உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய பலி: கருணாபுரத்தில் போலீசார் குவிப்பு

கள்ளச்சாராய பலி: கருணாபுரத்தில் போலீசார் குவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பலானவர்கள் கருணாபுரத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அந்த கிராமத்தில் தெருவுக்கு ஒருவர் இறந்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் மரண ஓலம் கேட்டபடி உள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியனவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 17 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wabd4hmg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் மருத்துவமனைகளில், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். சேலம் மருத்துவமனையில் 9 பேரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 22 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சிபிசிஐடி அதிகாரி

இந்த வழக்கை, சிபிசிஐடி வசம், தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டு உள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை செய்த புகாரில், 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்ட பிரசாந்த், கள்ளச்சாராயம் குடித்தவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், மருத்துவக் கல்லூரிகளில் இருந்தும் டாக்டர்கள் வந்து கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 85 )

N.Purushothaman
ஜூன் 20, 2024 15:25

சகஜமாகிடுச்சின்னு சொலவடை ஒன்னு புதுசா பரவி வருது ....


ram
ஜூன் 20, 2024 14:48

இதுபோல வருட வருடம் நடப்பதற்கு திருட்டு திமுகவுக்கு வோட்டு போடுங்கள் மக்களே


Ramesh Sargam
ஜூன் 20, 2024 14:12

இப்பொழுது அங்கே போலீஸ் குவிவதால் என்ன பயன். பத்திரிகையில் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது பற்றி முன்னமே செய்திகள் வந்தன. அப்பொழுதே இந்த போலீஸ் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தால், இன்று இந்த பலி ஏட்பட்டிருக்குமா?


venugopal s
ஜூன் 20, 2024 13:26

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் 2009 ல் மது விலக்கு அமலில் இருந்த போதே கள்ளச் சாராயம் குடித்து நூற்று முப்பத்தி ஐந்து பேர் இறந்த போது அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி அவர்கள் அந்த சம்பவத்திற்கு என்ன பொறுப்பேற்றாரோ அதையே தமிழக முதல்வரும் இப்போது ஏற்பார்!


தமிழ்வேள்
ஜூன் 20, 2024 13:58

வா ..வா ....வேணு ..தேடி எடுக்க ஒன்றரை நாளாச்சு போல ...ரொம்ப லேட்டா முட்டு கொடுக்க வர்றீங்களே ..


வாய்மையே வெல்லும்
ஜூன் 20, 2024 14:17

வேணு கள்ளக்குறிச்சி பற்றி முடிஞ்சா பேசு .. குஜராத்தில் என்ன எனும் உன்னை கேட்கல .கேவலமான அரசியல் வியாபாரம் செய்யும் ஆட்களை பார்த்தாலே பத்தியெரியுது


duruvasar
ஜூன் 22, 2024 08:56

கோதுமை பீர், சோளம் பீர், மக்காச்சோளம் பீர் என வகை வகையாக கலர் கலராக ஊத்தி குடுங்கறீங்களே அப்பறம் எதுக்கைய்யா கள்ள சாராயம்.


தமிழ்வேள்
ஜூன் 20, 2024 13:23

கருணாபுரம் - கருணா என்னும் பெயரே பிரச்சினைகளுக்கு ஊற்றுக்கண் போல ....நல்ல திராவிட மாடல்


கத்தரிக்காய் வியாபாரி
ஜூன் 20, 2024 12:16

கள்ளசாராயத்தை நிறுத்திடாதீங்க.


Jayaprakash Karthikeyan
ஜூன் 20, 2024 12:08

எங்க அந்த கலெக்டர்..


சிங்காரம்
ஜூன் 20, 2024 11:49

இதுக்கும் மேலே தத்தியாய் அரசும், அதிகாரிகளும் செயல்பட முடியுமான்னு ஆலோசனை நடத்துறாங்க.


vijayaraj
ஜூன் 20, 2024 11:40

இளம் விதவைகளை அதிகம் ஆக்கிய பெருமை படைத்த ஆட்சி என்று கின்னஸ் ரெகார்டுக்கு செர்டிபிகேட் கேட்டு அனுப்பும் திராவிட மாடல் ஆட்சி தான் எது. கனிமொழி அக்கா தான் செர்டிபிகேட் கேட்டு விண்ணப்பம் செய்வார்கள்.


M S RAGHUNATHAN
ஜூன் 20, 2024 11:33

கனிமொழி அவர்களின் இளம் விதவைகள் கழகத்திற்கு 26 புது உறுப்பினர்கள். அண்ணனிடம் சொல்லி ₹ 10 லக்ஷம் வாங்கிக் கொடுத்து விடுவார்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி