உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணை?: வழக்கு ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கள்ளச்சாராயம் சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணை?: வழக்கு ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பான விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என அ.தி.மு.க, மற்றும் பா.ம.க., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தக் கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி மாநிலச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் பா.ம.க சார்பில், வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று (ஜூன் 26) பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அரசின் அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். அதனால் வழக்கின் விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்” என வாதிட்டார். இதையடுத்து, வழக்கு மீதான விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

M Ramachandran
ஜூன் 26, 2024 20:13

இப்பத்தியென ஓதி ஐந்து கொண்டு போங்கள். தீ மு க்கா காரர்கள் கை தேர்ந்தவர் சம்பவம் நடந்த உடனேயே எல்லா கள்ள சாராயமும் அண்டைய மாநிலங்களுக்கு கொண்டு செல்ல பட்டு விட்டது. இவர்கள் ஆசான் விஞ்சானா ஊழலில் கை தேர்ந்தவர்கள் என்று நீதிமன்றமே பாராட்டி இருக்கு. நீங்கள் தூங்கி எழுந்தவுடன் சுத்தமாக்க குற்ற பின்னணியை துடைத்து எடுத்து விடுவார்கள். அப்புறம் இப்போ என்ன செய்வீங்க இப்போ என்ன செய்வீங்க என்று மார் தட்டுவார்கள்


vijay
ஜூன் 26, 2024 19:39

மேற்க்கு வங்கத்தில் சந்தேஷ்காளி கலவரத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றவுடன் அம் மாநில நீதிமன்றம் உடனே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது . ஆனால் இங்கேயோ ,கால அவகாசம் கொடுக்க பட்டிருக்கிறது . பொறுத்து இருந்து பார்ப்போம் ...என்ன நடக்ககிறது என்று. சிபிஐ விசாரணைக்கு ஏன் மாநில அரசு தயங்குகிறது ? மாட்டிக்கொள்வோம் என்ற பயமா? நீதிமன்றம் சரியான தீர்ப்பு கொடுக்கும் என்று நம்புகின்றேன்


Kasimani Baskaran
ஜூன் 26, 2024 17:30

அதாவது பத்து நாள் சென்றுதான் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எத்தனை பேருக்கு பார்வை போய்விட்டது, எத்தனை பேருக்கு நுரையீரல் பழுதாகி விட்டது போன்ற தகவல்கள் தெரியும். 20 வருடம் ஒரு ஊரில் சாராயக்கடை தாராளமாக தொழில் நடத்தி இருக்கிறது என்றால் காவல்துறையின் முழு தோல்வியையே காட்டுகிறது. எல்லோரையும் வீட்டுக்குப்போகச்சொல்லலாம் . அறிக்கை முக்கியமில்லை. கண்துடைப்பு நாடகம்.


Narayanan
ஜூன் 26, 2024 16:42

அரசு வழக்கறிஞ்சர் அறிக்கை தயாராக இருக்கிறது என்றும் சமர்ப்பிக்க பத்து நாள் அவகாசம் வேண்டும் என்கிறார் . நீதிமன்றமும் அவகாசம் கொடுக்கிறது . விந்தையாக இருக்கிறது . தயாராக இருக்கும் போது தாக்கல் செய்யசொல்லவேண்டியதுதானே .. நீதி மன்றம் ஏன் அவகாசம் கொடுக்கிறது. . உண்மையில் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கை எடுத்திருக்கவேண்டும் . அறுபத்தி ஆறு பேர் மரணம் . மக்கள் மேல் அக்கறை இல்லாத நீதிமன்றம் அரசை போல .


D.Ambujavalli
ஜூன் 26, 2024 16:28

ஜூலை 3 க்குள், மருத்துவ மனைகளில் உள்ள எத்தனைபேர் 'மேலே' போகப் போகிறார்களோ ? முழுதாக 100 + ஆகக்கூட எகிறி, அரசுக்குப் பெருமை சேர்க்கலாம் என்ன அறிக்கை, அதிகாரிகளை மாற்றி, சில்லறை வியாபாரிகளை பிடித்து, போலீசை சஸ்பெண்ட் செய்துவிட்டோம் இன்னும் எதற்கு cbi ? என்று வரும் இதற்கு எதற்கு வாய்தா ?


பேசும் தமிழன்
ஜூன் 26, 2024 16:23

லோக்கள் போலீஸ் விசாரித்தால் உண்மை வெளியே வராது..... அதனால் தான் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்கிறார்கள்


ஆரூர் ரங்
ஜூன் 26, 2024 15:53

ஏழை மாநிலமான பிகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. முன்னேறிய மாநிலமான தமிழகத்தில் ஏன் சாத்தியமில்லை? நாகலாந்தில் தேர்தல் நேரத்தில் மது உள்ளே வராமல் பெண்கள் தடுத்தனர். இங்கு பெண்களும் கள்ளச்சாராயம் குடித்து பலியாகினர். இன்னும் எத்தனை பிணங்கள் விழுந்தால் அரசு திருந்தும்?


Hari Bojan
ஜூன் 26, 2024 15:37

அந்த 10 நாட்களில் விதியினை மாற்றிவிடுவார்களோ


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 26, 2024 15:33

தயாராக உள்ள அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வேண்டியது தானே எதற்கு அவகாசம்?


கூமூட்டை
ஜூன் 26, 2024 17:42

அது தான் திராவிட மாடல்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை