உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலி -- திருவண்ணாமலை இடையே கார்த்திகை தீப சிறப்பு ரயில்

திருநெல்வேலி -- திருவண்ணாமலை இடையே கார்த்திகை தீப சிறப்பு ரயில்

மதுரை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி -- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிச., 3 இரவு 9:30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06075), மறுநாள் காலை 8:30 மணிக்கு திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கத்தில் டிச., 4 இரவு 7:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06076), மறுநாள் காலை 8:30 மணிக்கு திருநெல்வேலி செல்லும். கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக செல்லும். ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை