உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 32 அரசு பள்ளிகளை மூட முடிவு பூட்டு லிஸ்டில் முதல் மாவட்டம் கள்ளக்குறிச்சி

32 அரசு பள்ளிகளை மூட முடிவு பூட்டு லிஸ்டில் முதல் மாவட்டம் கள்ளக்குறிச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள, அரசு பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 32 பள்ளிகள் மூடப்பட உள்ளன. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மார்ச் 1 முதல், மாணவர் சேர்க்கை பணி துவங்கப்பட்டுள்ளது. அதேநேரம், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, குறைந்தபட்ச அளவை விட குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உடைய பள்ளிகளை மூட, அரசு முடிவு செய்துள்ளது.அதாவது, கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, தலா, 30 மாணவர்; ஆறு முதல் எட்டு வரை தலா, 35; ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு தலா, 40 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தலா, 50 மாணவர்கள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும். இதன்படி, தமிழகம் முழுதும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள பள்ளிகளை மூட, தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 31 தொடக்கப் பள்ளிகளும், ஒரு நடுநிலைப்பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை அருகில் உள்ள பிற அரசு பள்ளிகளில் சேர்க்க, கல்வித்துறை இயக்குனர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த பட்டியலில், உளுந்துார் பேட்டை ஒன்றியத்தில் உள்ள எலவனாசூர் ஊராட்சி பள்ளியில், மொத்தம் உள்ள ஐந்து வகுப்புகளில், ஒன்றாம் வகுப்பில் மட்டும் ஒரே ஒரு மாணவி படிப்பது தெரியவந்துள்ளது.அதே ஊரில் உள்ள இன்னொரு பள்ளியில், 1,3,4,5 வகுப்புகளில், தலா ஒரு மாணவர் படிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ரிஷிவந்தியம் ரெட்டியார் பாளையம் ஊராட்சி பள்ளியில், மூன்று பேர் மட்டும் படிப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த பள்ளிகளின் மாணவ - மாணவியரை, அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 13 ஆசிரியர்கள், 23 தலைமை ஆசிரியர்கள், மாணவர் விகிதத்தை விட உபரியாக உள்ளனர். அவர்களையும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

boominathan alex
ஜூலை 23, 2025 16:37

அரசு பள்ளிகளை மூடுவதை தமிழக அரசு கைவிட வேண்டும் காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு கோரிக்கை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 25, 2024 12:19

பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக காலத்திற்கு ஏற்ப புதுப்புது பாடத்திட்டங்கள் பள்ளிகளை தனியார் பள்ளிகளை போன்று அழகான கட்டிடங்கள் மரங்கள் வளர்த்து இதமான சூழல் ஏற்படுத்துதல் அரசு ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக பயிற்சி கொடுத்தல் போன்ற செயல்கள் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தலாம் இந்த ஜடி யுகத்தில் கூட போல் இந்தி சொல்லித்தர மாட்டேன் கர்மவீரர் ? பெரியார் பற்றி தான் சொல்லித் தருவேன் தமிழில் தான் அனைத்தும் என்றால் எப்படி மாணவர் சேர்க்கை அதிகமாகும் சமீபத்தில் கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் பேசி சாவல் விடுத்தார் இப்போது தான் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் புரிந்துள்ளது இந்த இரு திராவிட கட்சிகள் எம்எல்ஏ எம்பி தலைவர்கள் அவர்கள் குடும்பத்தாருக்கு ஹிந்தி நன்கு தெரியும் தமிழக இளைஞர்களை தான் ஹிந்தி படிக்க வைக்காமல் தத்தியாகவே வளர்க்கிறார்கள் என்று இந்த உண்மையை போட்டு உடைத்து அதிமுக வேட்பாளர் வாழ்த்துக்கள் திராவிட கட்சிகள் முகத்திரையை கிழித்ததற்கு நன்றி


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை