உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அங்கீகாரம் புதுப்பிக்காத அரசு உதவி பள்ளிக்கு கிடுக்கி

அங்கீகாரம் புதுப்பிக்காத அரசு உதவி பள்ளிக்கு கிடுக்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு நடப்பாண்டு நிதியுதவி வழங்குவதற்கு, பள்ளிக்கல்வி துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் ஊதியம், பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு நிதியுதவிகளை அரசு வழங்குகிறது. இதன்படி, நடப்பாண்டு வழங்க வேண்டிய மானிய நிதியுதவியை பட்டுவாடா செய்யும் முன், பள்ளிகளில் முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும் என, மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1n7lir8j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மறு நியமனம் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு அரசின் அனுமதி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை பதிவேட்டை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்படும் சுயநிதி பிரிவு, உதவி பெறும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். பள்ளிகளின் அங்கீகாரம், தற்காலிக அங்கீகாரம் ஆகியவற்றை சோதித்து, தொடர் அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அங்கீகாரம் நீட்டிக்கப்படாத பள்ளிகளுக்கு, கற்பித்தல் மானியத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பாரதி
ஜன 30, 2024 13:36

அனுப்ப வேண்டிய லஞ்சத்தை அனுப்பலன்னா, உயர்த்த வேண்டிய லஞ்சத்தை உயர்த்தலன்னா , வர்ற பிரச்சனைகள் இதெல்லாம். புத்தி உள்ளவங்க புரிஞ்சுக்கோங்க.... பொழச்சிக்குங்க...


தத்வமசி
ஜன 30, 2024 15:33

மைண்டு வாய்ஸ்நு நினைச்சி உரக்க பேசுகிறீர்கள். உங்களை ஆட்சியில் நடப்பதை கூறுகிறீர்கள். அங்கே உங்கள் ஆட்சி இல்லை. இது காறும் நடந்து வரும் பழக்கத்தை சீர் செய்ய நினைக்கிறார்கள். நீங்கள் மீண்டும் ஊழலைப் பற்றி பேசுகிறீர்கள். இவர்கள் ஆட்சிக்கு வரும் முன் எல்லாம் சரியாக இருந்ததாக பேசக்கூடாது. தொடக்கமே அங்கிருந்து தான். இன்று புரையோடிக் போன ஊழலை சரி செய்ய நினைக்கிறார்கள். மனம் இருந்தால் துணை நில். இல்லை விலகி இருக்கவும்.


Sundhar
ஜன 30, 2024 08:43

அப்படின்னா இவ்வளவு காலமா தணிக்கை பண்ணலையா?


Raa
ஜன 30, 2024 11:08

கைக்கு காசு இல்லாதபோதுதான் தணிக்கை செய்யவேண்டும் என்ற எண்ணமே வரும். இருப்பதெல்லாம் அவர்கள் கல்வி நிறுவனங்கள் தான்... என்னத்த தணிக்கை செய்து... எந்த கல்வியை வளர்ப்பர் என்று தெரியவில்லை.


libra
ஜன 30, 2024 07:45

பெருந்தலைவர் காமராஜர் அவர்களை புறக்கணித்தால் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டது... இந்த கேடுகெட்ட தேவையிலாத புடுங்கப்பட வேண்டிய ஆணி திராவட என்ற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும்... முதலில் கருணா பின்பு ஸ்டாலின் அதற்கு அப்புறம் உதய் இப்போ இன்பா அதற்க்கு பிறகு இன்பா பிள்ளை பேரன் என்ற சுழற்சியை நிறுத்துங்கள்... அப்புறம் தான் மக்களுக்கு கல்வி அறிவு பெற்று உண்மையான ஞானம் பிறக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை