உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிளாம்பாக்கம் பஸ் நிலைய பிரச்னைகள் தீர்க்கப்படும்: ஸ்டாலின் பதில்

கிளாம்பாக்கம் பஸ் நிலைய பிரச்னைகள் தீர்க்கப்படும்: ஸ்டாலின் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடர்பாக சிறுசிறு பிரச்னைகள் மட்டுமல்ல, பெரும்பெரும் பிரச்னைகளும் இருந்திருக்கிறது; அதையெல்லாம் தீர்த்து வைத்துதான் திறந்திருக்கிறோம். ஏதேனும் பிரச்னை இருந்தால் அதையும் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம்'' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.புதிதாக திறந்துவைக்கப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாமை போன்ற பல பிரச்னைகளை முன்வைத்து சட்டசபையில் இன்று (பிப்.,13) விவாதிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான இ.பி.எஸ் பேசுகையில், ''கிளாம்பாக்கம் பஸ் நிலைய பிரச்னை குறித்து பயணிகள் சொல்லும் கருத்தின் அடிப்படையில் தான் அறிக்கை வெளியிட்டோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9t6ojgnv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவிட் காரணமாக பஸ் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள பஸ் நிலையம், முழுமையாக பணி முடிந்த பிறகு திறந்திருந்தால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும், இப்போது வரக்கூடிய சிறுசிறு பிரச்னைகள் எல்லாம் தீர்க்கப்பட்டிருக்கும், இந்த விவாதமே நடந்திருக்காது'' என்றார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''எதிர்க்கட்சி தலைவர்கள் சொல்வது போல சிறுசிறு பிரச்னைகள் மட்டுமல்ல பெரும்பெரும் பிரச்னைகளும் இருந்திருக்கிறது; அதையெல்லாம் தீர்த்து வைத்து தான் திறந்திருக்கிறோம். இன்னும் ஏதேனும் பிரச்னை இருந்தால் சொல்லுங்கள், நேரடியாக வாருங்கள் அழைத்து செல்கிறோம். நீங்கள் சொல்லும் குறைகள் இருந்தால் அதனை தீர்த்து வைக்க காத்திருக்கிறோம். எனவே இத்தோடு இந்த பிரச்னையை முடித்துக்கொள்ளுங்கள்'' என பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Ramesh Sargam
பிப் 14, 2024 00:49

நான் இப்பொழுது அமெரிக்காவில் உள்ளேன். இங்கு இப்பொழுது பகல்மணி 1.20 (pm). ஆனால் சென்னையில் இப்பொழுது இரவு 12.45 (am). இருந்தாலும் நான் இங்கு அமெரிக்காவில் செய்திகளுக்கு தெரிவிக்கும் கருத்துக்களை, உடனுக்குடன் தணிக்கை செய்து வெளியிடுகின்றனர் தினமலர் பத்திரிகை ஆசிரியர்கள். இரவு, பகல் என்று பாராமல் எந்நேரமும் வாசகர்களின் கருத்துக்களை பதிவு செய்தும் தினமலர் பத்திரிகை ஆசிரியர் குழுவிற்கும், நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றியை இந்நேரம் நான் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.


Ramesh Sargam
பிப் 13, 2024 23:57

ஏதேனும் பிரச்னை இருந்தால் அதையும் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம்... அடப்பாவாமே, 'ஏதேனும்'. அப்படி என்றால் தினம் தினம் பத்திரிகைகளில் மக்களின் மனக்குமுறல் என்ன பொய் செய்தியா? ஏன் இப்படி ஒரு பிரச்சினையும் இல்லாத மாதிரி, முதல்வர் இப்படி வாய் நிறைய பொய் பேசுகிறார். இப்படியே பொய் பேசிட்டிருந்தால், அப்புறம் வாயி அந்த ஷரத் பவார் வாயி மாதிரி கோணிக்கும். ஆமாம், சொல்லிப்புட்டேன்...


Sivagiri
பிப் 13, 2024 20:43

பிளான் போட்டு கொடுத்தவருக்கும் , அதை அப்ரூவல் செஞ்சவருக்கும் , பஸ்ஸ்டாண்ட் வாசலில் நிறுத்தி மாலை போட்டு ஸ்பெஷல் மரியாதை செய்ய வேண்டும் , , ஆனால் அதற்கு பதிலாக யாரோ ஒரு சிலையை வைத்து விட்டார்கள் - பொருத்தம்தான் . . .


