்படி வளர்க்கப்பட்டது, அன்றைய நாவலர், பண்ருட்டியார்,எஸ் டி எஸ் , திருநாவுக்கரசு , கி ஏ கே கிருஷ்ணசாமி , அவனியாபுரம் காளிமுத்து , விருதுநகர் ராமச்சந்திரன், திருச்சி சௌந்தரராஜன், ஹண்டே போன்றோர் கட்சியை வளர்க்க தமிழ்நாட்டில் சுதந்திரப்போர் போல நடைபெற்றது. இதில் ஜெயக்குமார் பங்களிப்பு என்ன. தற்சமயம் உள்ள செங்கோட்டையன் தவிர எவருக்கும் கட்சியை பற்றி பேச அருகதை இல்லை.


RAMKUMAR
செப் 17, 2024 07:51

இவர் எடப்பாடி சார் , எக்கோ சவுண்ட். ட்ரான்ஸ்மிட்டர் மட்டுமே . நீங்க சொன்னத, எடப்பாடி சொன்னதா நெனைச்சுக்குறோம் .. ஓகே வா சார் . இரட்டை இலையா, மூனு இலையானு ,, நாங்க பத்துக்குறோம் சார் . ...


NagaSubramaniyan
செப் 07, 2024 17:31

முளைத்து 18 இலையே விட்டாச்சு. இப்படியா பேசிட்டே இருக்கட்டும். நல்லா வெளங்கிரும் அதிமுக. ஆக்கபூர்வமான ஏதும் சிந்திக்க வழியில்லை. வந்துட்டாரு. அதிகமான தொகுதியில் பிஜேபியானது அதிமுகவை பின்னுக்கு தள்ளியும், டெபாசிட் இழக்க வைத்தும் இருக்கிறது என்பது அண்ணாமலையால்தான். தனது மகனே வேளச்சேரிசென்னை தொகுதியில் டெபாசிட் இழந்தவர்தான் என்பதும் உண்மை. புரிந்தால் சரி. இந்த மாதிரி வீர வசனம் ரொம்ப நாள் செல்லாது.


Sampath Kumar
செப் 03, 2024 09:16

இந்த பிஜேபி கட்சிக்காரனின் வேலையே டுத்தவன் கட்சியை பற்றி மிக மட்டரகமான விமர்சிப்பதுதான் இவனுக கட்சி நாற்றம் தெரியாது


angbu ganesh
ஆக 30, 2024 14:32

தவழ்ந்து போகும் போது தெரியலையா உங்க கொள்கைக்கு மூணு எல விடலேன்னு சில்றய்ங்க தான் தாஸ்தியா சத்தம் போடுதுங்க


Arul. K
ஆக 29, 2024 16:17

ஆனால் தமிழகம் முழுவதும் பிஜேபி என்ற கட்சியை மக்கள் ஒரே தேர்தலில் அறிய செய்துவிட்டார். மக்கள் தான் ஏனோ வாக்களிக்கவில்லை?


sankaranarayanan
ஆக 29, 2024 07:16

அய்யா உங்க தலைவர் எடப்பாடி அமைச்சர் பதவிக்கு வந்ததே ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை அவ்வளவேதான் அவரைப்பற்றி அதற்கு முன்பு மக்களில் யாருக்குமே அவர் அடையாளம் தெரியாதவர் ஆதலால் அவரால் முளைத்து மூன்று இலை கூட விடவில்லை என்று கூறுவதற்குமுன் அந்த வாசகம் யாருக்கு பொருந்தும் என்று சற்றே யோசித்து பார்க்கவும் . அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அவர் பேசுவது எதோ இரட்டை இலை ஒரு இலையாக ஆனதுபோலத்தான் உள்ளது


M Ramachandran
ஆக 28, 2024 18:48

உஙக மோசடி கும்பலால் இலையே வாடி வதங்கி காய தொடங்கிடிச்செ ஜெயக்குமார் அண்ணே.


RADHAKRISHNAN
ஆக 27, 2024 21:19

நீங்க என்ன இரண்டு இலைதனே? இல்லை நான்கு இலையா?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