Sivagiri
பிப் 13, 2024 20:43

மாநகர பேருந்துகளை நேராக பேருந்து நிலையத்தின் உள்ளே உள்ள மெயின் வாசலில் பயணிகளை இறக்கி விட்டு , பின் அதற்குரிய நிறுத்தத்தில் சென்று நிறுத்த வேண்டியதுதானே ? அதை செய்யாமல் - ஜுமான்ஜி விளையாட்டு போல - மாநகர பேருந்தில் இருந்து இறங்கி - - பெட்டி, படுக்கைகளை தூக்கிக்கொண்டு குழந்தை-குட்டிகளை இழுத்துக் கொண்டு , வயசானவங்களை திட்டிக் கொண்டே இழுத்துக் கொண்டு - தேவையே இல்லாமல் எதற்காக , எதோ சுரங்கத்தில் இறங்கி பின் , எதோ நகரும் படிக்கட்டில் தட்டு தடுமாறி ஏறி - பக்கத்தில் வருபவரை தள்ளி விட்டு - பின்பும் கொஞ்ச தூரம் நடந்து சென்று பின் , மீண்டும் ஒரு பத்து படிக்கட்டுகள் ஏறி - - அப்புறமும் நடந்து சென்று பிளாட்பாரங்களுக்கு எந்த வாசல் வழியாக செல்வது என்பதை தெரியாமல் ஒரு மூன்று நான்கு தடவை சுற்றி சுற்றி கும்பிடு போட்டு - பிளாட்பாரத்திற்கு போகும் வழியை கண்டு பிடித்து - - பின் , எந்த ஊர் வண்டிகள் எந்த பிளாட்பாரம் என்று அண்ணாந்து பார்த்து சுற்றி சுற்றி வந்து அங்கங்கே பல பேரை முட்டி மோதி - - பிளாட்பாரத்தை கண்டு பிடித்து அங்கே எத்தனையாவது நம்பரில் நம்ம ஊருக்கு பேருந்து நிற்கும் என்று மறுபடியும் அண்ணாந்து பாத்துக்கிட்டே பல பேரிடம் இடி வாங்கி - - சென்று பார்த்தால் - - உடனே ஒண்ணுக்கு வந்துடும் , அப்புறம் அதற்கு தேடி போயிட்டு வந்தால் , பஸ் போயிடும் அப்போது வாயில் வரும் வசவுகள் எல்லாம் யாருக்கு போகும் ? பிளான் போட்டு கொடுத்தவனுக்கும் , அதை அப்ரூவல் செஞ்சவனுக்கும் , பஸ்ஸ்டாண்ட் வாசலில் நிறுத்தி மாலை போட்டு ஸ்பெஷல் மரியாதை செய்ய வேண்டும் , , ஆனால் அதற்கு பதிலாக யாரோ ஒரு சிலையை வைத்து விட்டார்கள் - பொருத்தம்தான் . .


Muralidharan S
பிப் 13, 2024 19:36

எல்லா ஊரிலேயும் வெளியூர் போறதுக்கு பஸ் ஸ்டாண்ட்–க்கு போவாங்க... ஆனா சென்னை வாசிங்க மட்டும் பஸ் ஸ்டாண்டுக்கு போகறதுக்கே வெளியூர் போகணும்.. மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க அங்கே கொண்டு போனீங்க.. சரி.. அங்கே மக்கள் எப்படி போய்வர முடியும்.. அதற்க்கு மெட்ரோ ரயில் சேவை , எலக்ட்ரிக் ரயில் நிறுத்தம் இதை ரெண்டையும் ஏற்படுத்திவிட்டு ஊருக்கு வெளியே எடுத்து சென்று இருந்தால், ஒரு பிரச்சினையும் இருந்து இருக்காது.. இதை எல்லாம் விட ஒரு படி மேலே சென்று, மக்களுக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படவே இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சட்டசபையில் கூசாமல் சொல்லுகிறார்.... திமுகவிற்கு ஒட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேண்டும், இதற்கு மேலும் வேண்டும்..


DVRR
பிப் 13, 2024 17:52

எதிலும் எவ்வழியிலும் வெறும் திருட்டு திராவிட மாடல் தான்??? இந்த கீழ்பாக்கம் (கிளாம்பக்கம்) பஸ் நிலையம் திறந்த போது என்ன சொன்னாய் குழந்தாய்???இது எல்லாவிதத்திலும் மேம்படுத்தப்பட்டு உபயோகத்திற்கு வருகின்றது என்றாய்???இது தான் அந்த மேம்படுத்தப்பட்ட லட்சணமா??


திகழ்ஓவியன்
பிப் 13, 2024 19:37

கலைஞர் பேர் பிடிக்கவில்லை எங்களுக்கு கூட தான் மோடி ஆட்சி பிடிக்கவில்லை


RAMAKRISHNAN NATESAN
பிப் 13, 2024 17:28

துக்ளக் மன்னன் ..........


mrsethuraman
பிப் 13, 2024 17:03

கோயம்பேடு நிலையத்தை முழுவதுமாக மூடக்கூடாது . கோயம்பேடு பஸ் நிலையமும் கிளம்பாக்கமும் சரியான விகிதத்தில் ஒருங்கிணைந்து போக்குவரத்தை கையாளவேண்டும் .உதாரணத்திற்கு டிராபிக் அதிகமில்லாத இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை புறப்படும் பஸ்கள் கோயம்பேட்டிலிருந்து புறப்படலாம் .அதே வேளையில் சென்னை நோக்கி வரும் பஸ்களும் கோயம்பேடு வரை அனுமதிக்க படலாம் .விழா காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்க கேளம்பாக்கத்தை உபயோகித்துக்கொள்ளலாம் . கேளம்பாக்கத்திற்கு மெட்ரோ வசதி வரும் வரை இம்மாதிரியான சில வழிமுறைகள் தேவை .


jayvee
பிப் 13, 2024 16:56

வெட்கத்தை விட்டு மோடியிடம் கேளுங்கள்.. அவர் அங்கே EMU ரயில்கள் நிற்க ஆவண செய்வார்..


GANESUN
பிப் 13, 2024 16:41

ஆக, குடுக்கல் , வாங்கல் எல்லாம் முடிச்சாச்சு. இனி, இத்தோடு இந்த பிரச்னையை முடித்துக்கொள்ளுங்கள்...ஆமா...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை